கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராகுலின் டீசர்ட் வெளிநாட்டு பிராண்ட்டா? நீங்க வேற! அது திருப்பூர்ல வாங்கினது!.. கே எஸ் அழகிரி

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: ராகுல் காந்தியின் டீசர்ட் திருப்பூரில் வாங்கியது என்றும் அதன் விலை ரூ 40 ஆயிரம் கிடையாது என்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே. எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சியை இழந்துள்ளது. அது போல் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை.

பாஜக ஆட்சிக்கு எதிராக எத்தனை பிரச்சாரங்களை காங்கிரஸ் கட்சி முன் வைத்தாலும் அது எடுபடவில்லை. இதற்கு காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார்.

டீ சர்ட் பர்பெர்ரி சரி! அப்படியே ராகுலின் ஷூ பிராண்டையும் ரேட்டையும்... பாஜகவை கலாய்த்த நெட்டிசன்கள் டீ சர்ட் பர்பெர்ரி சரி! அப்படியே ராகுலின் ஷூ பிராண்டையும் ரேட்டையும்... பாஜகவை கலாய்த்த நெட்டிசன்கள்

ஒருங்கிணைக்க

ஒருங்கிணைக்க

இதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவும் கட்சியை வலுப்படுத்தவும் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கியுள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்த யாத்திரையை அவர் மேற்கொள்ளவிருக்கிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை தற்போது கேரளாவை அடைந்துள்ளது.

வரவேற்பு

வரவேற்பு

ராகுல் காந்திக்கு செல்லும் இடமெல்லாம் வரவேற்பு கிடைக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸின் நடைபயணத்தை பாஜக கிண்டல் செய்தும் விமர்சித்தும் வருகிறது. இறந்து போன காங்கிரஸ் கட்சியை எப்படி உயிர்பிக்க முடியும் என பாஜக வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியிருந்தார்.

வெளிநாட்டு நிறுவன டீசர்ட்

வெளிநாட்டு நிறுவன டீசர்ட்

இந்த நிலையில் ராகுல் காந்தி வெளிநாட்டு நிறுவனத்தின் டீசர்ட்டை அணிந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிலும் ராகுல் காந்தி அணிந்திருக்கும் டீ சர்ட்டின் விலை ரூ 41 ஆயிரம் என்று விலை பட்டியலுடன் பாஜக டிரென்ட்டாக்கி வந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சியும் பதிலடி கொடுத்து வந்தது.

திருப்பூரில் வாங்கியது

திருப்பூரில் வாங்கியது

இந்த நிலையில் ராகுல் அணிந்துள்ள டீ சர்ட் திருப்பூரில் வாங்கியது என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ராகுல் காந்தி அணிந்திருக்கும் டீ சர்ட் திருப்பூரில் வாங்கப்படட்து. நடைபயணத்திற்காக 20 ஆயிரம் டீ சர்ட் திருப்பூரில் ஆர்டர் கொடுத்தோம். இதில் தொண்டர்கள் பயன்படுத்தும் டீசர்ட்களில் தலைவர்களின் புகைப்படங்கள் உள்ளன. ராகுல் காந்திக்காக 4 டிசர்ட்கள் புகைப்படங்கள் இல்லாமல் அச்சடிககப்பட்டன. அதன் விலை ரூ 40 ஆயிரம் இல்லை. 4 லட்சம் ரூபாயும் இல்லை என கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

English summary
TN congress committee president K.S.Alagiri says that The T shirt which was wore by Rahul, not brought in Foreign country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X