Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி லட்டு சாப்பிட ஆசையா?.. இனி கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலிலும் கிடைக்கும்!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: திருப்பதி லட்டு சாப்பிட ஆந்திராவிற்கு சென்று திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு போக வேண்டியதில்லை. கன்னியாகுமரியில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கும் திருப்பதி லட்டு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். பல மாநில மக்களும் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

ஏழுமலையானை தரிசனம் செய்ய திருப்பதி செல்ல முடியாத பக்தர்களுக்காகவே சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல ஊர்களில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாசலபதி கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த கோவில்களுக்கும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் கொடுப்பது போலவே லட்டு பிரசாதம் வழங்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

கன்னியாகுமரி வெங்கடாசலபதி

கன்னியாகுமரி வெங்கடாசலபதி

கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி தேவஸ்தான வெங்கடாசலபதி கோவிலில் லட்டு வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, நேற்று முதல் லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்காக முதல் கட்டமாக திருப்பதியில் இருந்து 3 ஆயிரம் லட்டுகள் கொண்டு வரப்பட்டன. இது தவிர 1,000 இலவச லட்டுகளும் திருப்பதியில் இருந்து கொண்டு வரப்பட்டன.

லட்டு பிரசாதம்

லட்டு பிரசாதம்

கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் முதல் முறையாக லட்டு விற்பனையை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன், சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய அறங்காவலர்கள் மோகன்ராவ், ராஜேந்திரகுமார், யுவராஜ், கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ஆய்வாளர் சாய் கிருஷ்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் திருப்பதியைப் போல் தினமும் லட்டு விற்பனை நடைபெறும் என்றும், ஒரு லட்டின் விலை ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

கடற்கரையில் வெங்கடாசலபதி கோவில்

கடற்கரையில் வெங்கடாசலபதி கோவில்

கன்னியாகுமரி கடற்கரையையொட்டி விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 2010ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.22.5 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டது. கோயில் கட்ட விவேகானந்தா கேந்திர நிர்வாகம் 5.5 ஏக்கர் நிலத்தை வழங்கியது. 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் பூமி பூஜையுடன் கோயில் கட்டும் பணி தொடங்கியது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெங்கடாசலபதி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வெங்கடாஜலபதி சந்நிதி, பத்மாவதி தாயார் சந்நிதி

வெங்கடாஜலபதி சந்நிதி, பத்மாவதி தாயார் சந்நிதி

கோயில் திருப்பணிகள் நிறைவடைந்த நிகையில் இன்று கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேக விழாவுக்கு தமிழகம், ஆந்திரா, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். கன்னியாகுமரி திருப்பதி கோயிலில் வெங்கடாஜலபதி சந்நிதி, பத்மாவதி தாயார் சந்நிதி, ஆண்டாள் சந்நிதி, கருட பகவான் சந்நிதி ஆகியவை உள்ளன. கருவறையில் வெங்கடாஜலபதி பாதத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி சித்திரை விஷூவை முன்னிட்டு அற்புத சூரியஒளி விழும் வகையில் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவம், புஷ்கரணி தீர்த்தவாரி, ரத உற்சவம் உள்ளிட்ட விழாக்கள் அதே நாட்களில் கன்னியாகுமரி திருப்பதி கோயிலிலும் நடைபெறுகிறது.

என்னென்ன வசதிகள்

என்னென்ன வசதிகள்

இந்தக் கோயிலின் கீழ்தளத்தில் ஸ்ரீனிவாச கல்யாண அரங்கம், தியான அரங்கம் மற்றும் அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. இதுதவிர தேரோடும் 4 மாட வீதிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்தகட்டமாகக் கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் தங்கும் வீடுகள், முடிகாணிக்கை செலுத்தும் இடம், அன்னதான மண்டபம், கார் பார்க்கிங் வசதி, கழிப்பறை வசதி, இணைப்பு சாலைகள், அலங்கார தோரண நுழைவு வாயில், கோசாலை, தெப்பக்குளம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து வரவழைக்கப்பட்ட லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+