கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

100, 500க்கே அல்லாடும் போது.. 500 கோடிக்கு எம்எல்ஏவை வாங்குறாங்க! இலங்கை நிலைமைதான்! சுளீர் ஜோதிமணி

Google Oneindia Tamil News

கரூர் : மத அரசியல் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி நிலையைப் போல இந்தியாவிலும் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாகவும், இந்திய பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமான நிலையை எட்டி வருகிறது என பாஜக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Recommended Video

    Sri Lanka நிலைமை தான் India-வுக்கும் - Karur Jothimani குற்றச்சாட்டு

    கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் தலைமையில் தனியார் அரங்கில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, மூன்று சக்கர ஸ்கூட்டர், மூன்று சக்கர சைக்கிள், பிரெய்லி கருவிகள் உள்ளிட்ட உதவி உபகரணங்களை வழங்கினார்.

    முடியெல்லாம் நரச்சு போச்சு! மருதாணி போடுங்க அக்கான்ணு சொன்னாங்க! முதலமைச்சரை சிரிக்க வைத்த ஜோதிமணி! முடியெல்லாம் நரச்சு போச்சு! மருதாணி போடுங்க அக்கான்ணு சொன்னாங்க! முதலமைச்சரை சிரிக்க வைத்த ஜோதிமணி!

    எம்.பி ஜோதிமணி

    எம்.பி ஜோதிமணி

    அப்போது செய்தியாளர்களை சந்தித்த எம்.பி ஜோதிமணி,"மத அரசியல் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி நிலையைப் போல இந்தியாவிலும் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இந்திய பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமான நிலையை எட்டி வருகிறது.

     பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    தற்போதைய சூழ்நிலையில் பிரதமர் மோடி அவர்களின் வயதை விட ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே போகிறது. இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் பொருளாதாரம், மக்களின் பிரச்சினை உள்ளிட்டவற்றை பேசுவதை விட மதம் மற்றும் அது சார்ந்த வெறுப்பு அரசியலையே பேசும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

     வேலையின்மை

    வேலையின்மை

    இந்தியா அதிவேகமான வளர்ச்சியில் உள்ளதாக தெரிவிக்கும் சர்வே அனைத்தும் செயற்கையாக உருவாக்கப்படுகிறது. எக்கனாமிக் டைம்ஸ், எகனாமிக்ஸ் ஃபோரம் உட்பட மத்திய அரசு சர்வே கூட இந்தியா வளர்ச்சி பாதையில் செல்வதாக இதுவரை குறிப்பிடவில்லை. மத்திய அரசின் சர்வே கூட இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலையின்மை இருப்பதாக தெரிவிக்கிறது.

    விலை பேசி வாங்குகின்றனர்

    விலை பேசி வாங்குகின்றனர்

    சாதாரண இந்திய குடிமகன் 100, 500 ரூபாயை பார்ப்பதற்கு அதிகம் போராடும் சூழ்நிலையில் பாஜக மட்டும் சட்டமன்ற உறுப்பினர்களை 100 கோடி 500 கோடி ரூபாய்க்கு விலை பேசி வாங்குகின்றனர். பாஜகவின் மோடி அரசும், ஆர் எஸ் எஸ்-ம் திட்டமிட்டு இந்திய பொருளாதாரத்தை வீழ்ச்சி அடைய செய்கின்றனர்" என்று பேசினார்.

    English summary
    Congress Member of Parliament Jothimani has severely criticized India's economic decline due to religious politics, which is similar to Sri Lanka's economic decline.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X