கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பள்ளி சுவற்றில் பிறந்த நாள் போஸ்டர்.. திமுக எம்எல்ஏ செய்த சூப்பர் காரியம்.. குளித்தலையில் ஆச்சர்யம்

Google Oneindia Tamil News

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சுவற்றில் ஒட்டப்பட்ட தனது பிறந்தநாள் போஸ்டரை தானாக முன்வந்து எம்எல்ஏ இரா.மாணிக்கம் அகற்றி உள்ளார்.

ஆட்சியில் உள்ள கட்சியாக இருந்தாலும், ஆட்சியில் இல்லாமல் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி போஸ்டர்கள் ஒட்டுவதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல.

தங்கள் பெரிய தலைவர்கள் விசுவாசிகள் என்பதையும், முக்கிய தலைவர்களின் ஆதரவாளர்கள் என்பதை மக்களிடம் காட்டிக்கொள்வதற்காக அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டுவது அதிகமாக உள்ளது. முன்பு பிளக்ஸ் பேனர்கள் வைத்தார்கள். அதற்கு தடை உள்ள காரணத்தால் முன்பு போல் பேனர்கள் வைப்பது இல்லை.

இந்தியாவிலேயே 'சென்னை' தான் டாப்.. படுவேகமாக நடைபெறும் வேக்சின் பணி.. மாநகராட்சியின் சூப்பர் ஆக்ஷன்இந்தியாவிலேயே 'சென்னை' தான் டாப்.. படுவேகமாக நடைபெறும் வேக்சின் பணி.. மாநகராட்சியின் சூப்பர் ஆக்ஷன்

இமேஜ் உயரும்

இமேஜ் உயரும்

ஆனால் இப்போது பெரிய சைஸ் கலர் போஸ்டர்களில கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். போஸ்டர்களில் தங்கள் கட்சி தலைவர்களின் படங்கள், அதற்கு கீழ் போஸ்டருக்கு செலவு செய்பவரின் படம் என்று இடம் பெற்றிருக்கும். இதை பார்க்கும் பொதுமக்கள் தங்களை மதிப்பார்கள். தங்கள் இமேஜ் உயரும் என்ற எண்ணத்தில் போஸ்டர்களில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதாவது அரசியல் அடிநாதமே போஸ்டர்கள் தான் என்ற நிலைமை காணப்படுகிறது,

பிறந்த நாள் போஸ்டர்

பிறந்த நாள் போஸ்டர்

இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சுவற்றில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கத்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். பள்ளி சுவற்றில் ஆளும் கட்சி (திமுக) எம்எல்ஏவின் போஸ்டர்கள் என்று பரபரப்பு எழுந்து கொண்டிருந்தது.

இரா.மாணிக்கம் கோபம்

இரா.மாணிக்கம் கோபம்

இந்நிலையில் அந்த வழியாக காரில் வந்த குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம், காரை விட்டு இறங்கியதுடன். இதெல்லாம் தனக்கு பிடிக்காது என்று ஆதரவாளர்களை கண்டித்ததுடன் பள்ளி சுவற்றில் போஸ்டர்களை ஒட்டியதை கண்டு கோபப்பட்டார்.

குளித்தலையில் ஆச்சர்யம்

குளித்தலையில் ஆச்சர்யம்

சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம் அங்கேயே நின்று அத்தனை போஸ்டர்களையும் கிழித்து எறிய சொன்னார். அரசு சார்ந்த அலுவலகங்கள் முன்பு விளம்பர போஸ்டர்களை ஒட்டக்கூடாது என கட்சியினர்களிடம் எடுத்துரைத்தார். பின்னர் எம்.எல்.ஏ அலுவலகத்தில் தனது பிறந்தநாளையொட்டி 100 பேர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி, எளிமையாகக் கொண்டாடினார். பிறந்த நாள் போஸ்டரை எம்எல்ஏவே கிழித்தது குளிததலை மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

English summary
karur: kulithalai MLA manikkam who tore down his birthday poster pasted on the govt school wall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X