''நீட் தேர்வு என்னும் அநீதியை எதிர்க்க இதுதான் சரியான வழி''.. காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி யோசனை!
கரூர்: நீட் தேர்வுக்கு எதிரான அநீதிதியை போர் குணத்துடன் எதிர்கொள்வோம். இதற்கு தற்கொலை தீர்வாகாது என்று கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்தார். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியின் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்டு 3 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் 5 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டரை வழங்கினார்.

தீர்மானம்
இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய ஜோதிமணி எம்.பி கூறியதாவது:- ஒரு தேர்வு மாணவர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்காது. மாணவர்களுக்கு தகுதி இருக்கும்போது அதை நிறைவேற்ற வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு. நீட் தேர்வு தொடர்பாக ஒரு குழு அமைத்து, அந்த குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரிகள் அதிகம்
இந்த தீர்மானம் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த கட்டத்தில் கூட தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு ஒன்றிய அரசு அறிவிக்க முடியும். ஒன்றிய அரசு தவறை திருத்திக் கொண்டு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தேர்வு எழுதி இருக்கும் பட்சத்தில் மீண்டும் நீட் தேர்வு போன்ற தேர்வு தேவையில்லை. மருத்துவர் என்பது ஏழை மாணவர்களின் கனவு. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் அதிகம்.

படிக்க வையுங்கள்
தமிழகத்தில் உள்ள நிலங்களில், வரிகளில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவம் படிக்க வேண்டும். அதற்காக மற்ற மாநில மாணவர்கள் படிக்க வேண்டாம் என சொல்லவில்லை. பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.க தான் ஆளுகிறது. அங்கு மருத்துவக் கல்லூரிகள் அதிகளவில் கட்டி படிக்க வையுங்கள்.

போர்க்குணம்
மரண ஓலத்தால் நீட் தேர்வை எதிர்க்க முடியாது, போர் குணத்தால் மட்டுமே எதிர்க்க முடியும். அதற்கு நாங்கள் துணை நிற்போம். நீட் தேர்வு தமிழக மாணவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அநீதி, அநீதிக்கு எதிராக போர் குணத்துடன் எதிர் கொள்வோம், தற்கொலை தீர்வாகாது, இவ்வாறு ஜோதிமணி எம்.பி தெரிவித்தார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications