கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிருஷ்ணகிரி மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் விற்பனை தொடர்பாக சென்னை ஹைகோர்ட் உத்தரவு

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மூன்றாவது நபருக்கு விற்றது தொடர்பாக விசாரணை நடத்த இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தக் கோரியும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைத்துத் தரக் கோரியும் திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனரான ஆ..இராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Chennai HC orders about Krishnagiri Mariamman temple land

2001-ஆம் ஆண்டு கோவிலுக்காக வாங்கப்பட்ட நிலத்தை வெங்கட்ராமன் என்பவருக்கு விற்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதேபோல் பரம்பரை அறங்காவலர்களாக தேர்தலை நடத்தக் கோரி ஏ.ஆர்.திருப்பதி கவுண்டர் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ராதாகிருஷ்ணன் தரப்பில் பிரதான சாலையிலுள்ள கோவிலுக்கு தினமும் அதிக பக்தர்கள் வருவதால் காணிக்கைகள் அதிகளவில் வருவதாகவும், ஆனால் அவற்றை முறையாக செலவிடுவதில் அறங்காவலர்கள் இடையே நிர்வாகிகள் குழப்பம் நிலவுவதாகவும் வாதிடப்பட்டது.

திருப்பதி கவுண்டர் தரப்பில் கோவிலின் அன்றாட பணிகளை முறையாக மேற்கொள்ள எதுவாக அறங்காவலர்கள் குழுவின் தலைவர் தேர்தலை நடத்த வேண்டுமென வாதிடப்பட்டது. கோவில் செயல் அலுவலர் தரப்பில் கோவில் நிலம் விற்கப்பட்டது தொடர்பான பத்திரப்பதிவை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிகப்பட்டது.

கோவிலின் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, மொட்டை அழிப்பதற்கான இடம் ஆகிய இட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் அறங்காவலர்களால் குடமுழுக்கு நடத்தப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்துவதற்கான கூட்டத்தை டிசம்பர் 22ஆம் தேதி நடத்த உள்ளதாக தெரிவித்ததுடன், வழக்கு தொடர்ந்துள்ள திருப்பதி கவுண்டர் கடந்த 2019ஆம் ஆண்டே அறங்காவலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்டதால், வழக்கு தொடர அவருக்கு எவ்வித மாறுதலும் இல்லை என வாதிடப்பட்டது.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ்குமார் இரு வழக்குகளிலும் முன்வைக்கப்பட்டுள்ள பெரும்பாலானவற்றிற்கு தீர்வுகாணப்பட்டுள்ளதாக கோவில் செயல் அலுவலர் தாக்கல் செய்த அறிக்கை மூலம் தெளிவாவதாக தெரிவித்துள்ளார்.

அதேசமயம் கோவிலின் அசையா சொத்துக்கள் 2001 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் இத்தனை ஆண்டுகளாக அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்காமல்.இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். எனவே கோவில் சொத்துக்கள் மூன்றாம் நபர்களுக்கு விற்றது தொடர்பாக விசாரணை நடத்த தகுந்த அதிகாரியை நியமிக்கும்படி இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அவ்வாறு நியமிக்கப்படும் அதிகாரி, கோவிலின் முந்தைய கால வரவு செலவுகளையும் ஆய்வு செய்து, 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 20-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

English summary
Chennai Highcourt orders Hindu Endowment Religious department about Krishnagir mariamman temple land.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X