கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புத்தகங்களில் பாடமெடுத்த தலைமையாசிரியை! இறப்புக்குப் பின் புத்தகமாகவே ஆனார்! கிருஷ்ணகிரி நெகிழ்ச்சி!

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி : தனது உயிர் பிரிந்தாலும் மாணவர்களுக்கு பாடம் நடத்தவேண்டும் என்ற எண்ணத்தில் உடலை தானம் செய்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையின் உடல் மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் தலைமை ஆசிரியை செண்பகவல்லி சமூக அறிவியல் பாடப்பிரிவு நடத்தி வந்தார்.

மேலும் தலைமை ஆசிரியை ஆக பணிபுரிந்த இவர் கடந்த 2005ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஓபிஎஸ் கையில் 3+1 ஆப்ஷன்கள்.. டெல்லி கைவிட்டாலும்.. இருக்கு மெகா அஸ்திரம்.. ரிப்போர்ட் லீக் ஆகுமாம்! ஓபிஎஸ் கையில் 3+1 ஆப்ஷன்கள்.. டெல்லி கைவிட்டாலும்.. இருக்கு மெகா அஸ்திரம்.. ரிப்போர்ட் லீக் ஆகுமாம்!

ஆசிரியை செண்பகவல்லி

ஆசிரியை செண்பகவல்லி

ஆசிரியை செண்பகவல்லி கடந்த 2010ஆம் ஆண்டு தன் உடலை அடக்கம் செய்வோ அல்லது எனது மகன் மற்றும் பேரன்களிடம் ஒப்படைக்காமல் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வழங்கவேண்டும் என உயில் எழுதி வைத்திருந்தார். அதன்படி இன்று உடல்நலகுறைவால் உயிரிழந்த ஆசிரியை செண்பகவல்லி உடல் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 உடல் தானம்

உடல் தானம்

மேலும் இதே போல் ஆசிரியை செண்பகவல்லியின் கணவர் கணேசன் என்பவரும் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவராவார்.இவர் கடந்த 2017ஆம் ஆண்டு உயிரிழந்தார் . அவரது உடலும் தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நெகிழ்ச்சி

நெகிழ்ச்சி

ஊத்தங்கரை அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற இருவரும் உடல்தானம் செய்துள்ளது ஆசிரியர்களிடையேயும் மாணவர்களிடையேயும் பொதுமக்களுக்கு உடல் தானம் செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது .

பாராட்டு

பாராட்டு

மேலும் மனிதன் இறந்தால் சுடுகாட்டுக்கும் இடுகாட்டுக்கும் சமாதிக்கும் ஆசைப்படும் இவ்வுலகில் இவர்களின் உடல் மருத்துவ மாணவர்கள் பயன்பெறும் வகையில் கணவன் மனைவி இவர்களாகவே உயில் எழுதி வைத்து இறந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் புது வித சிந்தனையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The body of a retired head teacher who donated her body to teach students despite her death has been donated to a medical college.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X