• search
கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கள்ளக்காதல் கொடூரம்... நடுமண்டையில் ஒரே போடு.. கணவனை கொன்ற மனைவி.. திகிலில் கிருஷ்ணகிரி

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: கணவனை நடுமண்டையில் கூர்மையான ஆயுதத்தால் அடித்து கொன்ற மனைவி கைதானார்.. அவருடன் அவருடைய கள்ளக்காதலனும் கைதானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ளது குட்டூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் மாரப்பன்.. 45 வயதாகிறது.. இவர் ஒரு கூலித்தொழிலாளி... குடிக்கு அடிமையானவர்.. இவரது மனைவி பெயர் குண்டம்மாள்.. 35 வயதாகிறது.

Rain alert: அடுத்த 3 நாட்களுக்கு அடித்து நொறுக்கப்போகும் கனமழை.. தமிழகம் & கேரளாவுக்கு எச்சரிக்கைRain alert: அடுத்த 3 நாட்களுக்கு அடித்து நொறுக்கப்போகும் கனமழை.. தமிழகம் & கேரளாவுக்கு எச்சரிக்கை

இந்நிலையில், நேற்று முன்தினம் ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகில் உள்ள டாஸ்மாக் முன்பு மர்மமான முறையில் மாரப்பன் இறந்து கிடந்தார்...

மதுபோதை

மதுபோதை


இதுதொடர்பாக குண்டம்மாள், ராயக்கோட்டை போலீசில் புகார் மனு தந்தார்.. அதில் "என்னுடைய கணவருக்கு மதுபழக்கம் உள்ளது.. அடிக்கடி மது அருந்த பணம் கேட்பார்.. அதுபோலவே வந்து இப்போதும் பணம் கேட்டார். நான் கொடுக்கவில்லை... அதனால் வீட்டில் இருந்து வெளியே சென்றவர், வேறு யாரிடமோ பணம் வாங்கி அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு, போதையில் தவறி கீழே விழுந்து இறந்துவிட்டார்" என்று தெரிவித்திருந்தார்.

காயங்கள்

காயங்கள்

இந்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்... மாரப்பனின் சடலத்தை மீட்டனர்.. அப்போதுதான் அவருக்கு உடம்பில் காயங்கள் இருந்தது தெரிந்தது.. பிறகு உடலை பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... மாரப்பன் உடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது... அதில் மாரப்பன் தலையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

வாக்குமூலம்

வாக்குமூலம்

இதையடுத்து போலீசாரின் விசாரணை குண்டம்மாள் பக்கம் திரும்பியது.. அப்போதே அவர் உளற ஆரம்பித்துவிட்டார்.. முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னார்.. இதனால் போலீசாரின் சந்தேகம் அதிகமாகியது.. கிடுக்கிப்பிடி விசாரணையை நடத்தியபோதுதான், மொத்த உண்மையையும் குண்டம்மாள் சொல்லி விட்டார்.. இவருக்கு ஒரு கள்ளக்காதலன்.. அவர் பெயர் சிவசங்கர்.. 31 வயதாகிறது.. அவருடன் சேர்ந்துதான் கணவரை கொன்றதாக தெரிவித்தார்.. அது தொடர்பாக குண்டம்மாள் தந்த வாக்குமூலம் இதுதான்:

 குழந்தைகள்

குழந்தைகள்

"எங்களுக்கு கல்யாணமாகி 2 மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள்.. கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது... குடித்து விட்டு வந்து அடிக்கடி என்னிடம் தகராறு செய்வார்... இதனால் வெறுப்பு ஏற்பட்டது.. இந்த சமயத்தில், எனக்கும், சஜ்ஜலப்பட்டியை சேர்ந்த சிவசங்கர் என்பவருக்கும் ஒரு வருடத்துக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது... இது கள்ள காதலாக மாறியது.

சந்திப்பு

சந்திப்பு

சிவசங்கருக்கு திருமணமாகி விட்டது.. ஒரு ஒரு மகன் உள்ளான்... சிவசங்கர் என்னை அடிக்கடி தனிமையில் வந்து சந்திப்பார்.. உல்லாசமாக இருப்போம்.. இது ஒருநாள் என்னடைய கணவருக்கு தெரிந்துவிட்டது.. என்னை பல முறை கண்டித்தார்... இதனால் ஆத்திரமடைந்த நான், அவரை தீர்த்து விடலாம் என்று முடிவு செய்தேன்.. இதை சிவசங்கரிடமும் சொன்னேன்.. அதன்படி, கடந்த 17-ந் தேதி இரவு மது குடிப்பதற்காக வெளியே சென்ற எனது கணவரை, சிவசங்கர் அழைத்து சென்றார்...

கைது

கைது

பின்னாடியே நானும் சென்றேன்.. மது போதையில் இருந்த கணவரின் நடுமண்டையில் நான் இரும்பு கம்பியால் அடித்தேன்... இதில் அவர் அங்கேயே சரிந்து விழுந்து இறந்தார். பீறகு, தக்காளி மண்டி அருகில் டாஸ்மாக் கடை முன்பு, உடலை போட்டு விட்டு நாங்கள் வந்து விட்டோம். மறுநாள், அவரை காணோம் என்றும், கடைசியில் டாஸ்மாக் அருகில் இறந்துகிடந்ததாகவும், போலீசில் புகார் தந்தேன்" என்றார்.

English summary
Wife beats husband to death for illegal relationship and two arrested near Krishnagiri.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X