கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சந்தன கலர் சட்டை போட்ட தங்க பாலுவே.. ராகுல் பேச்சை மொழிபெயர்த்த புதிய நபர்.. சொதப்பலோ சொதப்பல்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆங்கில பேச்சை இன்று மொழி பெயர்த்தவரின் மொழி பெயர்ப்பு பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ராகுல் பேச்சை மொழிபெயர்த்த புதிய நபர்- வீடியோ

    கிருஷ்ணகிரி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆங்கில பேச்சை இன்று கிருஷ்ணகிரியில் மொழி பெயர்த்தவரின் மொழி பெயர்ப்பு பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து இருக்கிறது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் ஒரே நாளில் இன்று நான்கு இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரியில் அவர் பேசினார்.

    அதில் மோடி மீது கடுமையான விமர்சனங்களை ராகுல் காந்தி வைத்தார். ஆனால் ராகுல் காந்தி பேச்சின் மொழிபெயர்ப்பு பல விமர்சனங்களை சந்தித்துள்ளது.

    15 பேரின் நலனுக்காக ஆட்சி செய்கிறார் மோடி.. லிஸ்ட் போட்ட ராகுல்.. கிருஷ்ணகிரியில் அதிரடி பேச்சு! 15 பேரின் நலனுக்காக ஆட்சி செய்கிறார் மோடி.. லிஸ்ட் போட்ட ராகுல்.. கிருஷ்ணகிரியில் அதிரடி பேச்சு!

    தங்கபாலு இல்லை

    தங்கபாலு இல்லை

    இந்த முறை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சை காங்கிரஸ் மூத்த உறுப்பினர் தங்கபாலு மொழிபெயர்க்கவில்லை, தங்கபாலு தற்போது கேரளாவில் வயநாடு தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதனால் அவர் இன்று ராகுல் உரையை மொழிபெயர்க்க வரவில்லை.

    அப்போது மோசம்

    அப்போது மோசம்

    ஏற்கனவே காங்கிரஸ் மூத்த உறுப்பினர் தங்கபாலு. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கன்னியாகுமரி பேச்சை மோசமாக மொழிபெயர்த்தார். ''நீங்க என்ன வேணா பேசுங்க, நான் எனக்கு பிடிச்சதை மட்டும்தான் பேசுவேன்'' என்பது போல தவறுதலாக மொழிபெயர்த்து இருந்தார் தங்கபாலு. இது இணையத்தில் டிரெண்ட் ஆனது.

     பழனி துரை யார்?

    பழனி துரை யார்?

    இந்த நிலையில்தான் தங்க பாலுக்கு பதிலாக தற்போது புதிதாக காந்திகிராம் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் பழனி துரை ராகுல் காந்தியின் பேச்சை மொழி பெயர்த்தார். ஆனால் இவரது மொழி பெயர்ப்பும் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து இருக்கிறது.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    தொடக்கத்தில் பழனி துரை நன்றாகவே மொழி பெயர்த்து வந்தார். ஆனால் கொஞ்ச நேரத்தில் தவறுதலாக நிறைய கருத்துக்களை பேச தொடங்கினார். ராகுல் காந்தி சொல்வதற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத விஷயங்களை பழனி துரை பேசினார். தனக்கு தெரிந்ததை மட்டும் மொழி பெயர்த்துவிட்டு தனக்கு தெரியாததை அப்படியே விட்டுவிட்டார்.

    எல்லாம் கதை

    எல்லாம் கதை

    கல்லூரியில் மாணவர்கள் ''கதை அடிப்பது'' என்று சொல்வார்களே அப்படித்தான் இவர் தனது பேச்சில் ராகுல் காந்தி ஒன்று சொல்ல தான் ஒன்றை கதையாக கூறிக் கொண்டு இருந்தார். ஆனால் கீழே இருந்த மக்களோ ஏற்கனவே ராகுலின் ஆங்கில பேச்சை கேட்டுவிட்டு, புரிந்துகொண்டு அதற்கே கைதட்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களும் தமிழ் மொழி பெயர்ப்பு தவறாக செய்யப்படுகிறது என்பதை தெரிந்து குழப்பத்தில் அமர்ந்து இருந்தனர்.

    என்ன பிரச்சனை

    என்ன பிரச்சனை

    இந்த நிலையில் பழனி துரை பேசிக்கொண்டு இருக்கும் போதே அவருக்கு ராகுல் பேசியதை கேட்பதில் பிரச்சனை இருந்ததால் அவர் ராகுல் காந்திக்கு அருகில் நின்று பேசினார். சரியாக சொல்ல வேண்டும் என்றால் ராகுல் மேடையில் இருந்த ஒரு மைக்கில் ராகுலும் இன்னொரு மைக்கில் பழனி துறையும் அருகருகே நின்று பேசினார்கள்.

    பெரிய வரவேற்பு

    பெரிய வரவேற்பு

    பழனி துரையும் தங்க பாலு போலவே ராகுலின் முகத்தை பார்த்து பார்த்து உற்றுநோக்கி தவறாக பேசினார். ஆனால் பழனி துரைக்கு தன்னுடைய மேடையிலேயே இவ்வளவு நெருக்கமாக இடம் கொடுத்து ராகுல் பேச வைத்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. பலர் இதை பாராட்டி இருக்கிறார்கள்.

    English summary
    Congress Chief Rahul Gandhi's Tamilnadu rally speech translation has gone wrong once again.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X