இனி கனவில்தான் வீடு கட்ட முடியும்! கடன் வாங்குவதில் தான் தமிழகம் முதலிடம்.. கொதித்து பேசிய எடப்பாடி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, இந்தியாவில் கடன் வாங்குவதில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு ஆகிவிட்டது என்றும், கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் வீடு கட்டுவோர் இனி கனவில்தான் வீடு கட்ட முடியும் என்று பேசினார்.
தமிழகத்தில் முதற்கட்டமாக வரும் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளன. இன்று கிருஷ்ணகிரியில் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது எடப்பாடி கூறியதாவது:-

தமிழகத்தில் போதை பொருள், கஞ்சா விற்பனை, அமோகமாக நடைபெறுகிறது. திமுக கட்சி நிர்வாகிகளே போதைபொருளை அயல்நாட்டிற்கு கடத்த இருக்கும் போது எப்படி போதைப் பொருளை தடுக்க முடியும். போதைப்பொருள் கடத்தும் நபர்கள் உயர்ந்த பதவியில் இருப்பவர்களோடு நெருக்கமாக இருக்கிறார்கள்.
இப்படி இருக்கும் போது அவர்களை யார் போய் நெருங்க முடியும். திமுகவினர்தான் இந்த போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளசாராயம் குடித்து பலபேர் இறந்து விட்டனர். கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவர் இறந்து போனார் அவருக்கும் 10 லட்சம் கொடுக்கிறார்கள். இதுதான் வேடிக்கை. சிந்தித்து பாருங்கள்.
போதை பொருளை தடுக்க முடியவில்லை. இப்படிப்பட்ட அரசாங்கம் தேவைதானா.. எல்லா துறையிலும் முதன்மை வகிக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று ஸ்டாலின் பேசுவார். ஆனால், தமிழ்நாட்டில் நிலமை வேறு மாதிரியாக உள்ளது. ஊழல் செய்வதில் முதலிடம்... கஞ்சா, போதைப்பொருள் விற்பனை செய்வதில் முதலிடம்.
இந்தியாவில் கடன் வாங்குவதில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு. இதில் எல்லாம் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. ஆட்சிக்கு வரும் முன்பு எவ்வளவோ அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டார். வீட்டு வரி 100 சதவிகிதம் உயர்த்தப்பட்டு விட்டது. மின் கட்டணம் 52 சதவிகிதம் உயர்த்தி விட்டார்கள். வரி மேல் வரி போட்டு மக்களை விடியா அரசு வாட்டி வதைக்கிறது.
கட்டுமான பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டது. இதனால், வீடு கட்டுவோர் கனவில்தான் வீடு கட்ட முடியும். நனவில் வீடு கட்ட முடியாது. திமுக 10 சதவிகித அறிவிப்பை மட்டுமே நிறைவேற்றியுள்ளது. 90 சதவிகித அறிவிப்புகளை நிறைவேற்றவில்லை. கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் கொடுப்பேன் என்றார்கள்.. செய்தார்களா?.. பெட்ரோல், டீசல் விலை குறைப்பேன் என்று சொன்னார்கள்..
பெட்ரோல் மட்டும் 3 ரூபாய் குறைத்தார்கள்.. டீசல் குறைக்கவில்லை. இதனால் லாரி வாடகை உயர்ந்துவிட்டது. டீசல் விலை உயர்ந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். இப்படி, விடியா திமுக ஆட்சியில் எல்லா வகையிலும் விலை உயர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
-
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு! -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா












Click it and Unblock the Notifications