Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பறவையா பறக்குறோம்.. 4,500 கி.மீ தூரம் பறந்து.. எகிப்திலிருந்து இங்கிலாந்து வந்த பல்லி! வால் மிஸ்ஸிங்

பொதுவாக பல்லிகள் வெப்பமண்டல நாடுகளில் வாழும் இயல்புடையதாகும். இது குளிர் பிரதேசத்திற்கு வரும்போது சில சமயம் தகவமைத்துக்கொள்ளாமல் உயிரிழந்துவிடுகிறது.

Subscribe to Oneindia Tamil

லண்டன்: எகிப்து நாட்டிலிருந்து சுமார் 4,500 கி.மீ பயணித்து பல்லி ஒன்று இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்திற்கு வந்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்திலிருந்து பேக் செய்யப்பட்ட ஸ்ட்ராபெர்ரி பழங்கள் சமீபத்தில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த சூப்பா் மார்க்கெட்டிலிருந்து இளம்பெண் ஒருவர் ஸ்ட்ராபெர்ரிகளை தன்னுடைய வீட்டுக்கு வாங்கி வந்துள்ளார். வாங்கி வந்த பழங்களை பிரிட்ஜில் வைத்துவிட்டு தன்னுடைய வேலையை பார்த்துள்ளார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் இந்த பழங்களை வெளியில் எடுத்து சமைக்க ஆயத்தமாகியுள்ளார்.

அதில் இவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்திருக்கிறது. அதாவது இந்த ஸ்ட்ராபெர்ரி பாக்கெட்டில் பல்லி ஒன்று இருந்திருக்கிறது. இந்த பல்லி 'எகிப்திய கெக்கோ' எனும் வகையை சார்ந்ததாகும். இந்த ஸ்ட்ராபெர்ரியும் எகிப்திலிருந்துதான் வந்திருக்கிறது. இதனை பார்த்த இந்த பெண்மணிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஏனெனில் ஸ்ட்ராபெர்ரி முழுவதும் ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டிருக்கிறது. அப்படி இருக்யைில் இந்த பல்லி எப்படி இவ்வளவு நேரம் இதில் தாக்கு பிடித்தது? என்று அப்பெணிமணி கேள்வியெழுப்பியுள்ளார்.

எகிப்து டூ இங்கிலாந்து

எகிப்து டூ இங்கிலாந்து

எகிப்துக்கும் இங்கிலாந்துக்கும் சுமார் 4,500 கி.மீ தொலைவு இருக்கிறது. விமானத்தில் பயணித்தால் கூட சுமார் 10 மணி நேரம் ஆகும். அது மட்டுமல்லாது இந்த ஸ்ட்ராபெர்ரி இங்கிலாந்துக்கு வந்து சுமார் 2 நாட்கள் வரை ஆகியுள்ளன. அது வரை இந்த காற்று புகாத பேக்கட்டில் எப்படி இந்த பல்லி உயிருடன் டிராவல் செய்திருக்கும் என்பது புரியாத புதிராக இருக்கிறது. இதுகுறித்து ஸ்ட்ராபெர்ரியை வாங்கிய இளம்பெண் கூறுகையில், "நான் வாங்கும்போது இதனை கவனிக்கவில்லை. பின்னர் சமைக்க தயாராகும்போதுதான் இதனை கவனித்தேன். முதலில் இது சாதாரண பல்லி என்றுதான் நினைத்தேன்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

ஆனால் இதன் நிறத்தை பார்த்தபோதுதான் இது வித்தியாசமான பல்லி என்பதை உணர்ந்தேன். உடனே இந்த ஸ்ட்ராபெர்ரி பழங்களுடன் வாங்கிய மற்ற பழங்களையும் சோதனை செய்து பார்த்தேன். அது எகிப்திலிருந்து வந்திருந்தது. அப்போதுதான் இது எகிப்து பல்லி என்பதை உறுதி செய்தேன். இந்த பல்லி மிகவும் சிறியதாக இருந்தது. வெறும் 2.5 செ.மீ அளவுதான் இருந்தது. இதை கவனமாக வெளியில் எடுத்து ஒரு டப்பில் போட்டேன். அது அங்கிருந்து வெளியேற தீவிரமாக முயன்று வேகமாக ஓடியது. அதன் வாலை காணவில்லை. வரும் வழியில் எங்காவது துண்டாகியிருக்கும் போல. எப்படி இருப்பினும் இது பெரும் ஆச்சரியமான விஷயம்தான்" என்று கூறியுள்ளார்.

ஆய்வகம்

ஆய்வகம்

இதனையடுத்து அப்பெண்மணி விலங்கு நல சங்கமான 'ராயல் சொசைட்டி ஃபார் தி பிரவென்ஷன் ஆஃப் க்ரூல்டி டு அனிமல்ஸை' (RSPCA) அழைத்து இந்த பல்லி பற்றி கூறியுள்ளார். அவர்கள் இந்த பல்லியை வந்து பாதுகாப்பாக எடுத்துச் சென்றுள்ளனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு உயிரின ஆய்வகத்தில் பல்லி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது போன்று பல்லிகள் ஒரு நாட்டை விட்டு மற்றொரு நாடுகளுக்கு பயணிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் இங்கிலாந்தை சேர்ந்த வேறு ஒரு குடும்பம் ஒன்று கிரீஸ்க்கு சென்று திரும்பியிருந்தது.

இதேபோல

இதேபோல

இவர்களின் பெட்டியில் கிரீஸ் நாட்டை சேர்ந்த பல்லி ஒன்று ஒட்டிக்கொண்டே வந்திருக்கிறது. கிரீஸ் நாட்டுக்கும் இங்கிலாந்துக்கும் சுமார் 4,000 கி.மீ தொலைவு இருக்கும். ஆனால் இந்த பயணத்தில் பல்லிக்கு எதுவும் ஆகவில்லை. இதனையடுத்து இதே போல பல்லி RSPCA வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுவாக பல்லி வெப்பமண்டல நாடுகளில் அதிகம் வாழும். இவை குளிர் பிரதேசங்களுக்கு இடம் மாறும்போது அதீத குளிரை தாக்குபிடிக்க முடியாமல் இறந்து விடுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+