Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரிட்டன் பிரதமர் ரேஸ்.. முந்திய ரிஷி சுனக்கை ரகசியமாக சந்தித்த போரிஸ் ஜான்சன்.. பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டனின் அடுத்த பிரதமர் போட்டியில் முன்னணியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன் ஆகியோர் உள்ளனர். இதில் ரிஷி சுனக்கை போட்டியில் இருந்து விலகி கொள்ள போரிஸ் ஜான்சன் கூறுவதாக தகவல் வெளியான நிலையில் இருவரும் நேற்று சந்தித்து பேசினார்.

பிரிட்டன் பிரமராக இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து புதிய பிரதமருக்கான தேர்தல் நடந்தது. பல கட்டங்களாக தேர்தல் நடந்தது.

இதில் இறுதி போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கை வீழ்த்தி லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்றார். அதன்பிறகு லிஸ் ட்ரஸ் பிரதமாரானார்.

லிஸ் ட்ரஸ் ராஜினாமா

லிஸ் ட்ரஸ் ராஜினாமா

இந்நிலையில் பிரதமராக வெறும் 45 நாட்கள் மட்டுமே செயல்பட்ட லிஸ் ட்ரஸ் சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். பிரிட்டன் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அவரது தலைமையில் தாக்கல் செய்யப்பட்ட மினி பட்ஜெட் தான் இதற்கு காரணமாகும். இந்த பட்ஜெட்டில் பெரிய நிறுவனங்களுக்கான வரிகள் குறைக்கப்பட்ட நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான பிரிட்டன் கரன்சியான பவுண்ட்டின் மதிப்பு வீழ்ந்தது. பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி சென்றதால் வேறு வழியின்றி லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்தார்.

3 பேர் போட்டியிட முடிவு

3 பேர் போட்டியிட முடிவு

தற்போதைய நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலான நபர் தான் பிரிட்டனுக்கு பிரதமராக வேண்டியுள்ளது. இதனை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியினரும் உணர்ந்துள்ளனர். இதனால் லிஸ் ட்ரஸிடம் தோல்வியடைந்த ரிஷி சுனக்கிற்கு பிரதமராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இவருக்கு ஏராளமானவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் போட்டியிட உள்ளார். இதற்காக அவர் தனது விடுமுறையை பாதியில் முடித்துக்கொண்டு கரீபியனில் இருந்து பிரிட்டன் திரும்பி உள்ளார். பென்னி மோர்டன்ட்டும் இந்த போட்டியில் உள்ளார். இவர் லிஸ் ட்ரஸை எதிர்த்து பிரதமராக போட்டியிட்டபோது 3வது இடம் பெற்றார். இவர்கள் 3 பேரில் ஒருவர் தான் பிரிட்டன் பிரதமராகலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது வரை யாரும் பிரதமர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி வெளிப்படையாக கூறவில்லை. இருப்பினும் அதற்கான வேலைகளை துவங்கி உள்ளனர்.

மனுத்தாக்கலுக்கு நாளை கடைசி

மனுத்தாக்கலுக்கு நாளை கடைசி

இதற்கிடையே தான் பிரிட்டனின் அடுத்த பிரதமரை வரும் 28 ம் தேதிக்குள் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் துவங்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்களுக்கு குறைந்தபட்சம் 100 எம்பிக்களின் ஆதரவு தேவை. 100 எம்பிக்களின் ஆதரவு இருப்போர் மனுத்தாக்கல் செய்யலாம். கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மொத்தம் 357 எம்பிக்கள் உள்ள நிலையில் அதிகபட்சமாக 3 பேர் போட்டியிடலாம்.

ரிஷி சுனக் முன்னிலை

ரிஷி சுனக் முன்னிலை

தற்போதைய சூழலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு 100க்கும் அதிகமான எம்பிக்கள் ஆதரவு உள்ளன. இவருக்கு மொத்தம் 122 எம்பிக்களின் ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேவேளையில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும், இன்னொரு போட்டியாளராக உள்ள பென்னி மோர்டான்ட்டுக்கும் 100எம்பிக்களின் ஆதரவுடன் இருப்பதாக அவர்களின் ஆதரவாளர்கள் கூறிவ ருகின்றனர். ஆனால் இருவருக்கும் 100 எம்பிக்களின் ஆதரவு இல்லை எனவும், ரிஷி சுனக் தான் முன்னணியில் உள்ளதாகவும் செய்திதாள்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

போரிஸ் ஜான்சன் தீவிரம்

போரிஸ் ஜான்சன் தீவிரம்

இதற்கிடையே தான் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர், பிரதமர் பொறுப்பை மீண்டும் அடைய போரிஸ் ஜான்சன் தீவிரமாக உள்ளார். இதனால் தான் அவர் தரப்பில் இருந்து போட்டியில் இருந்து விலகி கொள்ளும்படி ரிஷி சுனக்கிற்கு தூது அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முந்தைய போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக ரிஷி சுனக் செயல்பட்டபோது இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது. இருப்பினும் கடைசியில் நிதி அமைச்சர் பொறுப்பை ரிஷி சுனக் ராஜினாமா செய்த நிலையில் தற்போது இருவரும் போட்டியில் முன்னணியில் உள்ளனர். இதனால் பிரிட்டன் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

ரிஷி சுனக்கிடம் பேச்சுவார்த்தை

ரிஷி சுனக்கிடம் பேச்சுவார்த்தை

இந்நிலையில் தான் நேற்று ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன் ஆகியோர் திடீரென்று சந்தித்து பேசினர். இதுதொடர்பாக ஏஎப்பி, பிபிசி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. போட்டியின்றி ஒருமனதாக பிரதமராக போரிஸ் ஜான்சன் விரும்பும் நிலையில் தான் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உட்கட்சி விவகாரம், பிரதமர் தேர்தல் பற்றி இருவரும் பல்வேறு விஷயங்களை விவாதித்துள்ளனர். இருப்பினும் இந்த சந்திப்பின்போது என்ன முடிவு செய்யப்பட்டது? எதை பற்றி பேசப்பட்டது? என்பது பற்றி ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் போட்டியில் இருந்து பின்வாங்கும்படி ரிஷி சுனக்கிடம் போரிஸ் ஜான்சன் கூறியிருக்கலாம் என கூறப்படுகிறது.

நாளை மனுத்தாக்கலுக்கு கடைசி

நாளை மனுத்தாக்கலுக்கு கடைசி

இதற்கிடையே மனுத்தாக்கலுக்கு நாளை கடைசிநாளாகும். 100 எம்பிக்கள் ஆதரவுடன் ஒருவர் மட்டுமே மனுத்தாக்கல் செய்தல் அவரே பிரிட்டனின் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்படுவார். மாறாக ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மனுத்தாக்கல் செய்தால் தேர்தல் நடத்தப்படும். அதன்படி நாளையே எம்பிக்களுக்கான முதல் கட்ட ஓட்டுப்பதிவு மதியம் 3.30 மணி முதல் 5.30 மணி வரை நடத்தப்பட்டு மாலை 6 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்பின் கட்சி உறுப்பினர்கள் ஓட்டளிக்கும் வகையிலான 2ம் கட்ட தேர்தல் அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு நடத்தப்படும். இதில் கட்சியின் 172,000 உறுப்பினர்களை ஆன்லைன் முறையில் ஓட்டளித்து அக்டோபர் 28ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு பிரதமர் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+