மெதுவாக சுழலும் பூமி.. பகல் நேரம் அதிகரிக்குதே! அப்போ நம்ம உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்?
லண்டன்: பூமி தன்னை தானே சுற்றிக் கொள்ளும் 24 மணி நேரத்தைத் தான் நாம் ஒரு நாள் என சொல்கிறோம். மனிதர்கள் செய்யும் சில பல மாற்றங்களால் இந்த பூமியின் சுழற்சி மெதுவாகி வருகிறதாம். இதனால் ஒரு நாள் என்பதன் நீளமும் அதிகரிப்பதாக வல்லுநர்கள் சொல்கிறார்கள். ஏன் இதுபோல நடக்கிறது.. இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
மனித செயல்பாடுகளால் ஏற்படும் காலநிலை மாற்றம், புவியின் சுழற்சியைக் கடந்த 3.6 மில்லியன் ஆண்டுகளில் இல்லாத வேகத்தில் குறைத்து வருகிறது. இதை ஆங்கிலத்தில் "figure skater effect" என்கிறார்கள். உருகும் துருவப் பனிக்கட்டிகளிலிருந்து நீர் நிலநடுக்கோட்டை நோக்கி மறுபகிர்வு செய்வதால் இது ஏற்படுகிறது. இதனால் புவியின் moment of inertia அதிகரித்து சுழற்சி வேகம் குறைகிறது.

பூமியின் சுழற்சி
கடந்த 2000 முதல் 2020 வரை, அதாவது 20 ஆண்டுகளில் இப்படி பூமி மெதுவாகச் சுற்றுவதால் பூமியின் பகல் நேரம் நூற்றாண்டுக்கு 1.33 மில்லி விநாடிகள் கூடியுள்ளது. இது பார்க்க மிக குறைந்த நேரம் போலத் தெரிந்தாலும். இதுபோல ஏற்படும் சின்ன சின்ன மாற்றமும் கூட பூமியில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
ஆய்வாளர்கள் சொல்வது
இது தொடர்பாக வியன்னா பல்கலைக்கழக பேராசிரியர் மோஸ்டஃபா கியானி ஷாவந்தி கூறுகையில், "இரு துருவங்களிலும் இருக்கும் பனிப்பாறைகள் வேகமாக உருகுகின்றன. இது கடலில் இருக்கும் நீர்மட்டத்தை உயர்த்தி, பூமியின் சுழற்சியைக் குறைத்து பகல் நேரத்தை அதிகரிக்கிறது. ஒரு பனிச்சறுக்கு வீரர் கைகளை விரிக்கும்போது மெதுவாகவும், கைகளை உடலுடன் ஒட்டி வைத்திருக்கும்போது வேகமாகவும் செல்வதைப் போன்றதுதான். கடந்த காலங்களிலும் பூமியின் சுழற்சி மெதுவாகி இருக்கிறது என்றாலும் அது இந்த வேகத்தில் பகல் நேரத்தை அதிகரிக்கக் காரணமாக இருந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை" என்றார்.
எந்தளவுக்கு மாற்றம்?
பூமியின் சுழற்சியைக் குறைக்கும் முதன்மைக் காரணமாக நிலவின் ஈர்ப்பு விசை இருக்கிறது. ஒரு நூற்றாண்டுக்கு ~2.4 மில்லி விநாடிகள் என்ற விகிதத்தில் பூமியின் சுழற்சியை நிலவின் புவி ஈர்ப்பு விசை மெதுவாக மாற்றுகிறது. ஆனால், 21ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் காலநிலை மாற்றமே பூமியின் வேகத்தை மெதுவாக்கும் முக்கிய காரணியாக மாறும். மில்லி விநாடி மாற்றங்கள் மனிதர்களுக்குப் பெரிய விஷயம் இல்லை என்றாலும், ஜிபிஎஸ், விண்வெளி மிஷன்கள், நிதி நெட்வோர்க் போன்ற தொழில்நுட்ப அமைப்புகளில் முக்கியமானதாக இருக்கிறது.
இது தொடர்பாக சூரிச் விண்வெளி புவிசார் அளவியல் பேராசிரியர் பெனடிக்ட் சோஜா கூறுகையில், "மனிதர்களின் செயல்பாடுகளால் பூமி வேகமான மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. கடந்த 3.6 மில்லியன் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நவீன காலநிலை மாற்றத்தால் பூமி மாறி வருகிறது. இப்போது நாட்களின் நீளம் அதிகரிப்பது கூட மனிதச் செயல்பாடுகளாலேயே ஏற்படுகிறது. இந்த ஒரு சில நொடிகள் என்பது சில நுட்பமான துறைகளைப் பாதிக்கும்" என்றார்.
மனிதர்களால் உணர முடியுமா!
மேலும், பூமியின் சுழற்சி குறைவது நேர அளவீட்டைப் பாதிக்கிறது. பகல் நேரம் அதிகரித்ததால், 2026ஆம் ஆண்டின் "எதிர்மறை லீப் விநாடி", 2029ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அணுக்களின் அதிர்வெண்களை அடிப்படையாகக் கொண்ட அணு கடிகாரங்களை நம்பியிருக்கும் ஜிபிஎஸ், விண்வெளி வழிசெலுத்தல் போன்ற கணினி அமைப்புகளுக்குத் துல்லியமான நேர அளவீடு மிக முக்கியம்.
அதேநேரம் இந்த மைக்ரோ நொடிகளை நம்மால் உணர முடியாது என்பதால் நம்மால் பெரிய மாற்றத்தை உணர முடியாது. மேலும், மனிதர்களின் உயிரியல் சுழற்சிகள், தூக்க முறைகள் ஆகியவற்றில் இது குறிப்பிடத்தக்கப் பாதிப்பை ஏற்படுத்தாது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். புவி வெப்ப மயமாதல் தொடர்ந்தால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பகல் நேரம் என்பது 2.62 மில்லி விநாடிகள் வரை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இது நேரக் கணக்கீட்டிற்குச் சவாலாக அமையும்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications