Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

''சும்மா பாத்துகிட்டு இருக்க மாட்டோம்..'' - ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்து போரிஸ் ஜான்சன் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: ரஷ்யா மீது இங்கிலாந்து பொருளாதார தடை விதிப்பதாக‌ இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

1991க்குப் பிறகு சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு, அதிலிருந்து வெளியே வந்தது உக்ரைன். ஆனாலும் மறைமுகமாக உக்ரைனைக் கட்டுப்படுத்தி வந்தது ரஷ்யா. 2014க்குப் பிறகு உக்ரைன் நேட்டோ நாடுகளின் குழுவில் இணைய விரும்பியது. ஆனால் ரஷ்யா அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இதனால் ரஷ்யா உக்ரைன் இடையே பிரச்சனை தொடர்ங்கியது. உக்ரைனின் கிரிமியா பகுதியைக் கைப்பற்றியது ரஷ்யா. இதனால் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா. தற்போது மீண்டும் ரஷ்யா உக்ரைன் இடையே பிரச்சனை தொடங்கிவிட்டது.

ரஷ்யா

ரஷ்யா

கடந்த சில மாதங்களாகவே ரஷ்யா மற்றும் உக்ரைன் தங்கள் எல்லைகளில் லட்சக்கனக்கான வீரர்களை நிறுத்தியது. இதனால் போர் சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டது. உலக நாடுகள் ரஷ்யாவிடம் படைகளை விலக்கச்சொல்லி வற்புறுத்தின. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என அறிவுறுத்தின. ஆனால் ரஷ்ய பிரதமர் யார் சொல்வதையும் கேட்கவில்லை. இன்று காலை உக்ரைன் மீது போர் தாக்குதலைத் தொடங்கியது ரஷ்யா.

இங்கிலாந்து

இங்கிலாந்து

உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். இன்று காலை போர் தொடங்கியதும் போரிஸ் ஜான்சன், இது ஐரோப்பாவிற்கு பேரழிவு என்று குறிப்பிட்டுள்ளார். ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் இந்த போர் குறித்து பேச இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் நேட்டோ நாடுகளின் தலைவர்களுடனும் அவசரக் கூட்டம் நடத்துவதாகவும் தெரிவித்தார். போர் தொடங்கியதும் உக்ரைன் நாட்டு அதிபர் விளாடிமேர் செலன்ஸ்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, ஐரோப்பா உக்ரைனுக்குத் துணை நிற்கும் என தெரிவித்தார்.

 போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சன்

இந்நிலையில், உக்ரைன் ரஷ்யா மீது போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சில முக்கிய கருத்துகளுடன் சமூகவலைதளத்தில் பேசினார் போரிஸ் ஜான்சன். அதில், ''இங்கிலாந்து தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கும். ஐரோப்பா கண்டத்தின் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கிறது கண்டனத்துக்குரியது. உக்ரைனில் இருக்கும் அப்பாவி மக்கள் மீது குண்டு மழை பொழிகிறது ரஷ்யா. தன்னுடைய அண்டை நாட்டின்மீது போர் தொடுத்திருப்பது அழகல்ல.

ரஷ்யா

ரஷ்யா


கடல்வழி, தரைவழி, வான் வழி என அனைத்து வகையிலும் உக்ரைனைத் தாக்கி வருகிறது ரஷ்யா. தெரியாத நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்கவில்லை. இதுவரை நட்பாக, ஆதரவாக இருந்த உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கிறது. உக்ரைனுக்கு முடிவெடுப்பதற்கு எல்லா சுதந்திரமும் இருக்கிறது. அந்த சுதந்திரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் பார்த்துக்கொண்டிருக்காது. ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் என கணித்திருந்தோம். அதுதான் நடந்திருக்கிறது.

உதவி

உதவி

ஐரோப்பா யூனியனில் உக்ரைனுக்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்தது இங்கிலாந்து தான். அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறோம். தற்போது பலரும் உக்ரைனுக்கு உதவி வருகிறார்கள். இன்னும் என்ன செய்ய முடியும் என்பதையும் ஆலோசித்து வருகிறோம். ரஷ்ய அதிபர் புதினின் இந்த முடிவு நிச்சயம் தோல்வியில் தான் முடியும். ரஷ்ய மக்கள் தங்கள் அதிபர் குறித்து புரிந்துகொள்ள வேண்டும்.

பொருளாதார தடை

பொருளாதார தடை

ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். ஏற்கெனவே ரஷ்யா மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதார தடைக்கு பிரிட்டன் அரசும் சம்மதம் தெரிவிக்கிரது. எங்களின் நட்பு நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடிவு செய்துள்ளது. மேற்கத்திய நாடுகளுடன் ரஷ்யா எண்ணைய் மற்றும் எரிவாயு விஷயத்தில் மறைமுகமாக கட்டுப்படுத்திவந்தது. இனி அப்படி நடக்காது'' என்று ஆக்ரோஷமாக பேசியுள்ளார் போரிஸ் ஜான்சன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+