அடுத்த ஆபத்து.. "இந்த" 4 அறிகுறிகளும் இருக்கிறதா?.. தடுப்பூசி போட்டவர்களையும் விரட்டும் "தொற்று"
தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும் தொற்று பாதிப்பு வருகிறது
லண்டன்: இன்னொரு பிரச்சனை கிளம்பியிருக்கு.. கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு புதுமாதிரியான அறிகுறிகள் தென்படுகிறதாம்.. அந்த குறிகள் என்னவென்று, விஞ்ஞானிகள் இப்போது தெரிவித்துள்ளனர்.
Recommended Video
இந்த கொரோனா தொற்றினால் உலகமே பீடித்துள்ளது.. இது என்ன மாதிரியான வைரஸ் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.. மருந்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.. இதன் அறிகுறிகளும் இவைகள்தான் என்று திட்டவட்டமாக ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
புது புது ஆய்வுகள், புது புது அறிகுறிகள் தினம் தினம் வெளியாகி கொண்டிருப்பதால், இந்த பீதியில் இருந்து மக்களால் விடுபட முடியவில்லை.

தடுப்பூசி
மருந்து இல்லாவிட்டாலும், ஒரே நம்பிக்கை தடுப்பூசிதான்.. அதனால்தான் உலக நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றன.. அமெரிக்க, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை தயாரித்து ஏற்றுமதி, இறக்குமதி செய்து வருகின்றன... இதற்காகவே பல நாடுகளில் மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு, உற்பத்தியையும் உள்நாட்டிலேயே தயாரித்து வருகின்றன. இப்போது இதிலும் பிரச்சனைகள் முளைத்து வருகிறது.

ஆராய்ச்சி
முதல் மற்றும் 2வது டோஸ் போட்ட பல்லாயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்... இந்தியாவிலும்கூட அதுபோல உள்ளவர்கள் பாதித்துள்ளனர்.. இதை பற்றின ஆராய்ச்சியைதான் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் விஞ்ஞானிகள் நடத்தினார்கள்... அந்த ஆய்வுகளில் பல ஷாக் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அறிகுறிகள்
அதன்படி, 11 லட்சம் மக்களிடம் இந்த ஆய்வு நடத்தி உள்ளனர்.. முதல் டோஸ் போட்டவர்கள் 0.2%, 2வது டோஸ் போட்ட 0.3% பேர் தொற்றால் பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.. முன்பெல்லாம் அதாவது இந்த தொற்று பரவ ஆரம்பித்தபோது, இருமல், சளி, காய்ச்சல், வயிற்று வலி, வயிற்று போக்கு போன்றவைகளைதான் அறிகுறிகளாக சொன்னார்கள்.. இப்போது இந்த அறிகுறிகள் கூட இல்லாமல் தொற்று வருவது என்பது வேறு விஷயம்.

தும்மல்
ஆனால், தடுப்பூசி போட்டவர்களுக்கும் தொற்று ஏற்படுவது என்பதுதான் பெருத்த அதிர்ச்சியாக இருக்கிறது.. அதுவும் 4 வகையான அறிகுறிகள் இதில் தென்படுமாம்.. முதலில் தும்மல்.. தடுப்பூசி போட்டுக்கொண்ட 60 வயதுக்கும் கீழ் உள்ளவர்களின் 24% மக்களுக்கு தும்மல் அறிகுறியால் பாதித்துள்ளனர்... அடுத்ததாக மூச்சுத் திணறல்.. இதுதான் ரொம்ப பயங்கரமானது.. தொற்று பாதித்தவர்கள் மட்டுமில்லாமல் தடுப்பூசி போட்ட மக்களும் மூச்சு திணறலால் பாதிக்கப்படுகின்றனர்...

வீக்கம்
மூன்றாவதாக, காதில் இரைச்சல்.. ஏதாவது காதில் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தால், அந்த இரைச்சலும் கொரோனா அறிகுறிதானாம்.. நான்காவதாக, வீக்கம்.. இந்த வீக்கம் கழுத்திலும் அக்குள் பகுதிகளிலும் ஏற்படுகிறது.. இது 2 நாளில் அதுவாகவே போய்விடுமாம்.. ஒருவேளை தொடர்ந்து இருந்தால், அது கண்டிப்பாக தொற்று அறிகுறிதான் என்கிறார்கள்.

அறிகுறி
தொற்றுவில் இருந்து தப்பிக்க தடுப்பூசிதான் தீர்வு என்றார்கள்.. தடுப்பூசியிலும் தொற்று என்றால் என்ன செய்றது? இன்னும் இந்த கொரோனா என்னவெல்லாம் நம்மை ஆட்டுவிக்க போகிறதோ தெரியவில்லை..!
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications