லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகின் பல பகுதிகளில் இன்டெர்நெட் டவுன்.. அமேசான் உட்பட.. முடங்கிய முன்னணி வெப்சைட்கள்

Google Oneindia Tamil News

லண்டன்: அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பல பகுதிகளில் இணையதளம் டவுனாகியுள்ளது. இதன் காரணமாக, அமேசான், தி நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பிரபல வலைத்தளங்கள் இயங்கவில்லை.

அமேசான், பிபிசி மற்றும் இங்கிலாந்து அரசாங்கத்தின் வெப்சைட் தளங்கள் பாதிக்கப்பட்டவற்றில் முக்கியமான சில வெப்சைட்களாகும்.

Internet is down in many parts of the world

இங்கிலாந்தின், தி கார்டியன், பைனான்சியல் டைம்ஸ், இன்டிபென்டன்ட், நியூயார்க் டைம்ஸ், ஈவினிங் ஸ்டாண்டர்ட் மற்றும் ரெடிட் உள்ளிட்ட பல முன்னணி ஊடக வலைத்தளங்களும் "எரர்" என்று காண்பித்தன.

இணையதள டவுன்தான் இதற்கு காரணம். சில வலைத்தளங்கள் முற்றிலுமாக முடங்கின. சில இணையதளங்கள் சிறிய இடையூறுகளை அனுபவித்தார்கள், அதேநேரம், செயல்பட முடிந்தது.

உலகின் முக்கிய விநியோக நெட்வொர்க்குகளில் (சி.டி.என்) ஒன்றான ஃபாஸ்ட்லியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இதுபோல ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சி.டி.என் என்பது இணையதளங்களையும் அவற்றின் உள்ளடக்கத்தையும் இணையத்தில் ஹோஸ்ட் செய்து பயனர்களுக்கு வழங்க பயன்படும் ஒரு அமைப்பு. அதன் உலகளாவிய நெட்வொர்க் முழுவதும் பெரிதாக டவுன் ஆகியுள்ளது.

English summary
The Internet is down in many parts of the United States and Europe. Due to this, popular websites including Amazon and The New York Times are not running.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X