10 முறை இந்தியா வருகை தந்த புதிய மன்னர் சார்லஸ்- மும்பையில் 71-வது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார்!
லண்டன்: பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமான நிலையில் அந்நாட்டின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்க உள்ளார். புதிய மன்னர் சார்லஸ் 10 முறை இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அவர் தமது 71-வது பிறந்த நாளை 3 ஆண்டுகளுக்கு முன்னர் மும்பையில் கொண்டாடி மகிழ்ந்தார்.
உலகில் மிக நீண்டகாலம் ராணியாக ஆட்சி செய்தவர் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத். 96-வயதான நிலையில் வயது மூப்பு காரணமாக எலிசபெத் மகாராணி நேற்று காலமானார்.

எலிசபெத் ராணி மறைவைத் தொடர்ந்து வேல்ஸின் முன்னாள் இளவரசர் சார்லஸ் அரியணை ஏறுகிறார். பிரிட்டனின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பல்வேறு சம்பிரதாயங்களின் படி பதவியேற்க உள்ளார்.

மறைந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத் 1961,1983, 1997-ம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு வருகை தந்தார். சென்னையில் மகன் ஆண்ட்ரூஸின் முதல் பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் இதில் பங்கேற்றார். 1997-ல் பிரிட்டனை எதிர்த்து போரிட்ட விடுதலைப் போராட்ட வீரர் மருதநாயகம் வாழ்க்கையை விவரிக்கும் நடிகர் கமல்ஹாசனின் மருதநாயகம் திரைப்பட தொடக்க விழாவில் எலிசபெத் மகாராணி பங்கேற்றார். முதல்வராக இருந்த கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் அந்நிகழ்வில் பங்கேற்றனர்.

தற்போது புதிய மன்னராகும் மூன்றாம் சார்லஸ், இந்தியாவுக்கு 10 முறை வருகை தந்துள்ளார். உலகில் நீண்டகாலம் இளவரசராக இருந்தவர் சார்லஸ். தற்போது மன்னராக பொறுப்பேற்க உள்ளதால் மூன்றாம் சார்லஸ் மன்னர் என அழைக்கப்படுகிறார்.

மூன்றாம் சார்லஸ், 1975, 1980, 1991, 1992, 2002, 2006, 2010, 2013,2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு சார்லஸ் வருகை தந்துள்ளார். 2019-ம் ஆண்டு இந்தியா வருகை தந்த சார்லஸ் தமது 71-வது பிறந்த நாளை மும்பையில் குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications