லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுத்த "பேண்டமிக்" ஆகும் அபாயம் கொண்டது! 42 வருடத்திற்கு பின் மீண்டும் பரவும் Lassa Fever.. எங்கு?

Google Oneindia Tamil News

லண்டன்: கொரோனா பெருந்தொற்றே இன்னும் முடிவிற்கு வராத நிலையில் புதிதாக லஸ்ஸா காய்ச்சல் எனப்படும் Lassa Fever பரவ தொடங்கி உள்ளது... அது என்ன Lassa Fever?

உலகம் முழுக்க கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஓமிக்ரான் கேஸ்கள் திடீரென உச்சம் தொட்டு பலருக்கு கொரோனா ஆண்டிபாடி கிடைத்த நிலையில், உலகம் முழுக்க கொரோனா அலை சரிய தொடங்கி உள்ளது.

சர்வதேச அளவில் மொத்தமாக கொரோனா பெருந்தொற்று முடிவிற்கு வருவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. உலகம் முழுக்க பல நாடுகளில் லாக்டவுன் தளர்வுகள் அமலுக்கு வந்து இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது.

ஏலத்திற்கு வராமலே.. சொல்லி அடித்த பிரீத்தி ஜிந்தா.. ப்பா பஞ்சாப் டீமே மாறிடுச்சே.. 9 அணிகளுக்கு செக் ஏலத்திற்கு வராமலே.. சொல்லி அடித்த பிரீத்தி ஜிந்தா.. ப்பா பஞ்சாப் டீமே மாறிடுச்சே.. 9 அணிகளுக்கு செக்

பேண்டமிக்

பேண்டமிக்

இந்த நிலையில்தான் யு.கேவில் இப்போது புதிதாக Lassa Fever என்ற காய்ச்சல் பரவி வருகிறது. இன்னொரு பெருந்தொற்று.. அதாவது பேண்டமிக் போல மாறும் வல்லமை கொண்டது இந்த Lassa Fever என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது உடலின் உள்ளேயும், வெளியேயும் ரத்த போக்கை ஏற்படுத்தும் ஒரு வகையான haemorrhagic காய்ச்சல் ஆகும் இது. haemorrhagic என்பது உடலில் உதிரப்போக்கை ஏற்படுத்தும் நோயாகும்.

 எபோலா

எபோலா

எபோலா போன்ற பண்புகளை கொண்டது Lassa Fever ஆகும். இது எலிகள் மூலம் அதிகம் பரவும். எலிகள் மூலம் தாக்கப்பட்ட உணவுகள், பழங்களை சாப்பிடுவது, இல்லை என்றால் பழைய வீணாய் போன உணவுகளை சாப்பிடுவது, எலியின் கழிவுகள் கலந்த நீரை குடிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் இந்த Lassa Fever பரவும் வாய்ப்புகள் உள்ளன.

பரவுகிறது

பரவுகிறது

கடந்த 42 வருடங்களில் முதல்முறையாக யு.கேவில் மீண்டும் Lassa Fever பரவ தொடங்கி உள்ளது. இடையில் 2009ல் யு.கேவிற்கு வந்த இரண்டு வெளிநாட்டு பயணிகளுக்கு Lassa Fever பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த நாட்டு குடிமக்கள் இடையே அப்போது Lassa Fever ஏற்படவில்லை. இந்த நிலையில்தான் மீண்டும் யு.கேவில் 2 Lassa Fever கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. இன்னொரு சந்தேக கேஸும் அங்கு கண்டறியப்பட்டள்ளது.

யு.கே

யு.கே

இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர் யு.கே குடிமக்கள். சமீபத்தில் மேற்கு ஆப்ரிக்காவிற்கு சென்றுவிட்டு திரும்பி உள்ளனர். மேற்கு ஆப்ரிக்காவில் Lassa Fever அடிக்கடி ஏற்படும். அங்கு இது எண்டமிக் என்ற நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட மேற்கு ஆப்ரிக்காவில் சிலருக்கு Lassa Fever ஏற்பட்டது. அங்கு பாதிக்கப்பட்ட குடிநீர், அல்லது உணவை சாப்பிட்டு அதன் மூலம் இவர்களுக்கு Lassa Fever ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 Lassa Fever

Lassa Fever

இந்த Lassa Fever ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் அபாயமும் உள்ளது. அதாவது எச்சில், நீர் குமிழிகள் மூலம் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு Lassa Fever பரவும். ஆனால் கொரோனா அளவிற்கு வேகமாக பரவும் திறன் இதற்கு இல்லை. யுகேவில் Lassa Fever பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அந்நாட்டு சுகாதாரத்துறை சோதனை செய்து வருகிறது. Lassa Fever ஏற்படும் நபர்களுக்கு தலைவலி, காய்ச்சல், வறண்ட தொண்டை, உடல் வலி, வயிற்று போக்கு, வாந்தி போன்ற அறிகுறிகள், பாதிப்புகள் ஏற்படும்.

 அறிகுறிகள் மரணம்

அறிகுறிகள் மரணம்

பெண்களுக்கு பெண் உறுப்பில் இருந்து உதிரப்போக்கு, அவர்களுக்கு காது, மூக்கு, வாயில் இருந்து உதிரப்போக்கு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. மேற்கு ஆப்ரிக்காவில் ஒவ்வொரு வருடமும் 1 லட்சத்திற்கும் அதிகமான கேஸ்கள் Lassa Fever மூலம் ஏற்பட்டுள்ளது. இதில் சராசரியாக 5 ஆயிரம் பேர் ஒவ்வொரு வருடமும் ப்ளோயாகி வருகிறார்கள். இதில் 80 சதவிகிதம் பேர் எந்த அறிகுறியும் இல்லாதவர்கள். இதற்கு இதுவரை வேக்சின் கண்டுபிடிக்கப்படவில்லை. 2 வேக்சின்கள் கடைசி கட்ட சோதனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Lassa Fever: All you need to know about the new virus that spreads in the UK which has the potential to become another pandemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X