பிரிட்டன் ராஜ குடும்பத்தில் பூகம்பம்.. இளவரசர் வில்லியம் என்னை அடித்தார்! இளவரசர் ஹாரி குறிப்பு லீக்
லண்டன்: பிரிட்டன் இளவரசர் வில்லியம் தன்னை தாக்கி அடித்ததாக மற்றொரு இளவரசரான ஹாரி தன்னுடைய ஆவணப் படத்தில் வெளிப்படையாக தெரிவித்து இருப்பது பிரிட்டன் அரச குடும்பத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மேகனை திருமணம் செய்த பிறகு பிரிட்டன் இளவரசர் ஹாரி, அரச குடும்பத்தாலேயே பல்வேறு வகைகளில் ஒடுக்கப்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த தாக்குதல் விவகாரம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
பிரிட்டன் இளவரசரான ஹாரி மற்றும் அவருடைய மனைவி மேகன் மேர்க்கல் தம்பதியின் வாழ்க்கை வரலாற்று ஆவனத்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
வெள்ளையர் அல்லாத முதல் பிரிட்டன் இளவரசி என்ற பெருமையை பெற்றாலும், இவர்களின் திருமணத்தை பிரிட்டன் அரச குடும்பம் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளவில்லை. பல்வேறு தடைகளை கடந்தே இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

மேகன் மீது விமர்சனம்
தொடர்ந்து நிறம் சார்ந்தும் பல்வேறு விமர்சனங்களை மேகன் எதிர்கொண்டு வந்தார். டயானாவுக்கு நடந்த அதே நிகழ்வுகள் மேகனுக்கும் அரங்கேறத் தொடங்கின. இதனை அடுத்து இங்கிலாந்து அரச பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ஹாரி. சமீபத்தில் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்காக ஹாரி மேகன் தம்பதி லண்டன் வந்திருந்தனர்.

இரண்டாம் எலிசபெத் மறைவு
எலிசபெத் மறைவிலிருந்து மீண்டு இங்கிலாந்து அரசு குடும்பம் அடுத்தடுத்த பணிகளுக்கு சென்று இருக்கும் நிலையில் ஹாரி - மேகன் ஆவணத்தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க இளவரசர் ஹாரி எழுதிய நினைவுக்குறிப்புகளில் இடம்பெற்று இருக்கும் முக்கிய ரகசியங்களை வெளியிட்டு உள்ளது கார்டியன் ஊடகம்.

மேகனை விமர்சித்த வில்லியம்
பிரிட்டன் இளவரசரான வில்லியம் தன்னுடைய மனைவி மேகன் மேர்க்கெலை கொடுமையானவர், அகங்காரம் நிறைந்தவர், அழிவை ஏற்படுத்துபவர் என்று தெரிவித்ததாக குறிப்பிட்டு உள்ளார். "எல்லாம் மிக வேகமாக நடந்து முடிந்துவிட்டது. அவர் என்னுடைய சட்டை காலரை பிடித்து இழுத்தார். என்னை சுவற்றில் பிடித்து தள்ளினார். என் கழுத்தை நெறித்தார்.

ஹாரி மீது வில்லியம் தாக்குதல்
அவர் என்னை தள்ளியதால் நான் நாய் சாப்பிடும் குடுவையில் விழுந்தேன். என்னுடைய பின் பகுதி அதனால் படுகாயம் அடைந்தது. குடுவை உடைந்து அதன் துண்டுகள் என் முதுகில் குத்தின. நான் அங்கேயே சிறிது நேர்ம் கிடந்தேன். அதன் பிறகு எழுந்து நிறு அவரை அங்கிருந்து வெளியேற சொன்னேன். அந்த தாக்குதலால் என் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.

சத்தியம் செய்த வில்லியம்
நாட்டிங்காமில் எனக்கும் வில்லியமுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. என்னுடனான முறிந்த உறவு குறித்து அவர் பேசினார். அந்த விவாதத்தின்போது வில்லியம் மிகவும் கோபத்தில் இருந்தார். எனக்கு உதவப்போவதாக வில்லியம் கூறினார். நீ எனக்கு உதவி செய்யப் போகிறாயா என்று நான் கேட்டேன். மிகவும் கோபமடைந்த நிலையில் ஆம் என்று வில்லியம் சத்தியம் செய்தார்.

அமைப்பிலிருந்து வெளியேறினேன்
இந்த நிலையில் உன்னிடம் நான் பேச விரும்பவில்லை என்று நான் அவரிடம் கூறி இரு கிளாசில் தண்ணீர் கொடுத்து குடிக்க சொன்னேன். இது மிகவும் கடினமான தருணம். நானும் இந்த அமைப்பின் ஒரு பகுதியாகவும், அவர்களின் ஒரு பகுதியாகவும் இருக்கிறேன். நான் அதை நன்கு உணர்ந்து இருக்கிறேன். என்னுடைய சகோதரன் இந்த அமைப்பிலிருந்து வெளியேற மாட்டான். ஆனால், நான் வெளியேறினேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications