லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மண்ணறைக்குள் “மகாராணி”.. அன்பு கணவர் “பிலிப்” அருகே எலிசபெத் உடல்! ராஜமரியாதையுடன் நல்லடக்கம்

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டன் மகாராணி இரண்டாவது எலிசபெத் உடல் முழு ராஜமரியாதையுடன், அவரது கணவர் பிலிப் உடல் அருகே தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பிரிட்டன் ராணி 2 வது எலிசபெத்துக்கு இம்மாத தொடக்கத்தில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட எலிசபெத் ராணி கடந்த 8 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

எலிசபெத் மரணத்தை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டன் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். எலிசபெத் மரணத்தை தொடர்ந்து அது தொடர்பான செய்திகளே சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன.

பாம்பு படகுப்போட்டியில் ராகுல் காந்தி.. துடுப்புகளை வீசி அசத்தல்.. கேரளாவில் உற்சாகம்! பாம்பு படகுப்போட்டியில் ராகுல் காந்தி.. துடுப்புகளை வீசி அசத்தல்.. கேரளாவில் உற்சாகம்!

ஸ்காட்லாந்தில் மறைவு

ஸ்காட்லாந்தில் மறைவு

ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் உயிரிழந்த எலிசபெத்தின் உடல் நேற்று லண்டனுக்கு எடுத்து செல்லப்பட்டது. அடுத்த சில நாட்கள் ராணி எலிசபெத் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்படும். ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு செப்டம்பர் 19 அன்று வெஸ்ட்மின்ஸ்டரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

உடலுக்கு அஞ்சலி

உடலுக்கு அஞ்சலி

கடந்த ஞாயிறு அன்று லண்டன் சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, எலிசபெத் உடல் வைக்கப்பட்டு இருந்த வெஸ்ட்மினிஸ்டர் அரங்கத்தில், தலைவர்களுக்கான மேடையில் ஏறி நின்று உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து அவர் அஞ்சலி செலுத்த வந்த உலக தலைவர்களுக்கான இரங்கல் குறிப்பு புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

பிரார்த்தனை

பிரார்த்தனை

இந்த நிலையில் ராணி எலிசபெத்தின் உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு வெலிங்டன் வளைவிலிருந்து ஊர்வலமாக விண்ட்ஸர் கோட்டைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு காண்டர்பரி பேராயர் மகாராணி எலிபெத்துக்கு சிறப்பு பிராத்தனை செய்தார். உடல் செல்லும் பாதையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நின்று அஞ்சலி செலுத்தினர்.

இறுதிச்சடங்கு

இறுதிச்சடங்கு

இதனை அடுத்து அவரது உடல் அணிவகுப்பு மரியாதையுடன் தேவாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மகாராணியின் மறைந்த கணவரும் இளவரசருமான பிலிப்பின் உடல் எடுத்துச் செல்லப்பட்ட வழியில் ராணுவ அணிவகுப்புடன் உடல் தேவாலயத்துக்கு சுமந்து செல்லப்பட்டது. அங்கு அரசு குடும்ப பாரம்பரியத்தின் படி அவரது உறுதிச் சடங்கு நடைபெற்றது. இதில் பிரிட்டன் அரச குடும்பத்தினர், உலகத் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

வெளியேறிய அரசு குடும்பம்

வெளியேறிய அரசு குடும்பம்

பொது இறுதிச் சடங்கு நிறைவடைந்ததை தொடர்ந்து பிரிட்டன் அரசு குடும்பம் தேவாலயத்தில் இருந்து வெளியேறியது. மன்னர் சார்லஸ், ராணிகள் கமீலா, கன்சார்ட், இளவரசர்கள், எட்வர்ட், ஆண்ட்ரியூ, வில்லியம், ஹாரி, இளவரசி அன்னே ஆகியோர் தேவாலயத்திலிருந்து தனித்தனி கார்களில் புறப்பட்டனர்.

நல்லடக்கம்

நல்லடக்கம்

இதனை தொடர்ந்து பிரிட்டன் நேரப்படி நள்ளிரவு 7:30 மணியளவில் மீண்டும் மன்னர் சார்லஸ் மற்றும் அரசு குடும்பத்தினர் தேவாலயத்துக்கு வருகை தந்தனர். சிறப்பு விருந்தினர்கள், மக்கள் கூட்டம் ஏதுமின்றி குடும்பத்தினர் முன்னிலையில் எலிசபெத் உடல், மறைந்த அவரது கணவர் இளவரசர் பிலிப்பின் உடல் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனை வீடியோ பதிவு செய்யவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதிக்கப்படவில்லை.

English summary
Britain Queen Elizabeth II buried in London: Queen Elizabeth died on last week in scotland. Her body taken to London yesterday and put for public sorrow. Her funeral tooks place at Westminister. Queen Elizabeth body buried near her Husband Philip's body
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X