"ஸ்டெல்த்.." RT-PCR சோதனையிலும் கண்டுபிடிக்க முடியாத புதுவகை கொரோனா வைரஸ்.. எச்சரிக்கும் நிபுணர்கள்!
லண்டன்: RT-PCR சோதனையில் இருந்தும் தப்பிக்கக்கூடிய புதிய ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸில் இருந்து வந்த வைரஸ் வகைதான் ஒமிக்ரான். தற்போது இந்த ஒமிக்ரான் வகை வைரஸின் துணை வைரஸாக பி.ஏ.2 வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதை 'ஸ்டெல்த் ஓமிக்ரான்' என்று அழைக்கின்றனர்.
நாற்பது நாடுகளுக்கு மேல் இந்த வகை ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளதாக லண்டனை சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த "ஸ்டெல்த் ஓமிக்ரான்" தற்போது ஐரோப்பா முழுவதும் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டெல்த் ஒமிக்ரான்
உலக சுகாதார அமைப்பு இந்த ஸ்டெல்த் ஓமிக்ரான் குறித்து விளக்கியுள்ளது. அதன்படி, ஓமிக்ரான் வைரஸின் மாறுபாடு மூன்று துணை வைரஸைக் கொண்டுள்ளது - BA.1, BA.2 மற்றும் BA.3. இந்நிலையில், உலகம் முழுவதும் பதிவாகியுள்ள ஓமிக்ரான் நோய்த்தொற்றுகளில் BA.1 துணை வைரஸ் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதுபோல BA.2 துணை வைரஸ் விரைவாக பரவி வருகின்றது.

ஐரோப்பா
உதாரணமாக, டென்மார்க் நாட்டில், கண்டறியப்பட்ட வைரஸ்களில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் இந்த ஒமிக்ரானின் BA.2 துணை வைரஸ் பரவி இருக்கிறது. லண்டன் சுகாதார அதிகாரிகள் BA.2 ஐ ஒமிக்ரானின் மாறுபாடு என்றும் அறிவிக்கப்படும் என்கின்றனர். ‘ஸ்டெல்த் ஓமிக்ரான்' பாதிப்புகளை, இங்கிலாந்து மற்றும் டென்மார்க் தவிர, ஸ்வீடன், நார்வேயில் கண்டறியப்பட்டிருக்கின்றன.

இந்தியா
மேலும், அதிர்ச்சியளிக்கும்விதமாக இந்தியாவிலும் பிஏ.2 துணை வைரஸின் மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் பிரான்சில் உள்ள விஞ்ஞானிகள் இந்த ஸ்டெல்த் ஓமிக்ரான் குறித்து எச்சரித்துள்ளனர். இது BA.1 துணை விகாரத்தை விட அதிகமான விளைவுகளை விளைவிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
Recommended Video

கண்டறிவது கடினம்
BA.1 துணை வைரஸ் RT- PCR சோதனைகளில் கண்டறிய முடிகிறது. ஆனால், BA.2 துணை வைரஸ் இருப்பதை இந்த சோதனைகளில் கண்டறியமுடியவில்லை. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. BA.1 துணை வைரஸ் சில சமயங்களில் RT-PCR சோதனைகளில் இருந்து தப்பிக்கக்கூடும் என்றாலும், இந்த சோதனைகள் வைரஸைக் கண்டறிவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. தற்போது இருக்கும் கருவிகளைக் கொண்டு சில மாற்றங்களை செய்து கண்டறிந்து வருகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications