‛முட்டாள்’.. ரஷ்ய அதிபர் புதினுக்கு அவமான சிலை.. தலை எப்படி இருக்கு பாருங்க..பிரிட்டன் மக்கள் ஆவேசம்
லண்டன்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அந்நாட்டின் அதிபரான விளாடிமிர் புதினை அவமானப்படுத்தும் வகையில் பிரிட்டனின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டின் முட்டாள் என வர்ணிக்கப்பட்டுள் அந்த சிலை மீது முட்டை வீசப்பட்டு வரும் நிலையில் சிலையின் தலை வடிவமைப்பு சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ரஷ்யா-உக்ரைன் ஆகியவை அண்டை நாடுகளாக உள்ளன. ஒருங்கிணைந்த சோவியத் யூனியனின் (ரஷ்யா) அங்கமாக உக்ரைன் இருந்த நிலையில் தனிநாடாக பிரிந்தது.
தற்போது சுதந்திர நாடாக உக்ரைன் செயல்பட்டு வருகிறது. அதிபராக விளாடிமிர் ஜெலன்ஸ்க்கி உள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது.

உக்ரைன் மீது போர் நடவடிக்கை
இதற்கிடையே தான் உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. இதையடுத்து இருநாடுகள் இடையே எல்லை பிரச்சனை தீவிரமானது. இதனால் ரஷ்யாவை சமாளிக்க உக்ரைன் அமெரிக்காவின் நாட்டோ படையில் இணைய முடிவு செய்தது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் உக்ரைன் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. இதனால் கடந்த பிப்ரவரி 24ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.

ஏராளமானவர்கள் பலி
உக்ரைனை முழுவதுமாக கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்யா போர் நடவடிக்கையை துவங்கி உள்ளது. வான்வெளி, தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் எளிதாக உக்ரைனை கைப்பற்றலாம் என்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் எண்ணம் இன்னும் ஈடேறவில்லை. இந்த போர் 10வது மாதத்தை நெருங்கி வருகிறது. தற்போது வரை உக்ரைன், ரஷ்யா தரப்பில் ஏராளமான வீரர்கள் பலியாகி உள்ளனர்.

அமெரிக்கா, பிரிட்டன் கடும் எதிர்ப்பு
இந்த போர் நடவடிக்கையை பல்வேறு நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளனர். அமெரிக்கா, பிரிட்டன் உள்பட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்தியாவும், போர் நடவடிக்கையை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நேற்று கூட தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி இந்த கோரிக்கையை வலியுறுத்தினார்.

அவமான சிலை அமைப்பு
மேலும் அமெரிக்கா, பிரிட்டன் நாட்டை சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை கடுமையாக கண்டித்து வரகின்றனர். இந்நிலையில் தான் இங்கிலாந்தில் உள்ள பெல் எண்ட் கிராமத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அவமானப்படுத்தும் வகையில் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையின் தலைப்பகுதி என்பது மர்மஉறுப்பின் வடிவில் வடிவமைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதோடு ‛பெல்லண்ட் ஆப் தி இயர்' என எழுதப்பட்டுள்ளது. பெல்லண்ட் என்பது முட்டாள் என்பதை குறிக்கும். இதன்மூலம் இந்த ஆண்டின் முட்டாள் விளாடிமிர் புதின் என தெரிவித்துள்ளனர்.

முட்டை வீச்சு
மேலும் இந்த சிலை அருகே முட்டை வைக்கப்ப்டடுள்ளது. அதோடு விருப்பம் உள்ளவர்கள் முட்டையை சிலை மீது தூக்கி வீசலாம் என எழுதப்பட்டுள்ளது. இதனால் அந்த சிலை வழியே செல்லும் நபர்கள் முட்டையை எடுத்து விளாடிமிர் புதினின் சிலை மீது வீசி வருகின்றனர். இதுதொடர்பான படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications