உ.பி. சட்டசபைத் தேர்தல் முடிவுகள் 2022: வதந்தி பரப்பிய அகிலேஷை சிறைக்கு அனுப்புங்கள் - பாஜக எம்.பி
தவறாக வதந்தி பரப்பிய அகிலேஷ் யாதவை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று பாஜக எம்.பி கூறியுள்ளார்.
லக்னௌ: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் சட்டவிரோதமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டதாக குற்றம் சாட்டினார் அகிலேஷ் யாதவ். தவறாக வதந்தி பரப்பிய அவரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று பாஜக எம்.பி ஹர்நாத் சிங் யாதவ் கூறியுள்ளார்.
உத்தரபிரதேச தேர்தல் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஏழு கட்டங்களாக நடைபெற்றது.தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்று கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாரணாசியில் முறைகேடாக மாற்றப்பட்டதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டினார்.

சமாஜ்வாதி கட்சி
இதனை ஆதரித்து சமாஜ்வாதிக் கட்சி புதன்கிழமை காலை ஒரு வீடியோவை ட்வீட் செய்தது, அதில் வாரணாசியின் ஆணையர் தீபக் அகர்வால் செய்தியாளர்களிடம், மின்னணு இயந்திரங்களின் இயக்கத்தில் குறைபாடு இருப்பதாகக் கூறுவது போல் தெரிகிறது. எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட இயந்திரங்கள் பயிற்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டவை என்று தீபக் அகர்வால் அதில் கூறுவதும் பதிவாகியுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
தீபக் அகர்வால் கூறும்போது, வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களை எடுத்துச் செல்ல முடியாது என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும். மூன்று அடுக்குப் பாதுகாப்பு உள்ளது. அரசியல் கட்சித் தொண்டர்கள் கூட மையங்களுக்கு வெளியே அமர்ந்து கண்காணித்து கொண்டுள்ளனர் என்றார். சமாஜ்வாதி கட்சி தனது ட்வீட்டில், மாநிலத்தில் பல மாவட்டங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. "இது யாருடைய விருப்பத்தின் பேரில் நடக்கிறது? முதல்வர் அலுவலகம் மூலம் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா? தேர்தல் கமிஷன், தயவு செய்து தெளிவுபடுத்துங்கள்" என்று சமாஜ்வாதிக் கட்சி சாடியுள்ளது.

அகிலேஷ் யாதவ்
செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பாஜக வெற்றி பெறும் என்ற கருத்தை உருவாக்க விரும்புகின்றன. இது ஜனநாயகத்திற்கான கடைசி போராட்டம். வேட்பாளர்களுக்கு தெரிவிக்காமல் இ.வி.எம். (மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்) கொண்டு செல்லப்படுகிறது. இந்த வழியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்ட செல்லப்பட்டால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

திருட்டு
இது திருட்டு. நாங்கள் எங்கள் வாக்குகளை காப்பாற்ற வேண்டும், அதற்கு எதிராக நாம் நீதிமன்றத்துக்கு செல்லலாம், ஆனால் அதற்கு முன், ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார். பாஜகவுக்கு வாய்ப்புகள் குறைவாக உள்ள இடங்களில் வாக்கு எண்ணிக்கையை மெதுவாக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பாஜக மறுப்பு
சமாஜ்வாதி கட்சியின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் பாஜக மறுத்துள்ளது. அகிலேஷ் யாதவின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. ஹர்நாத் சிங் யாதவ், இந்திய தண்டனை சட்டத்தின்படி , வதந்திகளை பரப்புதல், பொதுமக்களை தவறாக வழிநடத்துதல், தவறான தகவல்களை வழங்குதல், கடுமையான குற்றங்களின் பிரிவின் கீழ் வரும். அகிலேஷ் யாதவ் கண்மூடித்தனமாக இதுபோன்ற குற்றங்களை செய்கிறார். வதந்திகளை பரப்பியதற்காக அகிலேஷ் யாதவ் மீது வழக்கு பதிவு செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கிறேன் என்றார். அகிலேஷ் யாதவை கம்பிக்கு பின்னால் நிறுத்த வேண்டும்.

மாநிலம் நரகமாக்கப்பட்டது
உத்தர பிரதேசத்தில் தனது 5 ஆண்டு கால ஆட்சியின் போது அவர் ஜனநாயக மதிப்புகள், லட்சியங்கள், ஜனநாயக கொள்கைகள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்ததால், அவரது வாயிலிருந்து ஜனநாயகத்தை பற்றி கேட்பது விசித்திரமாக இருக்கிறது. மாநிலம் முழுவதும் நரகமாக்கப்பட்டது. மாபியா மற்றும் குண்டர்களின் பிடியில் மாநிலம் சிக்கியது. சமாஜ்வாதி ஆட்சிக் காலத்தில் மாநில அரசின் நிதி கொள்ளையடிக்கப்பட்டது, விதிமுறைகள் மீறப்பட்டன என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications