லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உத்தரபிரதேசத்திலும் அதிரடி காட்டும் ஓவைசி கட்சி.. முஸ்லீம்கள் அதிகமுள்ள 100 தொகுதிகளில் போட்டி!

By
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச தேர்தலில் அசாதுதீன் ஓவைசி கட்சி 100 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அசாது தீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தாஹுல் முஸ்லிமீன் கட்சி உத்திரப்பிரதேச தேர்தலில் போட்டியிட‌ முடிவு செய்துள்ளது. மேலும் உத்திரப்பிரதேசத்தில் கூட்டணி அமைக்கும் முயற்சிகளையும் மேற்கொள்கிறது.

அசாதுதீன் தலைமையிலான கட்சி தெலங்கானா, ஆந்திராவைத் தாண்டி பெரியளவில் ஜொலிக்கவில்லை. இந்தநிலையில் தற்போது நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலை ஓவைசி பயன்படுத்த நினைக்கிறார்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் என ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10-ம் தேதி மார்ச் 7-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

 எல்லையில் அத்துமீறி கட்டுமானம்.. சீனாவின் பதில் என்ன? பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன - பரபர தகவல் எல்லையில் அத்துமீறி கட்டுமானம்.. சீனாவின் பதில் என்ன? பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன - பரபர தகவல்

 உத்திரப்பிரதேசம்

உத்திரப்பிரதேசம்

உத்திரப்பிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இங்கு பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மார்ச் 10-ந் தேதி எண்ணப்படும். உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான‌ பா.ஜ.க அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேசமயம் பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைக்காது என பா.ஜ.க-வில் இருந்து அமைச்சர்கள் உட்பட எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர்.

 அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்

அதேசமயம் உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவுக்கு அதிகமான செல்வாக்கு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து காங்கிரஸ், பா.ஜ.க என அனைத்து கட்சிகளும் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

 ஓவைசி

ஓவைசி

அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தாஹுல் முஸ்லிமீன் கட்சி உத்திரப்பிரதேச தேர்தலில் போட்டியிடவிருக்கிறது. மகாராஷ்டிராவில் அவுரங்காபாத் தொகுதியை வென்றதால் இக்கட்சி கவனிக்கப்பட்டது. இதையடுத்து நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடவிருக்கிறது இக்கட்சி.

 100 தொகுதிகளில்

100 தொகுதிகளில்

ஓவைசியின் கட்சி சிறு கட்சிகளை இணைத்து கூட்டணிக்கு வலு சேர்த்து வருகிறது. உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி 100 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இங்கு முஸ்லீம்களின் எண்ணிக்கை 20 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கிறது. இதையடுத்தே 100 தொகுதிகளில் களமிறங்க திட்டமிருக்கிறது ஓவைசி கட்சி.

English summary
Azad Owaisi party is contesting in 100 constituencies in the Uttrapradesh elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X