'உ.பி. மக்கள் ஆசி எங்களுக்கே.. ரிசல்ட் வரும்போது இது உங்களுக்கு புரியும்'.. சொல்வது யாருனு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெறும் உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதாவது அங்கு பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளன என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க அரசு மீண்டும் ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது. பா.ஜ.கவுக்கு அடுத்தபடியாக பிரதான கட்சியாக விளங்கும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி மீண்டும் ஆட்சியை பிடிக்க காத்திருக்கிறது.

உத்தரபிரதேசத்தில் தேர்தல்

உத்தரபிரதேசத்தில் தேர்தல்

இதேபோல் இந்த முறையாவது பாஜகவிடம் இருந்து ஆட்சியை பறித்து விட வேண்டும் என்று காங்கிரஸ் துடியாய் நிற்கிறது. தற்போது தேர்தல் ஆணையமும் அறிவித்து விட்ட நிலையில் உத்தரபிரதேசத்தில் தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ளது. பாஜக, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. அதுவும் மத்திய பாஜக அரசு உத்தரபிரதேச மாநிலத்தை குறிவைத்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

 பிரதமர் அடிக்கடி விசிட்

பிரதமர் அடிக்கடி விசிட்

பிரதமர் நரேந்திர மோடியும் அங்கு அடிக்கடி விசிட் செய்து திட்டங்களை வாரி வழங்கி வருகிறார். இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் பாஜக அமோக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இது தொடர்பாக நிருபர்களிடம் பேட்டியளித்த அவர் கூறுகையில் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், உத்தரப்பிரதேசம் கடந்த 5 ஆண்டுகளில் வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது என்றார்.

மீண்டும் ஆட்சி அமைக்கும்

மீண்டும் ஆட்சி அமைக்கும்

கடந்த ஐந்து ஆண்டுகளில், உத்தரபிரதேசத்தின் இரட்டை இயந்திர அரசு, மாநிலத்தின் முழுமையான வளர்ச்சிக்காக உழைத்துள்ளத என்று கூறிய யோகி புதிய இந்தியாவின் நயா உத்தரபிரதேசத்தில் ஜனநாயகத்தின் தேர்தல் திருவிழாவை நாங்கள் வரவேற்கிறோம். மார்ச் 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.

மக்கள் ஆசி எங்களுக்கே..

மக்கள் ஆசி எங்களுக்கே..

தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் ஆசி வழங்குவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக நாம் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+