பகலில் ஊர்வலம்.. இரவில் ஊரடங்கா...? சொந்த கட்சியையே விமர்சித்த பாஜக எம்.பி. வருண்காந்தி...!
லக்னோ: ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், உத்தரபிரதேசத்தில் இரவில் ஊரடங்கு... பகலில் லட்சக்கணக்கானோரை பேரணியில் பங்கேற்குமாறு அழைப்பதால் தனது சொந்த கட்சியான பாஜக தலைமையையே நாடாளுமன்ற உறுப்பினர் வருண்காந்தி விமர்சித்துள்ளது உத்தரபிரதேச அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவியேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தையும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பாஜகவின் யோகி ஆதித்யாநாத்துக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் களமிறங்கியுள்ள நிலையில் அம்மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அகிலேஷ் யாதவும்மல்லுகட்டி வருகின்றனர்.

இரவு நேர ஊரடங்கு
இந்த நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு உத்தரபிரதேசத்தில் கடந்த 25ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், திருமண நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளபோதும் பகல் நேரத்தில் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. இதனால், தேர்தல் பிரசாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வருண்காந்தி விமர்சனம்
இந்நிலையில், ஓமிக்ரான் வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் உத்தரபிரதேசத்தில் லட்சக்கணக்கான தொண்டர்களை வைத்து தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து சொந்த கட்சியான பாஜகவை எம்.பி. ஒருவர் செய்துள்ளார். அவர் வேறுயாருமல்ல பாரம்பரயமிக்க நேரு குடும்படுத்தைச் சேர்ந்தவரும் தற்போது பாஜக எம்.பி.யாகவும் இருக்கும் வருண் காந்திதான் தனது சொந்த கட்சியையே விமர்சனம் செய்துள்ளார்.

டிவிட்டரில் கருத்து
உத்தரபிரதேசத்தில் கடந்த 25ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது தொடர்பாக வருண் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இரவு நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்துவது, பகல் நேரத்தில் லட்சக்கணக்கான மக்களை பேரணியில் பங்கேற்க அழைப்பது சரியா என கேள்வியெழுப்பியுள்ளதோடு, அரசின் இந்த முடிவு சாதாரண மக்களின் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

வருண்காந்தி கருத்தால் அதிர்ச்சி
உத்தரபிரதேச மருத்துவ உள்கட்டமைப்பினை கருத்தில் கொண்டு ஒமைக்ரான் தொற்று பரவுவதை நிறுத்த வேண்டுமா? அல்லது நமது தேர்தல் அதிகாரத்தை வெளிப்படுத்த வேண்டுமா? என்பதில் எதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும் எனவும் வருண் காந்தி பதிவிட்டுள்ள நிலையில், இவரது கருத்து பாஜக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே தனக்கு உபி அரசியலில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என வருண்காந்தி கூறிவரும் நிலையில் ட்விட்டர் பதிவு மேலும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications