ரியல் எஸ்டேட் தலைநகரமாகும் அயோத்தி.. நிலம் வாங்கி குவிக்கும் விஐபிகள்..!
லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ள நிலையில் அங்கு எம்பிக்கள் எம்எல்ஏக்கள் முதல் டிஐஜி, மேயர், மாநில தகவல் ஆணையர் என முக்கியமான விஐபிகள் நிலங்களை வாங்கி குவித்து வருவதாக தனியார் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அது ராமர் பிறந்த இடம் என்றும் அங்கேதான் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற இந்து அமைப்புகளை நீண்டநாள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றது. அதில் பாரதிய ஜன சங்கம் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம். விஎச்பி எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் , பஜ்ரங்தள் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமான நபர்கள் பாபர் மசூதியை இடித்த னர்.
இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ராமர் பிறந்த இடம் என்பதால் அங்கு ராமர் கோயில் கட்ட வேண்டும் என இந்து அமைப்புகளும் பாபர் மசூதியை மீண்டும் அங்கு எழுப்ப வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகளும் தொடர்ந்து வாதாடி வந்தன . இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி உச்சநீதிமன்றம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கியது.

ராமர் கோவில் கட்ட அனுமதி
சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் இஸ்லாமியர்களுக்காக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கி அங்கு மசூதி கட்டிக் கொள்ளவும் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஸ்ரீ ராம ஜென்மபூமி ஷேத்ர அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அந்த அறக்கட்டளையின் மூலம் 70 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி அங்கு கோயில் கட்ட அடிக்கல் நாட்டினர் . இதை அடுத்து அங்கு கோவில் கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அயோத்தியில் நிலம் வாங்குவதற்காக முக்கியமான விவிஐபிக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நிலம் வாங்க ஆர்வம்
இது தொடர்பாக பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தலித் மக்களிடமிருந்து நிலம் வாங்குவதில் முறைகேடுகள் நடத்தியதாகக் கூறப்படும் மகரிஷி ராமாயண வித்யாபதி அறக்கட்டளையில் இருந்து 5 அதிகாரிகளின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் அயோத்தியின் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் நிலம் வாங்கி குவித்துள்ளது தெரிய வந்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கபட்ட நாளில் இருந்து அயோத்தியில் நிலம் வாங்க ஆர்வம் காட்டும் நபர்களில் உள்ளூர் எம்எல்ஏக்கள் முதல் மாநில அளவில் பணியில் உள்ள அதிகாரிகள் பலரும் பட்டியலில் உள்ளனர்.

அயோத்தியில் நிலம் வாங்கும் அதிகாரிகள்
அயோத்தியில் பணியாற்றும் அதிகாரிகள் உறவினர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மேயர், மாநில தகவல் ஆணையர் , டிஐஜி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் ஓபிசி ஆணையத்தின் உறுப்பினர் உள்ளிட்ட பலரும் 14 இடங்களில் நிலம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அயோத்தியில் நில மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் எதிர்காலத்தில் வசிப்பதற்காக அல்லது வணிக நோக்கங்களுக்காக இந்த வகையில் அதிகாரிகள் தங்களின் மகன் மகள் மற்றும் உறவினர்களின் பெயர்களில் நிலங்களை வாங்கி குவித்து உள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிகாரிகள், பிரமுகர்கள் பட்டியல்
அதே நேரத்தில் தலித் மக்களிடம் குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி பல கோடி மதிப்பை உயர்த்தி விற்ற குற்றச்சாட்டுக்கு ஆளான மகரிஷி ராமாயண வித்யாபதி அறக்கட்டளை நிறுவனத்திடமிருந்து 5 அதிகாரிகள் பல லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த நிலங்களை வாங்கியதாகவும் கூடுதல் தகவல்கள் தெரிவிக்கின்றன. அயோத்தி மாவட்டம் கோசைகஞ்ச் பகுதி எம்எல்ஏவான இந்திர பிரதாப் திவாரி, அயோத்தியின் டிவிஷ்னல் கமிஷ்னர் எம்பி அகர்வால் , காவல் துணை கண்காணிப்பாளர் தீபக் குமார், அயோத்தியின் தலைமை வருவாய் அதிகாரியாக பணியாற்றிய புருஷோத்தம் தாச் குப்தா ஆகியோர் தங்கள் உறவினர்கள் பெயரில் நிலம் வாங்கிய பதிவேடுகள் கிடைத்துள்ளது.

முக்கிய அதிகாரிகள்
இதேபோல், லக்னோவில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான உமாதர் திவேதி, அயோத்தி எம்எல்ஏ வேத் பிரகாஷ் குப்தா, அயோத்தி மேயர் ரிஷிகேஷ் உபாத்யாய், அயோத்தியின் முன்னாள் துணைப் பிரிவு மாஜிஸ்திரேட் ஆயுஷ் சவுத்ரி, மாகாண பொலிஸ் சேவை அதிகாரியான அரவிந்த் சௌராசியா, மாநில தகவல் ஆணையர் ஹர்ஷவர்த்தன் ஷாகி, மாநில ஓபிசி கமிஷனின் உறுப்பினர் மௌரியா உள்ளிட்ட பல அதிகாரிகளின் உறவினர்களின் பெயரில் இந்த நிலங்கள் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிலம் வாங்கியவர்கள் விளக்கம்
வாங்கிய நிலங்கள் மேலே குறிப்பிட்டுள்ள அதிகாரிகளின் பெயர்களில் நேரடியாக பதிவு செய்யப்படவில்லை என்றாலும் மகன் மகள் மனைவி மாமனார் உள்ளிட்டோரின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது இது குறித்து அதிகாரிகள் மற்றும் நிலத்தின் பதிவில் உள்ள நபர்களிடம் கேட்டபோது அதிகாரிகளுக்கும் நிலம் வாங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தனிப்பட்ட முறையில் நிலத்தை வாங்கி ஆன்மீக மற்றும் வீடு கட்டும் நோக்கத்திற்காகவே வாங்கியுள்ளதாக கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications