லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் மாஸ்க் அணியவில்லை.. எனக்கு அபராதம் போடுங்கள்.. மக்களை அசர வைத்த போலீஸ் உயர் அதிகாரி.. செம!

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் பொது ஆய்வாளருக்கு (ஐஜி) மாஸ்க் அணியாத காரணத்தால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது வைரலாகி உள்ளது. போலீஸ் உயர் அதிகாரி ஒருவருக்கு அங்கு அபராதம் விதிக்கப்பட்டது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

நாடு முழுக்க பல மாநிலங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்ட்டுள்ளது. பல மாநிலங்களில் இதற்காக அபராதம் விதிக்கப்பட்டு மக்களிடம் வசூலிக்கப்படுகிறது.

Kanpur IG fined himself for not wearing mask in public place

இந்த நிலையில் கான்பூரில் பொது ஆய்வாளர் (ஐஜி) மோஹித் அகர்வாலுக்கு மாஸ்க் அணியாத காரணத்தால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது வைரலாகி உள்ளது. போலீஸ் உயர் அதிகாரி ஒருவருக்கு அங்கு அபராதம் விதிக்கப்பட்டது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இவருக்கு பார்ரா போலீஸ் ஸ்டேஷன் அதிகாரி ரஞ்ஜீத் சிங் அபராதம் விதித்து இருக்கிறார். ஐஜி மோஹித் அகர்வால் தனக்கு அபராதம் விதிக்குமாறு கேட்டு, அபராதத்தை கட்டி இருக்கிறார். இதுகுறித்து அகர்வால் தெரிவிக்கையில், நான் பார்ரா பகுதிக்கு சோதனை செய்வதற்காக சென்றேன். காரை விட்டு இறங்கும் போதுதான் நான் மாஸ்க் கொண்டு வரவில்லை.

திருமணமாகி 8 மாதம்தான் ஆகிறது.. மருத்துவமனையில் அனுமதியான அன்றே கொரோனாவால் செய்தியாளர் பலி.. சோகம்!திருமணமாகி 8 மாதம்தான் ஆகிறது.. மருத்துவமனையில் அனுமதியான அன்றே கொரோனாவால் செய்தியாளர் பலி.. சோகம்!

மாஸ்க் அணியவில்லை என்பதை உணர்ந்தேன். என் தவறை உணர்ந்து கொண்டு போலீஸ் அதிகாரியிடம் அபராதம் விதிக்கும்படி கூறினேன். மக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்று இப்படி செய்தேன் என்று ஐஜி மோஹித் அகர்வால் குறிப்பிட்டு இருக்கிறார். அவரின் இந்த செயல் பெரிய பாராட்டுகளை பெற்று உள்ளது.

English summary
Kanpur IG fined himself for not wearing mask in public place in UP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X