லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதிக்க மாட்றாங்க! "சனாதன தர்மத்தை மீட்டெடுக்கனும்” .. சொல்கிறார் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்..!

Google Oneindia Tamil News

லக்னோ : இந்தியாவில் முறையான கல்வியைப் பரப்புவதன் மூலம் இந்தியாவின் பழைய கலாச்சாரத்தை மீட்டெடுக்கவும், சனாதன தர்மத்தை மீட்டெடுக்கவும் வேண்டியது அவசியம் என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே உபி, ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அங்கிருக்கும் மக்கள் தொடர்ச்சியாக புகார் அளித்து வருகின்றனர்.

கர்நாடகாவின் ஹிஜாப் விவகாரம், கடைகளில் ஹலால் இறைச்சி மற்றும் மசூதிகளில் ஒலிப் பெருக்கிக் தடை என வலதுசாரி அமைப்புகள் அடுத்தடுத்து கிளப்பி வரும் நிலையில், இந்தி விவகாரமும் இந்தியா முழுவதும் புயலைக் கிளப்பி வருகிறது.

உபி கொடூரம்! பிறந்த சில நொடிகளே ஆன பச்சிளம்.. கை நழுவி கீழே விழுந்ததால் பலி.. நடந்தது என்னஉபி கொடூரம்! பிறந்த சில நொடிகளே ஆன பச்சிளம்.. கை நழுவி கீழே விழுந்ததால் பலி.. நடந்தது என்ன

சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்

சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்

குறிப்பாக பாஜக தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியமைத்துள்ள உத்திரபிரதேசத்தில் இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாகவும், பல இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பொதுவெளியிலேயே பகிரங்கமாக மிரட்டல் விடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு வலதுசாரி அமைப்பினரின் ஆரவாரங்களுக்கு மத்தியில் பேசிய சாமியார் ஒருவர், இஸ்லாமிய பெண்களுக்கு பொது வெளியில் பாலியல் பாலாத்கார மிரட்டல் விடுத்தார்.

இஸ்லாமியர்களுக்கு மிரட்டல்

இஸ்லாமியர்களுக்கு மிரட்டல்

சீதாபூர் மாவட்டத்தில் ஜீப்பில் அமர்ந்தபடி ஒலிப்பெருக்கியில் பேசிய முனி தாஸ் என்ற சாமியார் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தோடு வகுப்புவாத மற்றும் ஆத்திரமூட்டும் கருத்துக்களை பேசினார். சீத்தாபூர் பகுதியில் உள்ள எந்த ஒரு பெண்ணையும் ஒரு இஸ்லாமியர் துன்புறுத்தினால் முஸ்லிம் பெண்களை கடத்தி பகிரங்கமாக பாலியல் பலாத்காரம் செய்வேன் என்று கூறினார். அவர் கைது செய்யப்பட்ட போதும் சில நாட்களிலேயே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மீண்டும் சனாதன தர்மம்

மீண்டும் சனாதன தர்மம்

இந்தியாவில் முறையான கல்வியைப் பரப்புவதன் மூலம் இந்தியாவின் பழைய கலாச்சாரத்தை மீட்டெடுக்கவும், சனாதன தர்மத்தை மீட்டெடுக்கவும் வேண்டியது அவசியம் என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் வலியுறுத்தியுள்ளார். உத்தரபிரதேசத்தில் ஷாஜஹான்பூர் மாவட்டத்தின் கலான் நகரில் ஒரு தனியார் பள்ளி திறப்பு நிகழ்ச்சியில் கேரள மாநில ஆளுநரான ஆரிப் முகமது கான் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உமேஷ் பிரதாப் சிங், காவல் கண்காணிப்பாளர் எஸ் ஆனந்த், எம்எல்ஏ ஹரி பிரகாஷ் வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆளுநர் ஆரிப் முகமது கான்

ஆளுநர் ஆரிப் முகமது கான்

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆரிப் முகமது கான், இந்தியாவில் முறையான கல்வியைப் பரப்புவதன் மூலம் இந்தியாவின் பழைய கலாச்சாரத்தை மீட்டெடுக்கவும், சனாதன தர்ம கொள்கைகளை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பேசுகையில், நாட்டின் பழைய கலாச்சாரத்தை மீட்டெடுக்க அனைவரும் பாடுபட வேண்டும். நாம் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதற்காக அல்ல, ஆனால் சனாதன கொள்கைகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதற்காக.

இழிவாக பார்க்க முடியாது

இழிவாக பார்க்க முடியாது

கல்வி இல்லாமல் இது சாத்தியமில்லை. மனித வாழ்வின் நோக்கம் அறிவை அடைவதே, பணிவு என்பது அறிவின் விளைவு என்றார் சுவாமி விவேகானந்தர். பணிவு உள்ள எவரையும் இழிவாகப் பார்க்க முடியாது." என பேசினார். சனாதன தர்மம் என்பது சாதி அடிப்படையில் மக்களை பிரிப்பது என கூறப்படும் நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் கேரள மாநில ஆளுநர் சனாதன தர்மத்தை மீண்டும் கொண்டுவர வேண்டுமென பேசியது இந்திய அளவில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

English summary
Kerala Governor Arif Mohammad Khan has stressed the need to revive India's old culture and Sanatana Dharma by spreading formal education in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X