லக்கிம்பூர் விவசாயிகள் கொலை...ஒரு வார்த்தை சொல்லாமல் மவுனம் காப்பது ஏன் - மோடியை கேட்ட கபில் சிபல்

லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசம், லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி ஒரு வார்த்தைக்கூட எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் மாநில துணை முதல்வர் மற்றும் மத்திய இணையமைச்சர் உள்ளிட்டோர் விழா ஒன்றிற்கு பங்கேற்க சென்ற போது அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும் விவசாயிகள் கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களின் பின்னால் வந்த கார் விவசாயிகள் மீது மோதி தூக்கி வீசியது. அப்போது விவசாயிகள் கூக்குரல் எழுப்பிக்கொண்டு சிதறி ஓடினர். பின்னாலேயே இரண்டு கார்களும் வரிசையாக சென்றன. இதில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் நால்வர் உயிரிழந்தனர்.

Lakhimpur Kheri riot - Kapil Sibal To PM Modi On Farmers Killing

இந்த கொலை சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் இந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர். உயிரிழந்தவர்களுக்கு நீதி நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் உத்தரபிரதேச மாநில காவல்துறையினர் மத்திய அமைச்சர் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவாவை உத்தரபிரதேச மாநில அரசு நியமித்துள்ளது. கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்பும் மத்திய உள்துறை இணை அமைச்சர் மிஸ்ரா தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை.

அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் லவ் குஷ், ஆஷிஸ் பாண்டே என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரின் மகனும் இதுவரை போலீஸார் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை.

லக்கிம்பூர் கெரி விவகாரத்தை காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. லக்கிம்பூர் கெரி கலவரம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் வலியுறுத்தியிருந்தார்.

லக்கிம்பூர் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியதும் அதற்கு கபில் சிபல் நன்றியும் தெரிவித்திருந்தார். இந்தியாவில் நீதியின் கோயில்கள் நீதிமன்றங்கள். அதுதான் குரலற்றவர்களின் நம்பிக்கையான இடம் எனவும் கபில் சிபல் தெரிவித்திருந்தார்.

இதனிடையே கபில் சிபல் ட்விட்டரில் பிரதமர் மோடிக்குக் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், லக்கிம்பூர் கெரி சம்பவம் உண்மையில் கொடூரமானது. ஆனால், ஏன் நீங்கள் அதுகுறித்து அறிந்தும் மவுனமாக இருக்கிறீர்கள் மோடி என்று பதிவிட்டுள்ளார்.

கலவரத்தில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்காகக் குறைந்தபட்சம் ஒரு இரங்கல் வார்த்தை உங்களிடம் இருந்து வருவது எங்களுக்கு அவசியம். அது ஒன்றும் கடினமானதாக இருக்காதே என்று கூறியுள்ள கபில்சிபல், நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்திருந்தால், எவ்வாறு நீங்கள் எதிர்வினையாற்றி இருப்பீர்கள். தயவுசெய்து எங்களிடம் கூறுங்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+