லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வினோதம்.. ஒரே மேடையில்.. தாய்க்கும் மகளுக்கும் திருமணம்.. பரஸ்பரம் வாழ்த்து கூறிய புதுமாப்பிள்ளைகள்!

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூரில் ஒரே திருமண மண்டபத்தில் தாய்க்கும் மகளுக்கும் திருமணம் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் வினோதமாகவும் இருக்கிறது.

பொதுவாக சிறு வயதில் 10 -ஆம் வகுப்போ 12 ஆம் வகுப்போ அல்லது அதற்கு கீழ் உள்ள வகுப்புகளில் பெண்களோ ஆண்களோ தேர்ச்சி பெற முடியாத நிலை ஏற்படும். பின்னர் அப்படியே வேலை, திருமணம், குழந்தை என செட்டிலாகிவிடுவர்.

சில வீடுகளில் படிப்பை பாதியில் விட்ட ஆணுக்கோ பெண்ணுக்கோ படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் இல்லாவிட்டால் ஏதேனும் தேவை இருக்கும். இதற்காக தங்கள் மகன், மகளிடம் பாடத்தை கற்றுக் கொண்டு ஒரே நேரத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதை பார்த்துள்ளோம்.

திருமணம்

திருமணம்

ஆனால் உத்தரப்பிரதேசத்தில் சற்று வித்தியாசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. தாயும் மகளும் ஒரே திருமண மண்டபத்தில் திருமணம் செய்து கொண்டனர். கோரக்பூரில் பிப்ராலியை சேர்ந்தவர் பேலி தேவி (53). இவருக்கு 27 வயதில் இந்து உள்பட 3 மகளும், இரு மகன்களும் உள்ளனர்.

கணவரின் தம்பி

கணவரின் தம்பி

பேலி தேவியின் கணவர் ஹரிஹரன் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டார். இந்த நிலையில் இவர்களது இரு மகள்கள், இரு மகன்களுக்கு திருமணமாகிவிட்டது. இந்துவுக்கு மட்டும் திருமணம் ஆகாமல் இருந்தது. இந்த நிலையில் பேலி தேவி தனது மீதமுள்ள வாழ்க்கையை தனது கணவரின் தம்பி ஜெகதீஷுடன் கழிக்க விரும்பினார்.

ஒரே மேடை

ஒரே மேடை

இவருக்கு இன்னமும் திருமணமாகவில்லை. இதற்கு பேலி தேவியின் மகன்களோ, மகள்களோ யாரும் மறுப்பு சொல்லவில்லை. இதையடுத்து தனது மகள் இந்துவுக்கு ராகுல் என்பவரை திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். இதையடுத்து இந்துவும் பேலி தேவியும் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகவில்லை

திருமணமாகவில்லை

இதுகுறித்து பேலி தேவி கூறுகையில் ஜெகதீஷ் ஒரு விவசாயி, அவர் எனது கணவரின் தம்பி என்றாலும் என்னை விட மூத்தவர். அவருக்கு திருமணமாகவில்லை. இதனால் நான் அவரை திருமணம் செய்ய விரும்பினேன். இந்த முடிவால் எனது பிள்ளைகள் மகிழ்ச்சியாகவே உள்ளார்கள் என்றார் பேலி தேவி.

English summary
Mother and daughter get married in same marriage hall in Uttar pradesh's Gorakhpur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X