லக்கிம்பூர் கலவரம் : உயிரிழந்த விவசாயி வீட்டுக்கு செல்ல முயன்ற பிரியங்கா காந்தி கைது
வன்முறையால் பாதிக்கப்பட்ட லக்கிம்பூர் கெரிக்கு செல்ல முயன்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். பிரியங்கா கைதுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பலியான குடும்பங்களுக்கு ஆறுதல் கூற போன பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு உள்ளார். கலவரம் மேலும் பரவாமல் தடுக்க அங்கு இணைய தள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பிரியங்கா கைதுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் லகிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது. அதனை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள்,வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறினார்கள்.

விவசாயிகளை அடிக்கடி பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு, வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதில் பிடிவாதமாக உள்ளது. அடுத்த ஆண்டு உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் இங்கு பாஜகவுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி அருகே உள்ள மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கிராமத்தில் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதில் உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருந்தார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு செல்லும் பாஜக தலைவர்களுக்கு கருப்பு கொடி காட்டி விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
லக்கிம்பூரில் திரண்ட ஏராளமான விவசாயிகள் திரண்டு நின்றிருந்தனர். துணை முதல்வர் மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்தபோது விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டனர். அப்போது விவசாயிகளுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. மோதல் பின்னர் வன்முறையாக மாறியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். மேலும், பாஜக தொண்டர்கள் சிலரும் விவசாயிகளை கலைக்க முயன்றனர். துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர். இந்த விபத்தில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்த நிலையில், 8 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் லக்கிம்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருண்குமார் சிங், நான்கு விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். விவசாய சங்கங்கள் அமைச்சருடன் பாதுகாப்புக்கு வந்த ஒரு வாகனத்தில் அவரது மகனும், உறவினர்களும் வந்துள்ளனர். அந்த காரே விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனை அமைச்சரும் அவரது மகனும் மறுத்துள்ளனர். என் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை, இந்த விவகாரம் குறித்து நீதி மன்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ரா தேனியின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கூறினார்.
கலவர சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிற்பகல் 1 மணிக்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலங்கள் முன்பு போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த சம்பவத்தை தொடர்ந்து, விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாய்ட் மற்றும் பஞ்சாப், ஹரியானவை சேர்ந்த விவசாயிகள் உத்தர பிரதேசம் விரைந்துள்ளனர்.

வன்முறை மேலும் பரவாமல் இருக்க லகிம்பூர் கேரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
லக்கிம்பூர் வன்முறை குறித்து சிபிஐ விசாரணை நடத்த ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது. டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், "இது போன்ற கொடூரமான குற்றம்" செய்தவர்களுக்கு "கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதனிடையே வன்முறை நடைபெற்ற பன்வீர்பூருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று நேரில் செல்வதாக இருந்தது. இதற்காக, அவர் லக்னோவில் இருந்து இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு காரில் சென்றார்.
ஆனால், பிரியங்கா காந்தியை பன்வீர்பூர் கிராமத்திற்குள் நுழைய போலீசார் அனுமதிக்கவில்லை. அவரை கிராம எல்லையிலேயே தடுத்து நிறுத்தினர். மேலும், போலீசார் அங்கு அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளதற்கு மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். விவரம் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு தெரிய வந்துள்ளதால் அவாகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications