பாஜக கோட்டை விட்ட தொகுதிகளை சரியாக கேட்ச் செய்த சமாஜ்வாதி & சிறு கட்சிகள்! சோனியா கோட்டை தகர்ந்தது
லக்னோ: 2022 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று 2 வது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தாலும் அங்குள்ள பாஸ்சிம், ஆவாத், புந்தேல்கண்ட், புர்வாஞ்சல் மண்டலங்களில் பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் இழந்த இடங்களை சமாஜ்வாடி மற்றும் சிறிய கட்சிகள் கைப்பற்றி இருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் முதல் முறை தேர்தலில் போட்டியிட்டவர்களிடம் தோல்வியை தழுவி இருக்கிறார்கள். யோகி தலைமையிலான பாஜக அரசில் உத்தரப்பிரதேச துணை முதலமைச்சராக பதவி வகித்த கேசவ் பிரசாத் மௌரியா கமெரவதி தொகுதியில் அப்னா தளம் கட்சி வேட்பாளர் பல்லவி பட்டேலிடம் தோல்வியடைந்துள்ளார்.

புந்தேல்கண்ட்:
கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் இங்குள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்ற பாஜக இம்முறை 16 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. மீதமுள்ள 3 தொகுதிகளை சமாஜ்வாடி கட்சி கைபற்றி இருக்கிறது.

புர்வாஞ்சல்:
பிரதமர் மோடியின் வாரணாசி, யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் உள்ளிட்ட தொகுதிகளை கொண்ட இந்த மண்டலத்தில் பாரதிய ஜனதாவின் வெற்றியை தட்டிப்பறிக்க எதிர்க்கட்சிகள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டன. இதில் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளையும் பாஜக வென்றாலும் இந்த மண்டலத்தில் இழப்பை சந்தித்து இருக்கிறது.

மோடி - யோகியின் மண்டலத்திலேயே பாஜகவுக்கு இழப்பு:
2017 ஆம் ஆண்டு 114 தொகுதிகளை வென்ற பாஜகவால் இம்முறை 86 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்திருக்கிறது. கடந்த முறை 12 இடங்களை இந்த மண்டலத்தில் வென்ற பகுஜன் சமாஜ் இம்முறை ஒரேஒரு இடத்தில் மட்டுமே வென்றுள்ளது. அதே நேரம் கடந்த முறை 16 தொகுதிகளை தன்வசம் வைத்திருந்த சமாஜ்வாடி இம்முறை 55 தொகுதிகளில் வென்றிருக்கிறது.

பாஸ்சிம்:
மேற்கு உத்தரப்பிரதேச மண்டலமான இது கரும்பு பெல்ட் என்றும் ஹரித் பிரதேஷ் என்றும் அழைக்கப்படுகிறது. மிகப்பெரும் மதக்கலவரத்துக்கு இலக்கான முசாஃபர்நகரை உள்ளடக்கிய இப்பகுதியில் கடந்த முறை 109 தொகுதிகளை வென்ற பாஜக இம்முறை 93 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அதே நேரம் சமாஜ்வாடி கட்சியின் கூட்டணியான ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி இம்முறை 8 இடங்களில் வெற்றிபெற்று உள்ளது. கடந்த முறை இக்கட்சி வெறும் ஒரு இடத்தில் மட்டுமே வென்று இருக்கிறது.
இந்த மண்டலத்துக்கு உட்பட்ட கர்ஹால் தொகுதியில் தான் அகிலேஷ் யாதவும் போட்டியிட்டு வெற்றிபெற்று இருக்கிறார். ஜாட் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான அலை பாஜகவுக்கு எதிராக வீசும் என கணிக்கப்பட்டது. ஆனால், அதிக இழப்பை இம்முறை பாஜக சந்திக்கவில்லை என்பதே உண்மை,

ஆவாத்:
ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இந்த மண்டலம் கருதப்பட்டது. தலைநகர் லக்னோ, ரேபரேலி, கான்பூர் என முக்கிய தொகுதிகள் இந்த மண்டலத்துக்குள் வருகின்றன. இதிலும் பாஜக அதிக இழப்பை சந்திக்கவில்லை. கடந்த 2017 தேர்தலில் 67 இடங்களில் வென்ற அக்கட்சி இம்முறை 62 இடங்களில் வென்றுள்ளது. சமாஜ்வாடி கடந்த முறை 10 இடங்களில் வென்ற நிலையில் இம்முறை 18 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் 3 இடங்களிலும் பகுஜன் சமாஜ் 2 இடங்களிலும் வெற்றி கண்டுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications