லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மசூதியில் யாகம் நடத்த போறேன்".. பெண் சாமியார் சாத்வி பிராச்சி அறிவிப்பு.. பதட்டத்தில் கிராமம்!

சர்ச்சையான கருத்து சொன்ன விஎச்பி தலைவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

லக்னோ: உத்திரபிரதேச மசூதியில் யாகம் நடத்துவதாக விஸ்வ இந்து பரிஷத்தின் முக்கிய பெண் தலைவர் , சாத்வி பிராச்சி அறிவித்துள்ளது பெரும் பதற்றத்தை அங்கு ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம் அலிகருக்கு அருகில் நூர்பூர் என்ற கிராமம் உள்ளது.. இங்கு முஸ்லிம்கள் வசித்து வருகிறார்கள்.. அதேபோல கிட்டத்தட்ட 1000 தலித்துகள் வாழ்கின்றனர்...

இவர்களது கல்யாண ஊர்வலங்கள் ஊர்வலங்கள் அனைத்தும் முஸ்லிம்களின் முக்கிய தெருக்களில் செல்வது வழக்கமாக இருந்துள்ளது.

நல்லாட்சிக்கான முதல்படி.. தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு பாராட்டுக்கள்.. ஜக்கி வாசுதேவ் டிவிட்! நல்லாட்சிக்கான முதல்படி.. தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு பாராட்டுக்கள்.. ஜக்கி வாசுதேவ் டிவிட்!

தெருக்கள்

தெருக்கள்

அதாவது, மசூதிகளின் தெருக்களையும் கடக்கும்போது, இந்த ஊர்வலங்களில், பாட்டு கச்சேரியும், மேளதாளங்களும் ஒலிக்கும்.. இதுதான் முஸ்லிம்களுக்கு இடைஞ்சலாக இருந்துள்ளது.. தொழுகை நேரத்தில் மசூதிக்கு முன்பாக செல்ல அனுமதிக்க முடியாது என முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.. அதனால், தலித் - முஸ்லிம்களுக்கு இடையே பிரச்சனை மோதலாகியது.. சமூக ஒற்றுமையும் குலைந்து வருகிறது..

கிராமம்

கிராமம்

இந்நிலையில்தான், கடந்த வாரம் முதல் இவர்களின் மோதல் முற்றி வருகிறது..இதனால், தலித் பஞ்சாயத்தினர், தங்கள் வீடுகளை விற்று கிராமத்தை விட்டு வெளியேறுவது என முடிவு செய்தனர்... உடனே, அந்த கிராமத்தின் தலித் குடும்பத்து வீடுகளின் கதவுகளிலும், சுவர்களிலும் "தங்கள் வீடு விற்பனைக்கு" என்ற அறிவிப்பை எழுதி வைத்துவிட்டனர்.. இப்படி ஒரு வாரமாகவே அந்த ஊர் பதற்றத்தில் உள்ளது..

தலித்

தலித்

இந்த சம்பவம், அடுத்த வருடம் உபியில் நடக்க போகும் சட்டப்பேரவை தேர்தலில் தலித் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே நிச்சயம் ஒரு பிளவை உருவாக்கும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், விஸ்வ இந்து பரிஷத்தின் முக்கிய தலைவரான சாத்வி பிராச்சி என்பவர், மசூதியில் யாகம் நடத்துவதாக அறிவித்திருக்கிறார்.. இதனால் அந்த கிராமமே மேலும் பதட்டமாகி உள்ளது.. நூர்பூரில் ஏராளமான போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது..

 சர்ச்சை அறிவிப்பு

சர்ச்சை அறிவிப்பு


சாத்வி பிரக்யாவைபோல, சாத்வி பிராச்சி என்பவரும் அங்கு ஃபேமஸான பெண் தலைவர்.. மூத்த பெண் தலைவராக இருந்தாலும், பிரக்யாவை போலவே, அடிக்கடி சர்ச்சை பேச்சைகளை பேசி பலரது அதிருப்திகளுக்கும் ஆளானவர்.. நேற்றைய தினம், மசூதியில் யாகம் நடத்த போவதாக இவர் சொன்னதுமே, அலிகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பாஜக மற்றும் விஎச்பியினர் நூர்பூரில் குவிய துவங்கினர். இதனால், 2 சமுதாயங்களுக்குள் மோதல் உருவாகும் அச்சமும் எழுந்தது.

போலீஸ்

போலீஸ்

ஆனால், அதற்குள் போலீசார் இவர்களை நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர்... இதையடுத்து 2 தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது... இப்படி ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதுமே, அங்கு வருவதாக சொல்லி இருந்த சாத்வி பிராச்சியும் வரவில்லை... எனினும் போலீஸார் தொடர்ந்து பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

English summary
UP VHP Satvi Prachi to perform Yajna in the mosque
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X