இந்து - முஸ்லீம் மக்கள்தொகை வித்தியாசம்.. உ.பி அரசின் ஒரு குழந்தை திட்டத்திற்கு.. விஹெச்பி எதிர்ப்பு
லக்னோ: அசாம், கேரளா போன்ற மாநிலங்களில் இந்துக்களைக் காட்டிலும் இஸ்லாமியர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதம் அதிகமாக உள்ளதாகவும் எனவே உபி-இல் ஒரு குழந்தை திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் மக்கள்தொகை பெருக்கும் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய மக்கள்தொகை கொள்கையை உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
இதில் இரண்டு குழந்தைகளைவிட அதிகமாகப் பெற்றுக் கொள்பவர்கள் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியாது, உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட முடியாது என பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன.

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு
உபி பாஜக அரசின் இந்த புதிய கொள்கையைச் சிலர் விமர்சித்திருந்தாலும் பலரும் வரவேற்கும் வகையிலேயே கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இதற்கு விஹெச்பி எனப்படும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து விஹெச்பி அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் எழுதியுள்ள கடிதத்தில், "உத்தரப் பிரதேசத்தில் மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என்பதை வரவேற்கிறோம்.

ஒரு குழந்தை திட்டம்
ஆனால் இதிலுள்ள சில விதிகள் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக ஒரு குழந்தை திட்டம். அதில் நிறையச் சிக்கல் உள்ளன. ஒரு குழந்தை மட்டும் இருக்கும் வீடுகளில் அந்தக் குழந்தையால் சரியாகத் தனது எண்ணங்களைக்கூட வெளியாக்க முடியாத நிலையே இருக்கும். இந்தத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இதற்குப் பதிலாக இரண்டு குழந்தை திட்டத்தை முன்னெடுக்கலாம். அது சரியாக இருக்கும்.

குழந்தைகள் தண்டிப்பது தவறு
சீனா கூட ஒரு குழந்தை திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இதனால் எழுந்த சிக்கலை உணர்ந்து அத்திட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது. பெற்றோர்கள் அதிக குழந்தை பெற்றால், அதற்குக் குழந்தைகளை எப்படித் தண்டிக்கலாம். பெற்றோர்களை அல்லவா தண்டிக்க வேண்டும். அதேபோல இரு வேறு சமூகங்களுக்கு இடையேயான மக்கள்தொகை வித்தியாசமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உதாரணத்திற்கு அசாம் மற்றும் கேரளா மாநிலங்களிலை எடுத்துக் கொள்ளலாம். அங்கு ஒட்டுமொத்த மக்கள்தொகை குறைந்துள்ளன.

இந்துக்கள் இஸ்லாமியர்கள்
அதேநேரம் இன்னொரு விஷயத்தை நாம் இதில் பார்க்க வேண்டும். இந்த இரு மாநிலங்களிலும் இந்துக்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் விகிதம் 2.1ஆக உள்ளது. ஆனால் இஸ்லாமியர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் விகிதம் அசாமில் 3.16ஆகவும் கேரளாவில் 2.33ஆகவும் உள்ளது. உத்தரப் பிரதேசத்திலும் இதேபோன்ற ஒரு நிலை ஏற்படக் கூடாது என்றால் இந்தத் திட்டத்தை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும்" என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications