இளம் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள்..அதன் பின் அவர்கள் செய்த காரியம் கொடூரத்தின் உச்சம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணுக்கு, அதன் பின்னர் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்தியாவில் சமீப ஆண்டுகளாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குடும்ப வன்முறை ஒருபுறம் என்றால், பாலியல் குற்றங்களும் மறுபுறம் அதிகரித்து வருகிறது.
பாலியல் குற்றங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை தேவை என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தியோபந்த் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். கடந்த ஜனவரி மாதம் அந்தப் பெண் வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் இளைஞன் ஒருவன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளான். தனியாக இருந்த அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன், அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளான்.

அத்துமீறிய இளைஞன்
இது தொடர்பாகப் போலீசில் புகார் அளித்தால் பெற்றோரைக் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளான். மேலும், அந்த வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டி உள்ளான். இதனால் அந்தப் பெண் யாரிடமும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார். அதன் பின்னர் பல்வேறு நேரங்களில், அந்த நபர் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

கூட்டு பலத்காரம்
மேலும், ஒரு நாள் அந்த பெண் தியோபந் பகுதியில் இருந்த கட்டிடம் ஒன்றுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பிணைக் கைதியாக வைத்துள்ளார். அங்கு வந்த 25-30 வயதுடைய மூன்று ஆண்கள் அந்தப் பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் அந்தப் பெண் கருவுற்று இருக்கிறார். அவர் கர்ப்பமாக இருப்பதை அறிந்து கொண்ட இளைஞன், கடந்த ஜூன் 25ஆம் தேதி அவளைக் கொலை செய்ய முயன்றுள்ளார். நல்வாய்ப்பாக அந்தப் பெண் அவனிடம் இருந்து தப்பி, வீட்டிற்கு திரும்பிவிட்டாள்.

கொடூர செயல்
இருப்பினும், அதற்கு மறுநாளே அதாவது ஜூன் 26ஆம் தேதி அந்த நான்கு இளைஞர்களும் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள்ளேயே நுழைந்து உள்ளனர். அந்த இளம் பெண்ணை கொடூரமாக அடித்துத் தாக்கி உள்ளனர். இந்தத் தாக்குதலில் அந்தப் பெண்ணுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

போலீசார்
அந்தப் பெண் கொடுத்த தகவல் அடிப்படையில், தலைமறைவாக உள்ள 4 குற்றவாளிகளையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கருச்சிதைவு ஏற்பட்டதன் காரணமாக அந்தப் பெண் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்தப் பெண், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications