அடல் பிஹாரி வாஜ்பாயின் கனவை உ.பி அரசு நிஜமாக்கியுள்ளது! முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்பது அடல் பிஹாரி வாஜ்பாய் என்றும் அதை பாஜக உ.பி பாஜக நிஜமாக்கி வருகிறது எனவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரப் பிரதேசம் தொடர்பாக பேச்சு பரவலாக அடிப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் செய்த சாதனைகளை பாஜவினர் தொடர்ந்து பட்டியலிட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இந்த மாநாடு குறித்து பேசிய அவர், "முதலீட்டாளர்கள் மாநாடு வழக்கமாக டெல்லி, மும்பையில்தான் நடக்கும். ஆனால் நாங்கள் முதலீட்டாளர்களை உத்தரப் பிரதேசத்திற்கு கொண்டு வந்துள்ளோம். எதை முடியாது என்று சொன்னார்களோ, அதை நாங்கள் வெற்றிகரமாக நடத்திக்காட்டியிருக்கிறோம். அதேபோல பட்ஜெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் நிதியை ஒதுக்கியுள்ளோம். இந்த பட்ஜெட்டில் உட்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறோம்.
மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய மருத்துவக்கல்லூரி உருவாக்கப்படும். உட்கட்டமைப்பில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனி மாநிலத்தின் ஒவ்வொருவருக்கும் வீடு உறுதி செய்யப்படும். வீடுகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வெளியேற்றும் வசதிகள் உறுதி செய்யப்படும். தேசிய தலைநகருக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தை போல மாநில தலைநகர்களுக்கும் போதிய அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும். லக்னோ புதிய உட்கட்டமைப்புடன் சிறப்பாக மேம்படுத்தப்படும். லக்னோவின் உட்கட்டமைப்பு எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இதன் காரணமாக போக்குவரத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே நாங்கள் தலைநகரை மறு கட்டமைப்பு செய்கிறோம். இதில் பழைய சிக்கல்களுக்கு உரிய தீர்வு காணப்படும். இதேபோன்று திட்டங்கள் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் எனில் நாடு 2047ம் ஆண்டு வல்லரசாகும். அடல் பிஹாரி வாஜ்பாய் லக்னோவை மேம்படுத்துவது குறித்து கனவு கண்டார். அதை நாங்கள் நிஜமாக்கி வருகிறோம்" என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications