120 கோடியா? பெரிய செட் ஏன்? ”என் ஆசை இதுதான்”.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் மூர்த்தி!
மதுரை : எனது மகன் திருமணத்தை மிகைப்படுத்தி பேசுவது உண்மைக்கு மாறானது. அனைவருக்கும் சமமாக உணவு வழங்கப்பட்டது. வருபவர்கள் காத்திருக்காமல் சாப்பிடவே பெரிய பந்தல் அமைக்கப்பட்டது என விளக்கம் அளித்துள்ளார் திமுக அமைச்சர் பி.மூர்த்தி.
மதுரையில் கடந்த வாரம் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் மகன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
இந்த திருமண விழாவின்போது, பிரமாண்ட செட் அமைத்து, பெரிய பந்தல் போட்டு, சுமார் 1 லட்சம் பேருக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது.
அமைச்சர் மூர்த்தி தனது மகனின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தியது சர்ச்சைகளைக் கிளப்பியது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் இதனை விமர்சித்திருந்தனர்.

ஊரே வியந்த திருமணம்
மதுரையில் சமீபத்தில் அமைச்சர் மூர்த்தி இல்லத் திருமணம் மிகப்பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. மதுரை பாண்டி கோயில் அருகேயுள்ள மைதானத்தில் நடைபெற்ற அமைச்சர் மூர்த்தியின் மகன் திருமண விழாவுக்கு, கோட்டை போன்ற பிரமாண்ட நுழைவு வாயில், பல்லாயிரக் கணக்கானோர் அமரும் வகையில் பந்தல், ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் சாப்பிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஊரே வியக்கும் அளவுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

நூறு கோடியாமே
கல்யாணத்திற்கு வந்த தொண்டர்கள், பொதுமக்கள் வயிறாரச் சாப்பிட்டு வாழ்த்திய நிலையில், இதுவே அமைச்சர் மூர்த்திக்கு தலைவலியையும் ஏற்படுத்தியது. திருமண அரங்கத்துக்கு வரும் வழி நெடுக ஆயிரக்கணக்கான கரும்புகளும், குலை வாழைகளும், தென்னக் குலைகளும் கட்டப்பட்டிருந்ததும், சாப்பிடும் அரங்கம் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்ததும், இந்த திருமணத்திற்கு ரூ. 100 கோடி செலவானதாமே, இல்லை 120 கோடியாம் என யூகங்களை கிளப்பிவிட்டது.

கப்பென பிடித்த அதிமுக
அமைச்சர் மூர்த்தி இல்லத் திருமணம் 120 கோடி செலவில் நடந்ததாக பரவிய தகவலை கப்பென பிடித்த அதிமுகவினர், முதல் முறை அமைச்சராக இருக்கும் மூர்த்திக்கு, தனது மகன் திருமணத்தை நூறு கோடியில் எப்படி நடந்த முடிந்தது என கேள்விக்கணைகளைத் தொடுத்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் அமைச்சர் மூர்த்தி இல்லத் திருமணம் நடத்தப்பட்ட விதம் குறித்து விமர்சித்திருந்தனர்.

அமைச்சர் அப்செட்
சமூக ஊடகங்களிலும் அமைச்சர் இல்லத் திருமணம் ட்ரெண்ட் ஆனது. பிரமாண்டமாக நடந்தது ஒருபக்கம் என்றால், அதற்கு இவ்வளவு பட்ஜெட்டாமே என பரவிய தகவல்களால் அமைச்சர் மூர்த்தி அப்செட் ஆனார். இது திமுக அரசுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விடும் என்பதால் கொஞ்சம் கவலையுற்ற மூர்த்தி, தன் மகன் திருமணம் பற்றி பரவும் தகவல்களுக்கு செய்தியாளர் சந்திப்பிலேயே விளக்கம் கொடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இவ்வளவு செலவழிப்பார்களா?
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் மூர்த்தி, "திமுக முப்பெரும் விழாவுக்கு போடப்பட்ட அதே செட் தான் என் மகன் திருமணத்துக்காக மதுரையில் போடப்பட்டது. அந்த செட் போட எவ்வளவு ஆகும் என்று, அவர்களிடமே கேளுங்கள். என் மகன் திருமணத்தின்போது பொதுமக்களுக்கு ஏதாவது இடையூறு ஏற்பட்டதா? யாராவது ஏதாவது சொல்கிறார்கள் என்பதற்காக அது உண்மையாகிவிடுமா? கல்யாணத்துக்குப் போய் அவ்வளவு செலவழிப்பார்களா?

காத்திருக்காமல் சாப்பிடவேண்டும் என்பதற்காகவே
சாப்பாடு எல்லோருக்கும் பாகுபாடு இல்லாமல் போடப்பட்டது. உயர்மட்டம், சாதாரண மனிதர்கள் என பார்க்காமல், விஐபிகள், தொண்டர்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு பரிமாறப்பட்டது. கல்யாணத்திற்கு வருபவர்கள் காத்திருக்காமல் சாப்பிட்டுவிட்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே பெரிய பந்தல் கூடம் அமைக்கப்பட்டு உணவு பரிமாறப்பட்டது. கல்யாணத்திற்கு எல்லா செலவுகளும் மினிமம் ஆகவே செய்யப்பட்டது. அதை மிகைப்படுத்தி சொல்கிறார்கள்.

அட எல்லாம் பொய்யாம்
யாரும் சாப்பிடுவதற்காக காத்திருக்கக் கூடாது. அனைவரையும் ஒன்றாக அமர வைத்து சாப்பிட வைக்க வேண்டும் என்பது தான் எனது எண்ணம். அதைத்தான் செய்தேன். இதுதான் திமுகவின் சமூக நீதி. இந்த திருமணத்தால் யாருக்கும் இடையூறு ஏற்படவில்லை. மக்கள் தங்கள் இல்ல விழாவிற்கு வந்தது போல் வந்து சென்றார்கள். அனைவரும் வயிராற சாப்பிட்டு சென்றார்கள். அதுவே எனக்கு மகிழ்ச்சி. ஆனால் கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு ரூ.120 கோடி செலவு என்று சொல்வதெல்லாம் முற்றிலும் பொய்." எனத் தெரிவித்துள்ளார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications