இன்னொரு குவாட்டர் சொல்லு குமாரு.. ஓசி சரக்கு கும்பல் அட்டகாசம்.. போர்க்களமான மதுரை மதுக்கடை!
மதுரை: மதுரையில் மது அருந்த சென்ற கும்பல் காசு தீர்ந்ததால் அருகில் இருந்தவரிடம் இலவசமாக மது வாங்கி தர சொல்லி தகராறு செய்து மதுக்கடையை அடித்து நொறுக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரையில் மதுப்பிரியர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பு மதியம் 12 மணிக்கு தான் கடை திறக்கும் என்பதால் அதன்பிறகே பிரச்சனைகளும் ஆரம்பம் ஆகும். ஆனால் காலை 10 மணிக்கு கடை திறக்கப்படுவதால் காலையிலேயே மதுரையில் பிளாட்பாரங்களை ஆக்கிரமித்து கொள்கிறார்கள்.
குடித்துவிட்டு கடைகளில் செய்யும் அலம்பல் ஓவராகவே உள்ளது. இரவில் இன்னும் அதிகம். சண்டைகள், மோதல், விபத்து போன்ற பல பிரச்சனைகள் மது அருந்துபவர்களால் ஏற்படுகிறது. அப்படி ஒரு பிரச்சனை தான் மதுரை மாநகரில் அண்மையில் நடந்துள்ளது. .

கும்பல்
மதுரை அ.கல்லுப்பட்டியை சேர்ந்த அருண்பிரகாஷ் என்பவர் நேற்று மாலை எல்லீஸ்நகர் 70 அடி ரோட்டில் உள்ள மதுபான கூடத்துக்கு மது அருந்த சென்றார். அப்போது அங்கு 5 பேர் கொண்ட கும்பல் அருண் பிரகாஷிடம் தங்களுக்கு இலவசமாக மதுபானம் வாங்கித் தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு அருண் பிரகாஷ் மறுத்து விட்டார்.

அடித்து நொறுக்கினர்
இதையடுத்து இரண்டு தரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. எனவே ஆத்திரமடைந்த 5 பேரும் பீர் பாட்டிலால் அருண் பிரகாஷை சரமாரியாக தாக்கினார்கள். இதனைத் தொடர்ந்து மதுபான கூடம் அடித்து நொறுக்கப்பட்டது.

சூறையாடியவர்கள் கைது
சம்பவம் தொடர்பாக அருண் பிரகாஷ் எஸ்.எஸ். காலனி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சிலர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளதாகவும் அவர்களுடன் ஒன்று சேர்ந்து எல்லிஸ் நகர் டாஸ்மாக் மதுபான கூடத்தை சூறையாடியது தெரிய வந்தது.

விசாரணை
இதையடுத்து எஸ்.எஸ்.காலனி போலீசார் சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து வந்து போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தியதில் அவர்கள் ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரைச் சேர்ந்த கணேசன், கார்த்திக், அசாருதீன், விக்னேஷ் சுனில் பிரபாகர், சீனிவாசன் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து எஸ்.எஸ். காலனி போலீசார் 5 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
"சுடுகாடு பக்கத்துல டாஸ்மாக் வையுங்க CM சார்!" – விஜய்யிடம் பார்த்திபனின் 'சைக்கலாஜிக்கல்' அஸ்திரம் -
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
தமிழகத்தில் ஏன் கள் விற்கக் கூடாது? டாஸ்மாக்கில் மது விற்கிறீர்களே? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி! -
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
Maridhas: மாரிதாஸ் கைது ஏன்? ஆதவ் உறவினர் ஜான் பிரிட்டோ குறித்து பேசியதுதான் காரணமா? அதிமுக நறுக்! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பாட்டிலுக்கு ரூ.10.. டாஸ்மாக் பிரச்சனைக்கு பத்து நாட்களில் நிரந்தர தீர்வு.. அமைச்சர் விக்னேஷ் உறுதி -
கல்லூரி காதலனுடன் கள்ளக்காதல் + ரூ.1000 கோடி சொத்து.. மகளையே கொன்று நாடகமாடிய பெங்களூர் பெண் -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications