ஆடி அமாவாசை..ஆன்மீக சுற்றுலா செல்ல மதுரை - காசி இடையே உலா ரயில் - கட்டணம் எவ்வளவு
ஆடி அமாவாசையை முன்னிட்டு, மதுரை - காசி இடையே உலா ரயில் என்ற பெயரில் ஆன்மீக சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மதுரையிலிருந்து நேற்று மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டது.
மதுரை : ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை - காசி உலா ரயிலை அமைச்சர்கள் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு, மதுரை - காசி இடையே உலா ரயில் என்ற பெயரில் ஆன்மீக சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மதுரையிலிருந்து நேற்று மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டது. இதை மத்திய நாடாளுமன்ற விவகாரம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ரயில்வே இணை அமைச்சர் தன்வே ராவ்சாஹேப் தாதராவும் காணொலி காட்சி மூலம் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை, எழும்பூர், விஜயவாடா வழியாக காசி சென்றடையும். ஏழு சக்தி பீடங்கள் பாத கயா, நாபி கயா மற்றும் ஆடி அமாவாசை அன்று சிரோ கயாவில் முன்னோர்களுக்கு பித்ரு பூஜை, பூரி ஜெகன்நாதர் கோயில், கொனார்க் சூரியக் கோயில், கொல்கத்தா உள்ளூர் சுற்றுலா, காசி விசுவநாதர், அன்னபூரணி தரிசனம், பின்னர் விஜயவாடா கனகதுர்கா தரிசனத்தோடு சுற்றுலா நிறைவடைகிறது.

சுற்றுலா செல்லும் மொத்த தூரம் 5,548 கிலோமீட்டர் ஆகும். குறைந்த கட்டண பிரிவில் கிலோ மீட்டர் ஒன்றுக்கு ரூ.3.88 கட்டணமாக அமைந்துள்ளது. இந்த 12 நாள் சுற்றுலாவில் நாளொன்றுக்கு ரூ.1,792 கட்டணமாக அமைந்துள்ளது. 560 பயணிகள் பயணம் செய்யும் இந்த சுற்றுலா ரயிலில், 85 சதவீதம் அதாவது 470 பேர் பதிவு செய்துள்ளனர்.
மதுரையில் இருந்து 170 பேர் செல்கின்றனர். சுற்றுலா முடிந்து இந்த ரயில் ஆகஸ்ட் 3ம் தேதி அதிகாலை 5.45 மணிக்கு மதுரை வந்தடைகிறது.மதுரையில் நேற்று நடந்த விழாவில் தெற்கு ரயில்வே முதன்மை வர்த்தக மேலாளர் செந்தில்குமார், முதன்மை ரயில் இயக்க மேலாளர் சிவக்குமார், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அடுத்த சுற்றுலா ரயில் ஆகஸ்ட் 23ம் தேதி மதுரையில் இருந்து ஷீரடி, சனி சிக்னாபூர், த்ரயம்பகேஷ்வர், பஞ்சவடி, பண்டரிபூர், மந்திராலயம் ஆகிய ஆன்மீக தலங்களை இணைத்து ஒரு சுற்றுலா உலா ரயில் இயக்கப்பட இருக்கிறது. செப்டம்பர் 2ஆம் தேதி மதுரையிலிருந்து கோவா, மும்பை, அமிர்தசரஸ் பொற்கோயில், ஜெய்ப்பூர், அஜ்மீர் ஆகிய சுற்றுலா தலங்களை இணைத்து ஒரு சுற்றுலா ரயிலும் இயக்கப்பட இருக்கிறது.
இந்த ரயில்களுக்கு பயணச்சீட்டு பதிவு செய்ய www.ularail.com என்ற இணையதளத்தின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். அல்லது 73058-58585 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications