மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"என்னை தொட்டு பாருங்க".. மாலையுடன் மதுரைக்கு வந்த முருகன்.. "அம்பேத்கர் எல்லோருக்கும் பொதுவானவர்"

அம்பேத்கர் சிலைக்கு எல்.முருகன் மாலை அணிவித்தார்

Google Oneindia Tamil News

மதுரை: "பாஜகவினர் ரொம்பவும் அமைதியானவர்கள்... அதனால்தான் அன்னைக்கு அடிக்கும்போதுகூட அமைதியாக இருந்தார்கள்... திருமாவளவன் தன் கட்சியினரை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்... அம்பேத்கரின் புகழை எடுத்து செல்வதில் பாஜகவினருக்கு நிகர் யாருமில்லை" என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    மதுரையில் Ambedkar Jayanti-யன்று VCK-வினர் செய்தது கண்டிக்கத்தக்கது - L Murugan | Oneindia tamil

    கடந்த 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளன்று மதுரை அவுட் போஸ்டில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு திருமாவளவன் மாலையிட்டு மரியாதை செய்தார்...

    இதையடுத்து, மதுரை மாவட்ட பாஜகவினர் சிலர் மாலை போட வந்தனர்.. அவர்கள் அங்கிருந்த விசிகவினால் தடுத்து நிறுத்தப்பட்டனர்..

     வாக்குவாதம்

    வாக்குவாதம்

    இதனால், 2 தரப்பினரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டன்ர.. பிறகு 2 தரப்பும் மோதிக் கொள்ளும் சூழலும் ஏற்பட்டது. அப்போது, சிலர் தாக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.. இறுதியில், இந்த சம்பவம் தொடர்பாக விசிகவினர் 50 பேர் மீதும், பாஜகவினர் 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

     அறிவிப்பு

    அறிவிப்பு

    நடந்த சம்பவத்தை அறிந்த பாஜக மாநில தலைவர், "அம்பேத்கர் எல்லாருக்குமே பொதுவானவர்... அவர் சிலைக்கு மாலையிட நானே வருவேன்... யார் என்னை தடுக்கறாங்கன்னு பார்க்கிறேன்" என்று அறிவித்தார்.. இதற்காகவே இன்று மாலையுடன் மதுரைக்கு வந்தார்.. ஆனால், முருகன் வந்தால், அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று மதுரை விசிகவினர் ஏற்கனவே சொல்லி இருந்தனர்..

     பேட்டி

    பேட்டி

    இதனால், மறுபடியும் பதட்டம் வந்துவிடுமோ என்று நினைத்த போலீசார், அவுட் போஸ்ட் அம்பேத்கர் சிலை பகுதியில் பலமான போலீஸ் பாதுகாப்பை போட்டனர். மாலையுடன் வந்த முருகன், அம்பேத்கர் பிறந்த நாள் அன்று சிலைக்கு மாலையிட்டார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் சொன்னதாவது:

    பாஜக

    பாஜக

    "பாஜகவினர் ரொம்பவும் அமைதியானவர்கள்... அதனால்தான் அன்னைக்கு அடிக்கும்போதுகூட அமைதியாக இருந்தார்கள். .,.. திருமாவளவன் தன் கட்சியினரை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்... அம்பேத்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது பாஜக ஆட்சியில்தான்... அவரது பிறந்தநாளை எங்களது ஆட்சியில்தான் பொது விடுமுறை என்று அறிவித்துள்ளோம்.. அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் பீம் மொபைல் ஆப் ஒன்றினை அறிமுகம் செய்தோம்... அதனால், அம்பேத்கரின் புகழை எடுத்து செல்வதில் பாஜகவினருக்கு நிகர் யாருமில்லை...

    விசிக

    விசிக

    2 நாட்களுக்கு முன்பு மதுரையில் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவின் போது சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற எங்களது கட்சியினர் மீது விடுதலை சிறுத்தைகளின் குண்டர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

     செல்வாக்கு

    செல்வாக்கு

    விசிக வடமாவட்டங்களில் செல்வாக்கை இழந்ததால்தான் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.. இதை பொறுக்க முடியாத அந்த கட்சியினர் வேண்டுமென்றே எங்களது கட்சி தொண்டர்களை- நிர்வாகிகளை தாக்குகின்றனர். அரக்கோணம் சம்பவத்தை திமுகவும், விசிகவும் சாதி பிரச்சினையாக்க முயல்கிறார்கள்.. அதனால் விசிக மீதான கண்காணிப்பை காவல்துறை தீவிரப்படுத்த வேண்டும்" என்றார்.

    English summary
    BJP L Murugan attacks VCK Thirumavalavan in Madurai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X