மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடியின் குடிமராமத்து திட்டம்.. மழைநீரை சேகரிக்க திமுக அரசு செயல்படுத்துமா? ஆர்பி உதயகுமார்!

Google Oneindia Tamil News

மதுரை: நீர் மேலாண்மை திட்டத்தில் கோட்டைவிட்ட திமுக அரசு தற்போது பருவமழையால் ஏற்படும் மழை நீரை சேகரிக்க, மீண்டும் குடிமராமத்து திட்டத்தை மீண்டும் செயல்படுத்துமா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதிமுதல் தொடங்கியது. அன்று முதல் சென்னை, வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்த தொடர் கனமழையால் திருவள்ளுவர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் தேங்கியுள்ள மழைநீரால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

சொன்ன வேலையைக் கூட ஒழுங்கா முடிக்கலையே? சீறிய எடப்பாடி & கோ! ஓரம் கட்டப்படுகிறாரா ஆர்பி உதயகுமார்? சொன்ன வேலையைக் கூட ஒழுங்கா முடிக்கலையே? சீறிய எடப்பாடி & கோ! ஓரம் கட்டப்படுகிறாரா ஆர்பி உதயகுமார்?

 மழைநீர் சேகரிப்பு

மழைநீர் சேகரிப்பு

இந்த மழை நவம்பர் 5ஆம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த தொடர் மழையால் மழை நீரை திமுக அரசு சரியாக கையாளாததால் மக்கள் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மழைநீர் சேகரிப்பு என்ற தொலைநோக்கு திட்டத்தை கொண்டு வந்தார். இதனை நாடாளுமன்றத்தில் பாரத பிரதமர் பாராட்டினார்.

குடிமராமத்து திட்டம்

குடிமராமத்து திட்டம்

எடப்பாடி பழனிசாமி 2000 ஆண்டுகளுக்கு முன்பாக செயல்பட்ட குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தினார். இதன் மூலம் பாசன கால்வாய், கண்மாய், குளம், ஏரி ஆகியவற்றை தூர்வாரப்பட்டது. ஆனால் இன்றைக்கு திமுக அரசு நீர் மேலாண்மையில் மிகவும் மோசமாக உள்ளது. மழை நீர் எல்லாம் கடலில் கலக்கும் சூழ்நிலை உள்ளது. இது மிகப்பெரிய வேதனையாகும். இந்த நீரை சேமித்தால் நிலத்தடி நீர் உயரும், கோடை காலங்களில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்பெறும்.

நீர் மேலாண்மை திட்டம்

நீர் மேலாண்மை திட்டம்

நீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் நீர் அதிகமான உள்ள இடங்களில் இணைப்பு ஏற்படுத்தி குளங்கள், ஆறுகள், ஏரிகள், ஆகிவற்றை ஏற்படுத்துவது தான் நீர் மேலாண்மை திட்டம் ஆகும். கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில், 1,132 கோடி மதிப்பில், 5,586 நீர் நிலைகள் தூர்வாரப்பட்டன, அதேபோல் பொதுப்பணித்துறை கண்மாய்கள், உள்ளாட்சி கண்மாய்கள் என நீர் ஆதாரங்கள் தூர்வாரப்பட்டன. கோடை காலங்களில் குடிநீர் பற்றாகுறை இல்லாமல் விவசாயிகளும் பயனடைந்தார்கள்.

 ஒரு ரூபாய் செலவிடவில்லை

ஒரு ரூபாய் செலவிடவில்லை

நீர் மேலாண்மையில் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருந்தது, பயிர் சாகுபடியிலும் முதல் இடத்தில் இருந்து. குறிப்பாக 120 அடியில் இருந்த நிலத்தடி நீர் குடிமராமத்து திட்டத்தால் 20 அடியில் தண்ணீர் கிடைத்தது. இந்த குடிமராமத்து திட்டத்திற்கு இந்த நிதிநிலை அறிக்கையில் திமுக அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல் விவசாயிகள் வயிற்றில் அடித்து விட்டனர். குடிமராமத்து திட்டம் என்பது நீர் மேலாண்மைக்கு அடித்தளம் ஆகும்.

கோட்டைவிட்ட திமுக அரசு

கோட்டைவிட்ட திமுக அரசு

தற்போது வடகிழக்கு பருவ மழையால் கூடுதலாக நமக்கு 75 சகவிகிதத்திற்கும் மேல் மழை கிடைக்கும் என்ற தகவல் உள்ளது. ஆனால் திமுக எடுத்த நடவடிக்கை எப்படி பின்விளைவை ஏற்படுத்தப் போகிறது என்று மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஏற்கனவே நீர் மேலாண்மை திட்டத்தில் கோட்டை விட்ட திமுக அரசு தற்போது பருவமழையால் ஏற்படும் மழை நீரை சேகரிக்க, மீண்டும் குடிமராமத்து திட்டத்தை மீண்டும் செயல்படுத்துமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

English summary
Former AIADMK minister RB Udayakumar has questioned whether the DMK government, which has abandoned the water management plan, will now resume the Kudimaramat scheme to collect rainwater from the monsoons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X