மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரையில் அவருக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது?.. புதிர்.. ஸ்டேஜ் 3 நோக்கி செல்கிறதா தமிழகம்.. பின்னணி!

தமிழகத்தில் மதுரையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துள்ளது.

Google Oneindia Tamil News

மதுரை: தமிழகத்தில் மதுரையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துள்ளது. இவருக்கு எப்படி கொரோனா வைரஸ் ஏற்பட்டது என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Recommended Video

    கொரோனா வைரஸ் பற்றிய வதந்திகளும் அதற்கான பதில்களும் | Dr.Aravindha Raj

    தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 3 பேருக்கு தமிழகத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. சென்னையில் புரசைவைக்கத்தில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

    அதேபோல் திருப்பூரில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இவர் கோவையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் இரண்டு பேரும் லண்டன் சென்றுவிட்டு திரும்பியவர்கள்.

    பெரும் பின்னடைவு.. வெளியான புள்ளி விவரம்.. தமிழகத்தில் எத்தனை பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது? பெரும் பின்னடைவு.. வெளியான புள்ளி விவரம்.. தமிழகத்தில் எத்தனை பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது?

    மதுரை நோயாளி

    மதுரை நோயாளி

    அதே சமயம் மதுரையிலும் இன்னொருவருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கிறது. 54 வயது நிரம்பிய இவருக்கு மதுரையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு தீவிரமாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இவருக்கு கொரோனா ஏற்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. பல்வேறு சந்தேகங்களை இந்த நபர் எழுப்பி இருக்கிறார்.

    சந்தேகம் ஏன்?

    சந்தேகம் ஏன்?

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஒரே வகையில் மட்டும்தான் பரவியது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வெளிநாட்டில் இருந்து வந்த நபர்களுக்கு மட்டும்தான் பரவியது. அதாவது சீனாவில் இருந்து ஒரு நபர் தமிழகம் வந்தார் என்றால் அவருக்கு மட்டும்தான் கொரோனா பரவியது. அவரின் உறவினர்களுக்கோ, அவர் சந்தித்த நபர்களுக்கோ கொரோனா வைரஸ் பரவவில்லை.

    முதல் கேஸ்

    முதல் கேஸ்

    ஆனால் தற்போது மதுரையில் கொரோனா வந்திருக்கும் நபர், இதற்கு முன் வெளிநாடு சென்றது இல்லை. இந்த வருட தொடக்கத்தில் இருந்து வெளிமாநிலம் எதற்கும் செல்லவில்லை. 54 வயது நிரம்பிய இவர் வீட்டில்தான் இருந்துள்ளார். மதுரையில் மட்டும் வெளியே தினசரி வேலைகளுக்கு சென்றுள்ளார். ஆனால் இப்படி எந்த விதமான பயண வரலாறும் இல்லாமல் இருக்கும் இவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது.

    எப்படி கொரோனா வந்தது

    எப்படி கொரோனா வந்தது

    இவருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. எந்த விதமான பயணமும் இன்றி இருக்கும் இவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது. கொரோனா பாதித்த நபர்கள் யாரும் இவருக்கு உறவினர்கள் இல்லை. முக்கியமாக கொரோனா அறிகுறி இவரின் உறவினர்கள் யாருக்குமே இல்லை. இவர் ஒருவேளை கொரோனா பாதித்த நபர்களை யாரையாவது பொது வெளியில் சந்தித்து இருக்கலாம்.

    பொது வெளியில் பார்த்து இருப்பார்

    பொது வெளியில் பார்த்து இருப்பார்

    அதாவது கொரோனா பாதித்த நபர்கள் யாரையாவது பொது வெளியில் இவர் சந்தித்தோ, பேசியோ, தொட்டோ இருக்கலாம். அப்படி நடந்து இருந்தால் அவர்கள் மூலம் இவருக்கு கொரோனா பரவி இருக்கலாம். இது தொடர்பாக விசாரிக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் ஸ்டேஜ் 3 கொரோனா பரவல் முறை வந்துவிட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது.

    ஸ்டேஜ் 3 என்றால் என்ன

    ஸ்டேஜ் 3 என்றால் என்ன

    வெளிநாட்டில் இருந்து ஒருவர் கொரோனாவுடன் வந்தால் அது ஸ்டேஜ் 1. அவர் தனது உறவினர்கள், நண்பர்களுக்கு கொரோனாவை பரப்பினால் அது ஸ்டேஜ் 2. அதே வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த நபர் மூலம் அவருக்கு தொடர்பே இல்லாத வேறு ஒரு நபருக்கு கொரோனா பரவினால் அது ஸ்டேஜ் 3.மதுரையில் உள்ள நோயாளி வெளிநாடும் செல்லவில்லை, அவரின் உறவினர்களுக்கும் கொரோனா ஏற்படவில்லை. ஆனால் இவருக்கு கொரோனா வந்துள்ளது. அதனால் இது ஸ்டேஜ் 3 ஆக இருக்குமோ என்று அஞ்சப்படுகிறது.

    English summary
    Coronavirus: How did a Madurai guy get positive? TN reaches Stage 3?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X