ஒரே குறி இதுதான்.. மதுரைக்கு புதிய திட்டங்களா? இதுவரை திமுக என்ன செய்தது? கேட்கிறார் செல்லூர் ராஜூ
மதுரைக்கு திட்டங்களை முதல்வர் அறிவித்தது தேர்தலுக்காக என்று செல்லூர் ராஜு கூறியுள்ளார்
மதுரை: முதல்வர் ஸ்டாலின் மாநகராட்சி தேர்தலுக்காகவே மதுரைக்கு புதிய திட்டங்களை அறிவித்து உள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.. அத்துடன், மதுரைக்கு அறிவித்த திட்டங்களுக்கு எங்கிருந்து நிதி பெறப்பட உள்ளது என்பதையும் முதல்வர் விளக்க வேண்டும் என்றும் செல்லூர் ராஜு கேட்டுள்ளார்..!
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105 வது பிறந்த நாளையொட்டி மதுரை அருள்தாஸ்புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுக கட்சி கொடியேற்றி வைத்தார்..
இனிப்பு மற்றும் உணவுகளையும் வழங்கினார்.. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு சொல்லும்போது:

முதல்வர்
"அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை முதல்வர் நேற்று திறந்து வைத்துள்ளார்... அதிமுக ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பாலங்களை முதல்வர் அறிவிப்பாகவும் வெளியிட்டு இருக்கிறார்.. முதல்வர் அறிவித்த மேலக்கால் சாலையை அகலப்படுத்துவற்கு பதில், வைகை ஆற்றின் கரையோரம் சாலை அமைக்கலாம். முதல்வர் ஸ்டாலின் மாநகராட்சி தேர்தலுக்காக மதுரைக்கு புதிய திட்டங்களை அறிவித்து உள்ளார்.

வளர்ச்சி திட்டங்கள்
மதுரைக்கான வளர்ச்சி திட்டங்களை தற்போதைய திமுக அமைச்சர்கள் அரசிடம் கேட்டு செயல்படுத்த வேண்டும், திமுக ஆட்சி காலத்தில் மதுரையில் முறையாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தவில்லை... மதுரைக்கு முதல்வர் அறிவித்த திட்டங்களுக்கு எங்கிருந்து நிதி பெறப்பட உள்ளது என்பதை விளக்க வேண்டும். எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.. தேர்தலில் மக்கள் தான் எஜமானர்கள், மக்களை நம்பியே அதிமுக தேர்தலை எதிர் கொள்கிறது.

தொலைநோக்கு பார்வை
மதுரையின் வளர்ச்சிக்கு இந்த அரசு என்ன செய்ய போகிறது, என்னென்ன திட்டங்களை கொண்டு வர போகிறது என்பதை விரிவாக எடுத்து சொல்ல வேண்டும்.. மதுரையில் தொலைநோக்கு பார்வையுடன் செய்ய வேண்டும்.. முதல்வர் அறிவித்திருக்கிறார், ஆனால் இது அறிவிப்புடன் நின்றுவிடக்கூடாது.. எந்த நிதியில், எந்த திட்டங்கள் நிறைவேற போகிறது? மத்திய அரசு நிதியை பெற்று நிறைவேற்ற போகிதறா? அல்லது உலக வங்கியில் நிதியை வாங்க போகிறதா? என்பதை விளக்க வேண்டும்.

அம்மா ஆட்சி
மதுரை மாநகராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.. பெண்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் தருவதே அதிமுகதான் நான் மாவட்ட செயலாளர் என்றால், இணை செயலாளர் ஒரு பெண்தான்.. இப்போ எங்கள் கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி, பெண்களுக்கென தனி இடத்தை தந்து வருகிறோம். அம்மா ஆட்சியில் 50 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.. தாலிக்கு தங்கம், தொட்டில் குழந்தை, பாலுட்டும் பெண்களுக்கு தனி அறை., இப்படி எத்தனையோ திட்டங்களை பெண்களை முன்னிலைப்படுத்திதான் அம்மா கொண்டுவந்தாங்க.. அந்த வகையில், எப்போதுமே பெண்களுக்கு அதிமுக முக்கியத்துவம் தரும்" என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications