’டம்மி’ புயலை வலிமையோடு எதிர்கொண்டார்களா? தனக்கு தானே வாழ்த்துப் பா வேறு! விளாசும் ஆர்பி உதயகுமார்!
மதுரை : ஒரு வலுவிழந்த புயலை நாங்கள் வலிமையோடு எதிர்கொண்டோம் என்று வாழ்த்துப் பா பாடுவதுதான் மக்களிடத்திலே ஒரு நகைச்சுவை ஏற்படுத்தி இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையாக இருந்து அதி தீவிர புயலில் இருந்து புயலாக மாறிய மாண்டஸ் ஒன்பதாம் தேதி இரவு ஒன்பது மணிக்கு கரையை கடக்கத் தொடங்கியது. மணிக்கு 50 கிலோமீட்டரில் இருந்து 65 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசியது.
அதோடு சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்த நிலையில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

மாண்டஸ் புயல்
ஆனாலும் மாண்டஸ் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கிய நிலையில் உடனடியாக அவை அகற்றப்பட்டது. இரவு முழுவதும் சுமார் ஒன்பதாயிரம் பணியாளர்கள் புயல் காரணமாக விழுந்த மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தினர். புயலை திமுக அரசு சிறப்பாக கையாண்டதாக தமிழக முதல்வரும், அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இதனை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர்," வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களிலே இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

ஆர்.பி.உதயகுமார்
இன்றைக்கு வலுவிழந்து கடந்த ஒன்பதாம் தேதி அன்று இரவு புதுச்சேரி மாமல்லபுரம் கடற்கரை பகுதி இடையே கரையை கடந்த வலுவிழந்த புயலை வலிமையோடு எதிர்த்தோம் என்று இன்றைக்கு மார்தடடும் முதலமைச்சர், வாயார தன்னைத்தானே புகழ்ந்து கொள்வது, இனி மிகத் தீவிரப்புயல் வந்தால் அதை எப்படி எதிர் கொள்வாரோ என்கிற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. புலவர்களையும் வைத்து ஆதரவு நிலை வாழ்த்து பாடுகிறார். புயல் என்று சொன்னால் அது வலுப்பெற்று அதிதீவிரமடைந்து தொடர்மழை என்கிற நிலையிலே அதை வலிமையோடு எதிர்கொண்டு ஒரு உயிரிழப்பு இல்லாமல், பொருள் சேதமில்லாமல் எதிர்கொள்வது தான் வலிமையான பேரிடர் மேலாண்மையாகும்..

பேரிடர் மேலாண்மை
அறிவு சார்ந்த பேரிடர் மேலாண்மை என்பது ,பேரிடர் வருவதற்கு முன்பாகவும், பேரிடர் எதிர்கொள்வதுபோதும் பேரிடர் வந்த பின்பும் மேற்கொள்கிற பணியாகும். ப்ரி டிசாஸ்டர், டூரிங் டிசாஸ்டர், போஸ்ட் டிசாஸ்டர் ஆகிய அறிவு சார்ந்த அணுகுமுறையில் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு முழுமையான தோல்வியை தழுவி இருக்கிறது. வடகிழக்கு பருவமழை, தொடர் மழை, கன மழை இந்த மழை எதிர்கொள்வதற்கு முன்பாகவே எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கவில்லை. பேரிடரை எதிர்கொள்கிற போது இந்த அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்க தவறியிருக்கிறது

பாதிக்கப்பட்ட விவசாயிகள்
பேரிடர் பின்பு எடுக்க வேண்டிய நிவாரண நடவடிக்கைகளுக்கான உரிய கணக்கெடுப்பு பணிகள் கூட நடைபெறவில்லை, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கண்ணீரோடு இன்றைக்கு காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயிகள் உயிருக்கு உயிராக பயிர்களை வளர்த்தார்கள், அந்த பயிர்கள் எல்லாம் சேதாரம் ஆகி இன்றைக்கு கண்ணீரோடு காட்சி அளிக்கிற அந்த நிலையை இந்த அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், இன்றைக்கு தனக்குத்தானே வாழ்த்துப் பாடுவதே முதல்வர் முக்கியத்துவம் தருகிறார்கள்.அதிலேயே கவனம் செலுத்துகிறார் .

தனக்குத்தானே வாழ்த்து
தனக்குத்தானே வாழ்த்து பா பாடுவதில் யாருக்கும் கவலையில்லை. ஆனால் ஒரு வலுவிழந்த புயலை நாங்கள் வலிமையோடு எதிர்கொண்டோம் என்று வாழ்த்தபா பாடுவதுதான் மக்களிடத்திலே ஒரு நகைச்சுவை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே இது அறிவு சார்ந்த அணுகு முறையில் இந்த அரசு எடுத்த நடவடிக்கைகளை நாம் பட்டியலிட்டு ஒப்பிட்டு பார்க்கிற போது அது மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை தரவில்லை என்பதுதான் உண்மை நிலவரம் ஆகவே இனி வருகிற வடகிழக்கு பருவமழை நிலவரத்தை கலவரம் இல்லாமல் எதிர்கொள்வதற்கு இந்த அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி!












Click it and Unblock the Notifications