கள்ளழகர் கோவில் நிலத்தை ரூ.34 கோடிக்கு விலை பேசிய பாஜக நிர்வாகி..கைது செய்த விருதுநகர் போலீஸ்
மதுரை: கள்ளழகர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ரூ. 34 கோடிக்கு விற்பதாக மோசடி செய்த கொடைக்கானல் பாஜக நகர தலைவர் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையில் பதுங்கியிருந்த பாஜக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்தனர்
விருதுநகர் சூலக்கரை மேடு வீரப்பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாயகி. இவரது தம்பி சூரியநாராயணன். சிங்கப்பூரில் தொழில் செய்கிறார்.
தம்பி அனுப்பும் பணத்தில் இரண்டு இடங்கள் வாங்கினார். ரங்கநாயகியை அவரது சகோதரரான வீர பாண்டியனை 2020ஆம் ஆண்டில் பத்மநாபன் என்பவர் சந்தித்தார் ஓய்வு பெற்ற நீதிபதி என்று கூறினார்.
உணவு துறை அதிகாரிகள் சூப்பர் ஹீரோ அல்ல.. சதீஷ்குமார் சினிமாவில் நடிக்கலாம்.. ஹைகோர்ட் குட்டு

ரியல் எஸ்டேட் தொழில்
ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும், மதுரை வண்டியூரில் 12 ஏக்கர் 70 சென்ட் நிலம் ஸ்ரீநாச்சாரம்மாள் அறக்கட்டளைக்கு சொந்தமானதாக உள்ளதாகவும் அதன் நிர்வாகிகளான குழந்தை செல்வம், சந்திரன் தனக்கு பவர் எழுதி கொடுத்திருப்பதாகவும் கூறி அந்த நிலத்தை வாங்கிக்கொள்ள ஆசை காட்டினார். உடனே ரங்கநாயகி அறக்கட்டளை நிர்வாகிகளை அழைத்து வாருங்கள் என்று ரெங்கநாயகி கூறினார்.

ரூ.70 லட்சம் அட்வான்ஸ்
2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரங்கநாயகியிடம் பத்மநாபன் மகன் சதீஷ், சுமதி, அங்குராஜ், சந்திரன், செல்வம் ஆகியோர் சொத்தில் வில்லங்கம் இல்லை என்று கூறி சந்தித்தனர். ரூ.50 அட்வான்ஸ் பெற்றனர். சில நாட்கள் கழித்து நிலத்தை கிரயம் செய்வதற்காக ரங்கநாயகியிடம் சதிஷ் மற்றும் அவரது தந்தை பத்மநாபன் உள்ளிட்டோர் ரூ.20 லட்சம் என மொத்தம் 70 லட்சம் ரூபாய் பெற்றனர்.

மோசடி நிலம்
பாஜக நிர்வாகி உள்ளிட்டோர் விற்பனை செய்வதாக கூறிய நில ஆவணங்களை ஆய்வு செய்தபோது அது மதுரை கள்ளழகர் கோயிலுக்கு சொந்தமானது என தெரியவந்தது. கோயில் நிலம் என தெரிய வந்ததை அடுத்து முன்பணமாக கொடுத்த ரூ. 70 லட்சம் பணத்தை திருப்பி தரும்படி ரங்கநாயகி கேட்டுள்ளார்.

மிரட்டல்
பணத்தை திருப்பி தர மறுத்த பாஜக நிர்வாகியின் தந்தையான பத்மநாபன் தான் ஓய்வுபெற்ற நீதிபதி என்று கூறி மிரட்டியுள்ளார். பணத்தை திருப்பி தர மறுத்ததால் பத்மநாபன் , சதீஷ்குமார், சுமதி, அங்குராஜ், சந்திரன், குழந்தை செல்வம் ஆகியோர் மீது ரங்கநாயகி போலீசில் புகார் அளித்துள்ளார்.

பாஜக நிர்வாகி கைது
விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கொடுக்கப்பட்ட புகாரில் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 6 பேரும் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரினார். முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மதுரையில் பதுங்கியிருந்த பாஜக நிர்வாகியான சதீஷ்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.