• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சேலம் 8 வழிச்சாலை குறித்த கேள்வி.. சேலத்துக்காரராக கோபப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

|
  சேலம் 8 வழிச்சாலை குறித்த கேள்வி.. சேலத்துக்காரராக கோபப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி-வீடியோ

  மதுரை: சேலம் எட்டுவழிச்சாலையால் என்னென்ன நன்மைகள் என்பதை பட்டியல் போட்டு பேசிய முதல்வர் பழனிச்சாமி, இந்த திட்டத்தை நிறைவேற்றினால் 70கிலோமீட்டர் பயண தூரம் சென்னைக்கு குறையும் என்றும் எரிபொருள் மிச்சமாகும் என்றும் கூறினார்.

  மதுரையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் பழனிச்சாமி கூறுகையில், " தமிழகத்தில் நடைபெறுகின்ற காவல்நிலைய மரணங்கள் ஆணவ படுகொலைகளும் எந்த ஆட்சியாக இருந்தாலும் நடைபெறத்தான் செய்கிறது. இதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் அரசு எடுத்துக் கொண்டு வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  நீட் தேர்வை பொருத்தவரை ஏற்கனவே 2010 -ல் திமுக காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போது தான் இந்த நீட் தேர்வு நோட்டிபிகேஷன் போடப்பட்டது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் பொழுது திமுக தமிழகத்தில் ஆட்சி செய்யும் போது தான் நீட் தேர்வு வந்தது. மக்களிடையே எதிர்ப்பு வந்த காரணத்தினால் அந்த பழியை எங்கள் மேல் திருப்பி விடுகிறார்கள் அவ்வளவுதான், தூங்குபவர்களை எழுப்பிவிடலாம் தூங்குவது போன்று நடிப்பவர்களை எழுப்ப முடியாது

  என்னப்பா இது கர்நாடகாவுக்கு எல்லாமே 'படுபாஸ்ட்'..... தமிழகத்துக்கு மட்டும் 'அட்லாஸ்ட்'

   தினகரனுக்கு செல்வாக்கு இல்லை

  தினகரனுக்கு செல்வாக்கு இல்லை

  தேர்தல் முடிவு தெளிவாக தெரிந்து விட்டது டிடிவி தினகரனுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்று அவரே தெரிந்து கொண்டார். அதனால் வேலூர் தேர்தலிலிருந்து வெளியேறி விட்டார்.

   தாழ்த்தப்பட்ட சமுதாயம்

  தாழ்த்தப்பட்ட சமுதாயம்

  அதிமுகவிற்கு மூன்று இடங்கள் மாநிலங்களவையில் உள்ளன தேர்தல் உடன்படிக்கையின்படி பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு இடம் வழங்கிவிட்டோம். மேலும் இரண்டு இடம் உள்ளது 2 இடத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் உள்ளவருக்கு வழங்கியிருக்கின்றோம். அதே போல் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவருக்கும் இந்த பதவியை கொடுத்திருக்கின்றோம்.

  ஒகேனலுக்கு மேல்

  ஒகேனலுக்கு மேல்

  ஒகேனக்கலுக்கு மேலே மேகேதாட்டு அணை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கர்நாடகா கட்டக்கூடாது 15 ஆண்டுகளுக்கு மேல் முறையீடு செய்ய கூடாது என்று தீர்ப்பில் உள்ளது. எந்த அணையையும் கட்டக்கூடாது வருகின்ற தண்ணீரை தடுத்து வேறு பக்கம் திருப்ப கூடாது எனவே அங்கு அணை கட்ட இயலாது" இவ்வாறு கூறினார்.

  சேலத்துக்கு போடவில்லை

  சேலத்துக்கு போடவில்லை

  இதனிடையே சேலம் எட்டு வழி சாலை யை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் நிதின் கட்காரியை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், "சேலம் எட்டு வழி சாலை எந்த ஒரு பணியும் நடக்கவில்லை. இது மத்திய அரசின் திட்டம். மாநில அரசின் திட்டம் அல்ல. பலமுறை ஊடகம் வாயிலாக தெரிவித்துள்ளேன். இது மத்திய அரசினுடைய திட்டம். இந்த விரைவுச்சாலை கோயமுத்தூர், திருப்பூர், நாமக்கல், கரூர், ஈரோடு, சேலம் அதற்குப் பிறகு கேரளா கொச்சி வரை இந்த சாலை செல்கிறது. ஏதோ சேலத்துக்கு வருவதை போல பேசி வருகிறார்கள். சேலத்திற்காக இந்த சாலை அமைக்கப் படவில்லை. சேலத்தின் வழியாக செல்கிறது.

  70 கி.மீ எரிபொருள் மிச்சம்

  70 கி.மீ எரிபொருள் மிச்சம்

  சேலத்தில் இருந்து சென்னை வரை ஒரு 70 கிலோ மீட்டர் தூரம் மிச்சப்படுகிறது. 70 கிலோமீட்டர் செல்வது என்றால் இதன் மூலம் எவ்வளவு எரிபொருள் மிச்சம் ஆகிறது. அது மட்டுமல்லாமல் விபத்தில்லாமல் ஒரு சாலை அமைக்கப்பட உள்ளது. 19 ஆண்டு காலத்தில் போக்குவரத்து அதிகமாகி உள்ளது. அதே போல் மூன்று மடங்கு வாகனங்கள் அதிகரித்து விட்டது. அந்த மூன்று மடங்கு வாகனங்கள் அதிகரித்த காரணத்தினால் அந்த வாகனங்கள் செல்லக்கூடிய சாலைகள் அமைத்து கொடுப்பது அரசின் கடமையாகும். ஏனென்றால் உயிர் சேதம் அதிகமாக ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. உயிர் சேதத்தை தடுப்பதற்காகவும் விபத்தை தடுப்பதற்காகவும் விரைந்து செல்வதற்காகவும் எரிபொருளை மிச்சப்படுத்தவும் இந்த சாலை அவசியம்.

  புதிய தொழில்கள் வரும்

  புதிய தொழில்கள் வரும்

  அதுமட்டுமில்லாமல் சுற்றுச்சூழலை பாதுகாப்பது 70 கிலோமீட்டர் சென்றால் டீசல், பெட்ரோல் வருகின்ற புகை காற்று எவ்வளவு மாசுபடும் என்பது உங்களுக்கு தெரியும்.இதன் காரணத்தை கொண்டுதான் மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முன் வந்தது. இந்த பசுமை வழிச் சாலையை தமிழகத்தில் உருவாகின்ற சூழ்நிலை அது மட்டுமல்லாமல், இன்றைய தினம் மத்திய அரசு ராணுவத்திற்கு உதிரிபாகம் ராணுவ தளவாடங்கள் அந்த உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலைகள் எல்லாம் அமைப்பதாக தெரிவித்தார்கள். புதிய தொழில்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உட்கட்டமைப்பு சிறப்பாக அமைந்து இருந்தால் தான் என்று வெளிநாட்டில் வெளிமாநிலங்களில் இருந்து அதிகமாக தொழில் முதலீடு செய்ய வருவார்கள் நிலம் அடிப்படை கொண்டுதான் சாலை மத்திய அரசு அமைக்கிறது.

  அப்போது நிலத்தை பிடுங்கவில்லையா

  அப்போது நிலத்தை பிடுங்கவில்லையா

  இதை பல பேர் எதிர்க்கின்றனர். இதே திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் 734 கிலோமீட்டர் சாலையை டி ஆர் பாலு மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது போட்டார்கள் அப்போது எல்லாம் நிலத்தை மக்களிடத்தில் இருந்து எடுக்கவில்லையா? இப்போது அதிமுக அரசு தமிழகத்தில் ஆட்சி செய்கிறது மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வருகிறது அப்போது மத்தியில் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் விவசாயிகள் நிலத்தை எடுத்து சாலை போடவில்லையா? வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த திட்டம் வரக்கூடாது என்று இந்த திட்டம் வந்தால் அதிமுக அரசுக்கு நற்பெயர் கிடைக்கும் என்ற தவறான நோக்கத்துடன் தான் இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள் இந்த திட்டத்தில் இருக்கின்ற நில எடுப்பு கூட விவசாயிகளுக்கு தேவையான அளவு இழப்பீடு கொடுக்கப்படுகிறது.

  நிலங்களுக்கு நல்ல விலை

  நிலங்களுக்கு நல்ல விலை

  கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் விவசாயிகளிடமிருந்து சாலைகள் தேவையான இடத்தை கையகப்படுத்துகிறது ஒரு வீடு கட்டி இருந்தால்கூட அதற்கு குறைந்த மதிப்பிலான தொகையை கொடுத்தார்கள் இப்போது அவ்வாறு இல்லை ஆயிரம் அடியில் வீடு கட்டி இருந்தால் பத்து வருடத்திற்கு முன்பு கட்டி இருந்தால்கூட இப்பொழுது ஆயிரம் சதுர அடிக்கு என்ன செலவாகிறது அந்த தொகையை கொடுக்கப்படுகிறது.

  ஒரு ஏக்கரக்கு 38 லட்சம்

  ஒரு ஏக்கரக்கு 38 லட்சம்

  அதுமட்டுமல்லாமல் 50 சென்ட் 40 சென்ட் ஒரு ஏக்கர் கீழே உள்ள நிலத்திற்கு அவர்களுக்கு தேவையான பத்து சென்ட் இடத்தை கொடுத்து அரசாங்கம் வீடு கட்டித் தருகிறது இழப்பீட்டுத் தொகையும் தருகிறது கடந்த காலத்தில் இழப்பீடு தொகை குறைவாக இருந்தது இப்போது புதிய இழப்பீடு சட்டத்தின் வாயிலாக கிட்டத்தட்ட மூன்று மடங்கு கூடுதலாக கொடுக்கின்றோம் இவ்வளவு வசதிகள் கிடைக்கின்றன கடந்த காலத்தில் தென்னை மாமரத்திற்கு குறைந்த மதிப்பீடு கொடுப்பார்கள் இப்பொழுது ஒரு தென்னை மரத்திற்கு 15 ஆண்டுகள் ஆன மரத்திற்கு 35,000 முதல் 40,000 வழங்கப்படுகிறது ஒரு ஏக்கருக்கு 70 மரங்கள் என்றால் 38 லட்சம் ரூபாய் கிடைக்கிறது

  மாட்டு கொட்டகைக்கு இழப்பீடு

  மாட்டு கொட்டகைக்கு இழப்பீடு

  அது போக இடத்திற்கு பணம் தரப்படுகிறது விவசாய பம்பு செட் அமைத்து இருந்தால் இலவசமாக மின்சாரம் புதிய இடத்தில் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. போர்வெல் போடுவதற்கான பணமும் கொடுக்கப்படுகிறது அதுபோக இழப்பீட்டுத் தொகையும் கொடுக்கப்படுகிறது மாட்டு கொட்டகை அமைத்து இருந்தால் அதனுடைய இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது எந்த வகையிலும் விவசாயம் பாதிக்கக்கூடாது என்பதற்காக இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.

  இன்று பல முட்டுக்கட்டைகள் வந்து கொண்டு இருக்கிறது அதை மத்திய அரசு சந்திக்கிறது" என்றார்.

  நிச்சயமாக வெற்றி

  நிச்சயமாக வெற்றி

  வேலூர் தொகுதி வெற்றி வாய்ப்பு பற்றிய செய்தியாளர்கள் எழுப்பி கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் பழனிச்சாமி, வேலூரில் அனைத்து அதிமுக சார்பாக கூட்டணி கட்சிகளை சேர்ந்த சண்முகம் போட்டியிடுகின்றார் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்றார்.

  யாருக்கம் பாதிப்பில்லை

  யாருக்கம் பாதிப்பில்லை

  மத்திய பட்ஜெட்டில் பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்துகின்ற பெட்ரோல் மற்றும் தங்கம் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது பற்றிய கேள்விக்கு, முதல்வர் பழனிச்சாமி, "தங்கத்தை யார் பயன்படுத்துகிறார்கள் என்று நமக்கு தெரியும் . இதை எவ்வாறு கேள்வி கேட்கிறீர்கள் என்று புரியவில்லை இது பெரிய அளவில் பாதிக்கவில்லை. 2.5 சதவீதம் தான் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தங்கம் வாங்குபவர்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். அந்த அளவு வசதி வாய்ப்பு இருப்பவர்கள் தான் தங்கத்தை வாங்குகிறார்கள் தங்கத்தை வாங்க முடியாத அடித்தட்டில் வாழ்கின்ற மக்களுக்கு மத்திய அரசு என்ன செய்கிறது என்பதை தான் பார்க்க வேண்டும் தவிர மாநில அரசும் தெரியும் மத்திய அரசும் சரி ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட என்று கடைக்கோடியில் இருக்கின்ற மக்களுக்கு எண்ணங்களை பூர்த்தி செய்வதுதான் எங்கள் லட்சியம். அந்த இலட்சியத்தின் அடிப்படையில் தான் அதிமுக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Tamil Nadu cm palanisamy explain, how many benefits for salem chennai 8 way road, Reduce the distance to 70 kilometers from chennai to salem.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more