பாஜகவில் இணைந்த ஓராண்டிலேயே விலகிய மதுரை சரவணன்! மீண்டும் திமுகவில் ஐக்கியமா? முழுபின்னணி
மதுரை: மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவராக இருந்த டாக்டர் சரவணன் கட்சியில் இருந்து விலகுவதாக திடீரென்று அறிவித்துள்ளார். இவர் மீண்டும் திமுகவில் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவராக செயல்பட்டு வந்தவர் டாக்டர் சரவணன். இவர் மதுரையில் மருத்துவமனை நடத்தி வரும் நிலையில் பாஜகவில் கடந்த ஆண்டு இணைந்து செயல்பட துவங்கினார்.
இந்நிலையில் தான் நேற்று மதுரையில் நடந்த சம்பவத்தால் அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் ஒரு கட்சியில் இருந்து விலகுவதை கடந்த காலத்திலும் செய்துள்ளார். அதுபற்றிய முழுவிபரம் வருமாறு:

பாஜகவில் விலகுவதாக அறிவித்த சரவணன்
அதாவது காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த ராணுவவீரர் லட்சுமணனுக்கு விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பாஜகவினருக்கும் இடையே லேசான மனஸ்தாபம் வந்தது. இதையடுத்து பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இரவு பழனிவேல் தியாகராஜனை அவரது வீட்டில் சந்தித்த டாக்டர் சரவணன் மன்னிப்பு கோரினார். அதன்பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

மதிமுக, பாஜக, திமுகவில் ஐக்கியம்
இந்நிலையில் தான் இவர் பாஜகவில் சேர்ந்து ஓராண்டு மட்டுமே கடந்த நிலையில் அதில் இருந்து விலகி உள்ளார். அதாவது டாக்டர் சரவணன் மதிமுகவில் செயல்பட்டு வந்தார். மதிமுக மதுரை புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்த இவர் கடந்த 2015ல் பாஜகவில் இணைந்தார். அதன்பிறகு 2016ல் முகஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுகவின் மருத்துவ அணியின் துணை தலைவராக செயல்பட்டு வந்தார்

திமுகவில் எம்எல்ஏவான சரவணன்
2017ல் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் அதிமுகவின் ஏகே போஸ் வெற்றி பெற்றார். ஆனால் அவர் காலமானதால் மீண்டும் 2019ல் தேர்தல் நடந்தது. இதில் திமுக சார்பில் போட்டியிட்டு டாக்டர் சரவணன் வெற்றி பெற்றார். திருப்பரங்குன்றம் தொகுதியை அதிமுக கண்டுக்கொள்ளாததால் அதன்பிறகு அவர் தனது சொந்த நிதியை செலவழித்து திருப்பரங்குன்றம் தொகுதியில் நலத்திட்டங்களை செய்தார். குறிப்பாக கொரோனா சமயத்தில் உதவிகள் செய்தார்.

சீட் மறுப்பால் பாஜகவுக்கு தாவினார்
இந்நிலையில் தான் கடந்த ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி திமுகவின் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் சரவணனுக்கு அந்த தொகுதியில் சீட் மறுக்கப்பட்டது. இதனால் அவர் கடும் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து சட்டசபை தேர்தலுக்கு முன்பாக திமுகவில் இருந்து விலகிய அவர் மீண்டும் பாஜகவில் இணைந்தார். கட்சியில் இணைந்த அடுத்த சில மணிநேரத்தில் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட டாக்டர் சரவணனுக்கு பாஜகவில் சீட் வழங்கப்பட்டது. இருப்பினும் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.

மீண்டும் திமுகவில் ஐக்கியமா?
அதன்பிறகு கட்சி பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். இருப்பினும் சரவணன் நீண்டநாள் பாஜகவில் நீடிக்க மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் இன்று திடீரென்று சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் இன்று பாஜக தலைவரிடம் வழங்க உள்ளார். பாஜகவில் இருந்து விலகிய சரவணன் மீண்டும் திமுகவில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
Election: இதுவரை 651 கோடி பறிமுதல்.. தமிழ்நாட்டில் ரூ.170 கோடி சிக்கியது.. தேர்தல் ஆணையம் தகவல் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்!












Click it and Unblock the Notifications