EXCLUSIVE: அதிமுகவில் மாவட்ட செயலாளர் பதவி? எடப்பாடி தலைமையில் சேர என்ன காரணம்? மதுரை சரவணன் பளீச்!
மதுரை : மதுரை மாவட்டத்தில் பிரபல மருத்துவராகவும் அரசியல்வாதியாகவும் இருக்கும் டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகிய நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஐக்கியமாகி இருப்பது மதுரை அரசியலில் பரபரப்பை கூட்டி இருக்கிறது. அதிமுகவில் சேர்ந்தது ஏன் என்பது குறித்து ஒன் இந்தியா தமிழுக்கு அவர் பிரத்தியேக பேட்டி அளித்திருக்கிறார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவரான டாக்டர் சரவணன் தற்போது எடப்பாடி தரப்பில் ஐக்கியமாகி இருக்கிறார். திமுகவில் சேரப் போவதாக யூகங்கள் எழுந்த நிலையில் அதிமுகவில் இணைந்தது குறிப்பாக எடப்பாடி தரப்பில் இணைந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மருத்துவராக இருந்த போதும் திடீரென சினிமாவில் நுழைந்து பரபரப்பை பற்ற வைத்த சரவணன் அதன் பிறகு மதிமுகவில் வைகோ முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார் நான் ஏன் மதிமுக வானில் என அப்போது மேடையில் அவர் பேசியது பலரையும் கவனிக்க வைத்தது.

டாக்டர் சரவணன்
அதைத்தொடர்ந்து திமுகவில் இணைந்த அவர் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் 2021 சட்டமன்ற தேர்தலில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை இதனால் திமுகவில் இருந்து விலகிய வேகத்திலேயே பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் அதை தொடர்ந்து நான்கு மணி நேரத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டதோடு அதன் பிறகு பாஜக மாவட்ட தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

யூகங்கள்
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அவரது காரில் செருப்பு வீசி தாக்கப்பட்டது. இதை அடுத்து அன்றிரவே பழனிவேல் தியாகராஜனை சந்தித்து மன்னிப்பு கோரிய சரவணன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதே நேரத்தில் அண்ணாமலையும் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அதிரடி காட்டினார். இதைஅடுத்து சரவணன் திமுகவில் இணையப் போவதாக யுகங்கள் கிளம்பின.

விளக்கம்
ஆனால் அதுபோன்று எந்த நிகழ்வுகளும் நடைபெறவில்லை அவரது மகன் திருமணத்தில் அனைவருக்கும் வரவேற்பு கொடுத்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவில் இணைய போவதாகவும் யூகங்கள் கிளம்பின. ஆனால் ஜனவரி மாதத்தில் முடிவை அறிவிப்பேன் என ஏற்கனவே ஒன் இந்தியா தமிழிடம் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் கடந்த நான்காம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் சரவணன். எடப்பாடி தரப்பில் இணைய காரணம் என்ன என்பது குறித்து தற்போது அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் பேசிய அவர்,"திமுகவில் இருந்து நான் விலகி நான்கு மாதங்கள் ஆகியிருந்த நிலையில் மிக நீண்ட ஆலோசனைக்குப் பிறகும் சிந்தனைக்கு பிறகும் அதிமுகவில் இணைந்து இருக்கிறேன். காரணம் அதிமுக சாமானிய மக்களுக்கான கட்சி. எடப்பாடி பழனிச்சாமி அடிப்படையில் எதார்த்தமான மனிதர். யார் வேண்டுமானாலும் அவரை சந்திக்கலாம். நான் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தபோது சட்டசபையில் அவருடைய நடவடிக்கைகளை பார்த்து ஆச்சரியம் அடைந்திருக்கிறேன். எதற்கும் எளிமையாக அதே நேரத்தில் விரிவாக பதில் சொல்லக்கூடிய அவரது திறமையை பார்த்து வியந்து இருக்கிறேன். அரசியல்வாதியாக அவரது நடவடிக்கைகள் என்னை ஈர்த்திருக்கிறது.

மருத்துவத்துறை சாதனைகள்
நான் ஒரு மருத்துவர் என்ற முறையில் மருத்துவ ரீதியாகவும் அவர் பல சாதனைகளை செய்திருக்கிறார் என்பதை உணர்ந்திருக்கிறேன். கொரோனா காலத்தில் தற்காலிகமாக செவிலியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தாலும் அவர்களது பணி ஈடு செய்ய முடியாதது. தற்போது பணி நிரந்தர கோரிக்கையுடன் அவர்கள் போராடி வருகிறார்கள். அம்மா மினி கிளினிக் திட்டம் மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது. ஆனால் அதனை மாற்றி விட்டு இல்லம் தேடி மருத்துவம் என்ற திமுகவின் திட்டமும் செயல்பட முடியாமல் போனது. மருத்துவ கட்டமைப்புகளை வலிமைப்படுத்தியது, நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்கள் ஆரம்பித்து ஒரு லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தது, அது மட்டும் இல்லாமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றிய எடப்பாடி பழனிச்சாமியின் சாதனைகள் மிக அதிகம்.

திமுக திணறுகிறது
மருத்துவக் கல்லூரிகள் மூலம் பொது மக்களுக்கு மாணவர்களுக்கும் ஈடு செய்ய முடியாத சாதனைகளை செய்திருக்கிறார். மருத்துவக் கல்லூரிகளில் கட்டமைப்பை வலுப்படுத்தியது. புற்றுநோய் சிகிச்சைக்கு மருத்துவ கட்டமைப்புகளை அதிகரித்ததோடு லீனியர் ஆக்சிலேட்டர் என்ற மருத்துவ உபகரணங்களை அதிகம் பெற்று கொடுத்தார் ஒரு இயந்திரத்தின் விலை மட்டும் ஆறு கோடி ரூபாய் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போதைய அரசாங்கம் திணறுகிறது. மருத்துவ சேவைகளும் மருந்துகளும் கிடைக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். அந்த வகையில் மருத்துவ துறையில் பல்வேறு சாதனைகளைச் சென்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் இணைய வேண்டும் என்பது எனது திட்டமாக இருந்தது. அதனால் தான் அவர் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்து இருக்கிறேன்.

மாவட்ட செயலாளர் பதவி?
ஏற்கனவே பாஜகவில் மாவட்ட தலைவராக இருந்தீர்கள் தற்போது அதிமுகவில் மாவட்ட செயலாளராக நீங்கள் நியமனம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது உண்மையா? என்ற கேள்விக்கு பதில் அளித்த டாக்டர் சரவணன்," ஏற்கனவே அரசியல் பயணத்தோடு சமூக சேவை செய்ததால் தமிழ்நாடு முழுவதும் அறிந்த நபராக நான் இருக்கிறேன். அதிமுகவில் எந்தவிதமான கோரிக்கைகளுடன் நான் இணையவில்லை. எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து அதிமுகவில் இணைந்து இருக்கிறேன் என்னை பொறுத்தவரை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் எனது எண்ணம்.

மூன்று ஜாம்பவான்கள்
நான் இருக்கும் இயக்கத்துக்கு உண்மையாக உழைப்பேன். அது அனைவரும் அறிந்தது தான். பல்வேறு தலைவர்களும் இதனை மேடைகளில் கூறியிருக்கிறார்கள். எந்த கட்சியில் இருக்கிறாரோ டாக்டர் அந்த கட்சிக்காக முழுமூச்சுடன் செயல்படுவார் என பல தலைவர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் அதிமுகவுக்காக முழு மூச்சுடன் நான் செயல்படுவேன். எடப்பாடியாரின் கருத்தை வலுப்படுத்தும் வகையில் மதுரையில் இருக்கும் மூன்று ஜாம்பவான்கள் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா ஆகியோர் ஆலோசனை பெற்று மதுரை மாவட்டத்தில் அதிமுகவுக்காக எனது பணி இருக்கும்.

என்ன காரணம்?
அதிமுகவில் இணைந்தது ஒருபுறம் இருந்தாலும் எடப்பாடி அணையில் ஏன் இணைய வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்," அதிமுக என்ற கட்சி எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கையில் தான் இருக்கிறது. உண்மையான அதிமுக அவர் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அதன் காரணமாகவே அவர் அணியில் இணைந்தேன்" என பேசினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications