மணக்கும் மல்லிகை விலை.. ஒரு கிலோ ரூ.3000 ஆயிரத்தை தொட்டது. பிற பூக்களின் விலையும் விண்ணை தொட்டது
மதுரை: ஓணம், தொடர்ந்து வரும் முகூர்த்த தினம் தொடர்ந்து பெய்து வரும் மழை ஆகியவற்றால் தென்மாவட்டங்களில் உள்ள மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை அதிகரித்து வருகின்றன. அதிகபட்சமாக ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3000யை தொட்டுள்ளது.
முகூர்த்த தினம், விழாக்காலங்களில் பொதுவாக பூக்களின் விலை அதிகரிக்கும். மேலும் வரத்து குறைந்து தேவை அதிகரித்தாலும் பூக்களின் விலை என்பது எகிறும்.
தற்போது விநாயகர் சதுர்த்தி, ஓணம், தொடர்ந்து வரும் முகூர்த்த தினம் உள்ளிட்டவை ஒருசேர வந்துள்ளன. இதனால் பூக்களின் விலை கடந்த ஒருவாரமாக அதிகரித்து வருகின்றன.

பூக்களின் விலை உயர்வு
இந்நிலையில் தான் தற்போது ஓணம், முகூர்த்த தினம் மற்றும் கனமழையின் காரணமாக மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பூக்களின் விலை அதிகரித்துள்ளன. இதற்கு மழையின் அளவு அதிகரித்து, தொடர்ந்து வரும் முகூர்த்த தினங்கள் தான் காரணமாக உள்ளன. அதன்படி நாளையில் இருந்து 3 நாட்கள் இன்னும் பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ரூ.3000க்கு விற்கும் மல்லிகை
இந்நிலையில் தான் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் அனைத்து வகையான பூக்களின் விலையும் உயர்ந்துள்ளன. அதன்படி விநாயகர் சதுர்த்தியையொட்டி ரூ.1,800க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று உச்சம் தொட்டுள்ளது. அதன்படி மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.3000யை எட்டியுள்ளது. விநாயகர் சதுர்த்தியை ஒப்பிடும்போது இது ரூ.1,2000 அதிகமாகும்.

பிற பூக்களின் விலை
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் ரூ.50க்கு விற்ற பட்டன் ரோஸ் ரூ.250க்கும், ரூ.30க்கு விற்பனையான அரளி பூ ரூ.250க்கும், ரூ.300க்கு விற்பனையான பிச்சி, முல்லை பூக்கள் தற்போது ரூ.1000க்கு விற்பனையாகின்ற. மேலும் ரூ.50க்கு விற்ற சம்மங்கி பூ என்பது தற்போது ரூ.250க்கு விற்பனையாகிறது. இதேபோல் பிற பூக்களின் விலையும் உச்சம் தொட்டுள்ளன.

தோவாளை
இதேபோல் பிரசித்திப்பெற்ற தோவாளை மார்க்கெட்டிலும் பூக்களின் விலை என்பது கடுமையாக உயர்ந்துள்ளது. இங்கு ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3000 வரையும், பிச்சிப்பூ ரூ.1,300 வரையும், கனகாம்பரம் ரூ.1,500 வரையும் விற்பனையாகிறது. அரளிப்பூ ரூ.150 முதல் ரூ.200 வரையும், முல்லைப்பூ ரூ.1000 முதல் ரூ.1250 வரையும், சம்பங்கி ரூ.125, வாடாமல்லி ரூ.200 வரையும் விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications